விநாயகர் சிலையின் வகைகளும்... அவற்றை வைக்க வேண்டிய திசைகளும் ۞

வாஸ்து சாஸ்த்திரத்தின் படி, பல வகைகளான பொருட்களை கொண்டு விநாயகர் சிலை செய்யப்படுகிறது. அவை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதமாக கையாள வேண்டும். அதில் முக்கியமான ஒன்று அவைகளை வைக்க வேண்டிய திசை, வைக்க கூடாத திசை.


வெள்ளி விநாயகர் சிலை

உங்களுக்கு புகழையும் விளம்பரத்தையும் தேடி தரும் வெள்ளியால் செய்த விநாயகர் சிலை. உங்களிடம் வெள்ளியில் செய்த விநாயகர் சிலை இருந்தால், அதனை தென் கிழக்கு, மேற்கு அல்லது வட மேற்கு திசையில் வைக்கவும். வாஸ்த்து சாஸ்த்திரத்தின் படி, இந்த சிலையை தெற்கு அல்லது தென் மேற்கு திசைகளில் வைக்க கூடாது.

தாமிர விநாயகர் சிலை

தாமிர விநாயகர் சிலையை வீட்டில் வைத்தால் சந்ததியை விரும்புபவர்களுக்கு நல்லதாகும். தாமிர விநாயகர் சிலையை கிழக்கு அல்லது தென் திசையில் வைக்கவும். இந்த சிலைகளை தென் மேற்கு மற்றும் வட மேற்கு திசைகளை கண்டிப்பாக வைக்ககூடாது.

மர விநாயகர் சிலை

சந்தனக்கட்டை உட்பட, மரத்தினால் செய்யப்பட விநாயகர் சிலைகள் பல பயன்களை அளிக்கிறது. நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் வெற்றியை விரும்புபவர்கள் இவ்வகையான சிலையை வழிபடலாம். இவ்வகை சிலையை வடக்கு, வட கிழக்கு அல்லது கிழக்கு திசைகளில் வைக்கவும். இந்த சிலைகளை தென் கிழக்கு திசையில் வைக்க கூடாது.



களிமண் விநாயகர்

களிமண் விநாயகராலும் கூட பல பயன்கள் உள்ளது. களிமண் சிலைகளை வணங்குவதால் வெற்றி, நல்ல ஆரோக்கியம் கிடைத்து , தடைகள் நீங்கும். இருப்பினும் இந்த களிமண் சிலைகளை வடக்கு திசையில் உள்ளே வைக்க கூடாது. இவைகளை தென் மேற்கு திசையில் தான் வைக்க வேண்டும்.

வெண்கல விநாயகர்

வெண்கலத்தில் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வீட்டில் வளமை மற்றும் சந்தோஷத்தை அளிக்கும். இந்த வெண்கல விநாயகர் சிலைகளை கிழக்கு, தெற்கு அல்லது மேற்கு திசைகளில் வைக்க வேண்டும். அதே நேரம், இவைகளை வட கிழக்கு அல்லது வடமேற்கு திசைகளில் வைக்க கூடாது.

                                                                                                                     நன்றி:
                                                                                                                    Written by: Ashok CR
                                                                                                                    போல்ட் ஸ்கை