சிறீலங்கா இராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட பெண் போராளிகள் புற்றுநோயால் இறப்பது ஏன்? திடுக்கிடும் தகவல்...!
படையினரால் பிடிக்கப்பட்ட பெண் போராளிகள் புற்றுநோயால் இறப்பது ஏன்? விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்த பின்னர் சிறீலங்கா இராணுவத்தினரால் விடுதலைசெய்யப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய முன்னாள் போராளிகள் பலர் அண்மைக்காலமாக பல வகைப்பட்ட நோய்களினால் இறந்து வருகின்றனர்.
இதுவரையிலும் ஏறத்தாள 100 இற்கு மேற்பட்ட போராளிகள் இறந்துள்ளதாக தாயகத்து தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் பெரும்பாலானவர்கள் புற்றுநோயினால் பாதிப்படைந்தே இறந்துள்ளனர்.
இவர்களில் விடுதலைப்புலிகளின் முன்னாள் மகளிர் பிரிவு அரசியல் தலைவர் தமிழினி மற்றும் இனந்தெரியாத நோயினால் இறந்த தமிழரசன் ரோகினி ஆகியோரும் அடக்கம்.
இந்த போராளிகளின் இறப்பு என்பது தமிழினத்திற்கு மிகப்பெரும் இழப்பு என்பதைவிட மிகப்பெரும் அவமானமாகும் ஏனெனில் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடிய அற்புத மனிதர்கள் இன்று அனாதைகளாக இறக்கின்றனர்.
எனினும் இந்த நோய்களை சிறீலங்கா அரசும் அதன் கைக்கூலியான இந்திய உளவுத்துறையும் இணைந்தே போராளிகள் மத்தியில் பரப்பி வருவதாக தகவல்கள் உண்டு. இந்த தகவல் உண்மையானதா அவ்வாறாயின் புற்றுநோயை திட்டமிட்டு உருவாக்க முடியுமா? என்பதே தற்போதைய மில்லியன் டொலர் கேள்வி.
இதற்கான ஒரு வரி பதில் ஆம் என்பதேயாகும். எவ்வாறு என்பதற்கு நான் இங்கு சில சான்றுகளை முன்வைப்பதே உகந்தது.
இதன் அண்மைய உதாரணம் அலக்ஸ்சாண்டர் லிற்வினஸ்கோ ((Alexander Litvinenko) என்பவரே. ரஸ்யா உளவுத்துறையின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவின் அதிகாரிகளினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட புற்றுநோயினால் இவர் 2006 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் இறந்துபோனார்.
இவரை ஏன் படுகொலை செய்தனர்? முன்னர் ரஸ்யாவின் புலனாய்வுத்துறையின் (Federal Security Service (FSB) and KGB) அதிகாரியாக இவர் பணியாற்றியிருந்தார். ரஸ்யாவின் அரச தலைவர் விளமிடீர் பூட்டினுடன் இணைந்து செயற்பட்ட லிற்வினஸ்கோ அங்கிருந்து தப்பியோடி பிரித்தானியாவில் தஞ்சமடைந்ததுடன், பிரித்தானியாவின் உளவுத்துறையினருக்கு தகவல்களை வழங்கும் நபராகவும் மாறியிருந்தார்.
அதற்காக பிரித்தானியா அரசு அவருக்கு வீட்டு வசதிகளையும், மாதம்தோறும் 2500 ஸ்ரேலிங் பவுண்ஸ்களையும் வழங்கி வந்ததாக அவரின் மனைவி பிரித்தானியா ஊடகத்திங்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.
பூட்டின் மீதான மேற்குலகத்தின் சேறடிக்கும் பணிகளுக்கு லிற்வினஸ்கோ பல உதவிகளை வழங்கியிருந்தார். அதாவது பூட்டினின் பல இரகசியத் தகவல்களை அவர் வழங்கியதுடன், பூட்டினின் ஊழல் தொடர்பாக புத்தகம் ஒன்றை எழுதுதற்கும் ஆயத்தங்களை மேற்கொண்டிருந்தார். இதுவே ரஸ்யாவை அதிக சினம் கொள்ள வைத்தது.
ரஸ்யாவின் உளவுத்துறையை சேர்ந்த இருவர் போலோனியம்-210 (Polonium-210) என்னும் புற்றுநோயை உண்டாக்கும் கதிர்வீச்சுக் கொண்ட இராசாயனப் பொருளுடன் பிரித்தானியாவுக்குள் நுளைந்தனர். லிற்வினஸ்கோவுடன் நட்பை ஏற்படுத்தினர். ரஸ்யா தொடர்பான பல இரகசியத் தகவல்களை அவருக்கு வழங்கினர். அவரின் நம்பிக்கையை பெற்ற பின்னர் விருந்து ஒன்றிற்கு மிலேனியம் ஆடம்பர விடுதிக்கு அழைத்துச் சென்றனர்.
