பிரான்ஸில் மீண்டுமொரு பயங்கர கனரக வாகன தாக்குதல்: 77 பேர் பலி

பிரான்ஸ் நகரான நைஸின் கடற்கரைப்பிராந்தியத்தில்14.07.2016 இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
பிரான்ஸின் நைஸ் பிராந்தியத்தில் பொதுமக்கள் மீது ட்ரக் வண்டி மோதியதில் 77 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
பஸ்டைல் கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மிக வேகமாக ட்ரக்கை செலுத்திய சாரதி மக்கள் கூட்டத்திற்குள் ட்ரக்கை செலுத்தி பொது மக்களை கொலை செய்துள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
தாக்குதல் நடத்திய சாரதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன் தாக்குதலின் பின்னணியில் பயங்கரவாதிகள் செயற்படக்கூடும் எனவும் அவதானம் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற இந்த தாக்குதலில் 77 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 100 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு வைத்திய வட்டாரங்கரளை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய சாரதியை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வாகன சாரதி கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பயங்கரவாதிகளின் தாக்குதலாக இது அமையலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதுடன் வாகனத்தின் சாரதி இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
பிரான்ஸின் மத்திய நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் இத்தாலிய எல்லையும் மூடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான தாக்குதல் நடத்தப்படுவதற்கான அறிகுறிகள் ஏதும் புலப்படவில்லை என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும் முழுமையான தகவல்கள்.....
 
நேற்று(14.07.2016), பிரான்சின் சகல பகுதிகளிலும் தேசிய தின கொண்டாட்டங்கள் இடம்பெற்றது. nice பகுதியில் இடம்பெற்ற வாணவேடிக்கைகளை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடியிருந்தார்கள். அப்போது இரவு 11.30 மணிக்கு, யாரும் எதிர்பார்த்திராத வேளையில், கூடத்தினருக்குள் கனரக வாகனம் ஒன்று நுழைந்து, மக்களை இடித்து தள்ளிக்கொண்டு சென்றது. இதன்போது 80 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் மிக மோசமாக பாதிக்கப்பட்டு Nice மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
மிக நெருக்கமாக இருந்த பொதுமக்களிடையே வாகனம் நுழைததால் பொதுமக்கள் சிதறி ஓடினார்கள். மேலும் இரண்டு கிலோமீட்டர்கள் நீளத்துக்கு வாகனம் கூட்டத்தினரை இடித்து தள்ளியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கனரக வாகனத்தை செலுத்தி வந்தவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 
Nice நகர முதல்வர் Christian Estrosi தெரிவிக்கும் போது, கூட்டத்தினர் மீது வானகத்தை மோதச்செய்து விட்டு, தொடர்ந்து துப்பாக்கியால் பொதுமக்களை சுட்டு கொன்றிருக்கிறான். அதன் போது 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், கனரக சாரதி எதிர் தாக்குதல் நடத்தியதில் காவல்துறையை சேர்ந்த உயரதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்!' என தெரிவித்துள்ளார். 
தாக்குதலுக்கு பல தேச தலைவர்கள் கண்டணங்களையும், தாக்குதலில் இறந்தவர்களுக்கு இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் தேசிய தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி பிரான்சுவா ஓலாந்தும், பிரதமர் மனுவல் வால்சும் கலந்துகொண்டிருந்தனர். சம்பவத்தை தொடர்ந்து ஜனாதிபதி பிரான்சுவா ஓலாந்து, அதிகாலை 1.30 மணிக்கு அவசரமாக பரிஸ் அழைத்து வரப்பட்டார். அதை தொடர்ந்து, இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு அவசர கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார் ஜனாதிபதி. 
Nice நகர மக்களுக்கு, வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதை தொடர்ந்து, சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், Safety Check வசதியினை Nice பகுதிக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் உறவினர்கள் பாதுகாப்பாக உள்ளார்களா என அறிந்துகொள்ள முடியும். 
வாகனத்தை செலுத்தி வந்த சாரதி, 31 வயதுடைய Tunisian குடியுரிமை கொண்டவர் எனவும், Nice பகுதியில் வசித்து வருபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாரதி குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய நபரை காவல்துறையினர் ஏற்கனவே நன்கு அறிவர் என பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஏலவே காவல்துறையினர் போலி துப்பாக்கி வைத்திருத குற்றத்துக்காக விசாரிக்கப்பட்டிருந்தார் என BFMTV வெளியிட்டுள்ள செய்தியில் இருந்து அறிய முடிகிறது. 
மேலும், சற்று முன்னர் அவசர காலச்சட்டம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பிரான்சுவா ஓலாந்து தெரிவித்துள்ளார். அறிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும், சம்பவம் இடம்பெற்ற Promenade des Anglais பகுதி போர்க்களம் போல் காட்சியளித்து வருகிறது. அப்பகுதி முழுவதும் தடை விதிக்கப்பட்டு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஆங்காங்கே சிதறி கிடக்கும் உடல்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.

நன்றி:
தமிழில்: பரிஸ்தமிழ்.கொம்.
NEWS PHOTOS & VIDEO SOURCE: http://www.nydailynews.com/news/world/truck-crashes-crowd-bastille-day-celebration-france-article-1.2712028