கிளிநொச்சியில் மோட்டார்சைக்கிளில் ஒருபக்கமாக இருந்து பயணிக்க தடை என கிளிநொச்சி போலீசார் தெரிவித்துள்ளனர்
மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணிக்கும் இருபாலாரும் இரண்டு பக்கங்களும் கால்களை வைத்தவாறே பயணிக்க வேண்டும் எனவும் மோட்டர்சைக்கிளில் ஒருபக்கமாக இருந்து பயணிப்பதால் பின்னால் இருந்து பயணிப்பவர் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் விழுவதற்கு நேர்ந்தால் வாகன சாரதியும் வாகனமும் விழுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக இருப்பதாகவும் இதனால் பல விபத்துக்கள் நடைபெறுவதாகவும் போக்குவரத்து சட்டத்தின் பிரகாரம் இக் குற்றத்திற்கு பொலிசாரால் தண்டப்பணம் அறவிட முடியாது எனவும் இக் குற்றங்கள் நீதிமன்றத்திற்கே அனுப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
எனவே அனைவருக்கும் முதல் தடவை மன்னிப்பு வழங்குவதாகவும் மீண்டும் இவ்வாறு நடக்கும் பட்சத்தில் நீதிமன்றத்திற்கு குற்றம் அனுப்பப்படும் என சாரத்திகளுக்கு கிளிநொச்சி போக்குவரத்து பிரிவு பொலிசார் தெரிவித்துள்ளனர்
இது தொடர்பாக கிளிநொச்சி போக்குவரத்து போலிஸ் பிரிவை தொடர்பு கொண்டு வினவிய பொழுது இவ்வாறு சட்டத்தில் இடமிருப்பதாகவும் ஆனால் மேலதிக தகவல்களை ஊடகங்களுக்கு வழங்குவதற்கு தங்களுக்கு அனுமதி இல்லை என கூறி தகவலை தர மறுத்துள்ளனர்