விருந்தின் போது அவர் அருந்திய கிறீன் தேனீரில் தாம் கொண்டு வந்த போலோனிம்-210 இராசாயனத்தை கலந்து விட்டனர். அதன் பின்னர் அவர்கள் ரஸ்யாவுக்கு புறப்பட்டு சென்றுவிட்டனர். ஒரு வாரத்திற்குள் தலைமுடி எல்லாம் கொட்டப்பட்;டு உடல்முழுவதும் பலவீனமாக இனம்தெரியாத நோயினால் லிற்வினஸ்கோ பாதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு புற்றுநோய் என கண்டறியப்பட்டபோது புற்றுநோய் அவரின் பல அங்கங்களுக்கு பரவியிருந்தது. தனது இறப்பை தெரிந்தவாறே மிகுந்த உடல்வேதனையுடன் லிற்வினஸ்கோ 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மரணத்தை தழுவியிருந்தார்.
அதன் பின்னர் விழித்தெழுந்த பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்துயாட் காவல்துறை வந்தவர்கள் தங்கிய விடுதி, அவர்கள் பயணித்த விமானம், அவர்கள் விருந்து உண்ட விடுதி ஆகியவற்றில் போலோனியம்-210 இன் கதிர்வீச்சுக்களை கண்டறிந்து சாட்சியங்களை சேகரித்தனர். 2014 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையில் ரஸ்யாவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் இந்த விடயம் மிகப்பெரும் இராஜதந்திரப் போராக உருப்பொற்றிருந்தது. ஆனால் பின்னர் அது அடங்கிவிட்டது.
ஒரு சிறு தூசி அளவு போலோனியம் புற்றுநோயை உருவாக்கப்போதுமானது. ஏன் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே புற்றுநோயை ஒருவருக்கு உருவாக்க முடியும் அதற்கு அதிக தொழில்நுட்பம் தேவையில்லை. ஆனால் அதனை நான் இங்கு கூறவிரும்பவில்லை. அது மட்டுமல்லாது ஒருவரை எவ்வளவு காலத்திற்கு பின்னர் அல்லது முன்னர் சாகடிக்க வேண்டும் என்பதையும் பல்வேறு இரசாயனப்பொருட்களை கொண்டு தீர்மானிக்க முடியும்.
நான் பிரித்தானியாவின் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள கார்டிப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுத்துறை விஞ்ஞானியாக பணியாற்றிய காலத்தில் மனிதனின் மூளையில் உள்ள பிரச்சனைகளை (புற்றுநோயாக இருந்தாலும்) கண்டறிவதற்குரிய எம்.ஆர்.ஐ ஸ்கானிங் எடுப்பதற்கு முன்னர் மூளைக்குள் செலுத்தும் இரசாயனப்பொருள் (contrast agent)) தொடர்பான ஆய்வை மேற்கொண்டிருந்தேன்.
நாங்கள் உருவாக்கும் இரசாயணப் பொருட்களை உயிரியல் பீடத்திற்கு அனுப்புவோம் அவர்கள் அதனை எலி மற்றும் முயல் போன்ற மிருகங்களில் பரிசோதனை செய்வதுண்டு. அவ்வாறு செய்வதற்கு முன்னர் எலிகளுக்கும், முயல்களுக்கும் செயற்கையாகவே புற்றுநோய்களை உருவாக்குவதுண்டு.
இதில் என்ன சிறப்பு என்றால் எந்த பகுதியில் புற்றுநோய்களை உருவாக்க வேண்டும் என தெரிவு செய்து உருவாக்க முடியும்.
எனவே புற்றுநோயினால் மரணமடையும் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதை இங்கு மறுக்க முடியாது. இதனை தடுப்பது எவ்வாறு அல்லது அவர்களை காப்பாற்றுவது எவ்வாறு என்பது தொடர்பான பணிகளை நாம் முன்னெடுக்க வேண்டும். இதனை உலகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும்.
ஒரு லிற்வினஸ்கோவின் மரணத்தை பெரும் இராஜ தந்திரப்போராக மாற்றியது பிரித்தானியா ஆனால் நாம் பல போராளிகளை இழந்த பின்னரும் ஒன்றும் செய்ய முடியவில்லை. பெண்ணிய ஆய்வாளர் பரணி கிருஸ்ண ரஜனி தனது தொடர் ஆய்வு களில் தெரிவித்துவருவது போல முதலில் நாம் புனர்வாழ்வு என்ற பெயரில் வதை முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட போராளிகளின் உடல்நிலை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான செயல்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.
புலம்பெயர் தேசத்து அமைப்புக்களிடம் அதற்கு தேவையான நிதி வளம் உள்ளது. அதனை அவர்கள் சரியான நோக்கத்திற்கு பயன்படுத்த வேண்டும். வாழும் போராளிகளை காப்பாற்ற வேண்டும் ஏனெனில் அழிக்கப்பட்ட எமது சரித்திரத்தில் எஞ்சியுள்ள சாட்சிகளும், சரித்திரமும் அவர்கள் மட்டும் தான்.
தமிழர் குரல்