பிரான்சில் கனமழை எச்சரிக்கை- பல பிரதேசங்கள் வெள்ளம் சூழ்ந்துள்ளது

பிரான்சின் காலநிலை, பிரான்சின் பல மாவட்டங்களை, மழை வெள்ளத்திற்குள் புரட்டிப் போட்டுள்ளது. பல நீர்த்தேக்கங்கள், மற்றும், ஆறுகள், உடைப்பெடுக்கக் கூடிய ஆபத்துக்கள் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளன.

L'Yonne endeuillée et inondée est toujours sous... by BFMTV  Loing நதி வெள்ளப்பெருக்கெடுத்து ஓடக்கூடிய அபாயம் உள்ளதென, Le Loiret பகுதிக்குக் கடும் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இங்கு பெருமளவான வீதிகள் வெள்ளப்பெருக்கினால் முற்றாகத் தடைப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 500 மீட்பு நடவடிக்கைகளைத் தீயணைப்புப் படையினர் நேற்றிலிருந்து மேற்கொண்டு வருகின்றனர். பல பகுதிகளிற்குக் கப்பல்களில் மட்டுமே செல்லக்கூடிய அளவிற்கு வீதிகள் நீரினால் மூடப்பட்டுள்ளன.
CENTRE பிராந்தியத்தில் உள்ள  ஓர்லியோன் நகரத்தில் மட்டும், கடந்த 48 மணிநேரம் பெய்த மழையினால், ஒரு மீற்றரிற்கும் மேலான அளவு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்தும் Centreஇலுள்ள Cher, Eure-et-Loir, Indre, Indre-et-Loire, Loir-et-Cher ஆகிய மாவட்டங்களுடன் Haute-Normandie மற்றும் பரிசையும் அதன் புறநகர்ப்பகுதிகளையும் உள்ளடக்கிய இல்-து-பிரான்சிலும் (Ile-de-France),ஆகியவற்றிற்கு பெரும் காற்றுடன் கூடிய பெருமழைக்கான, செஞ்சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இது தவிர 43 மாவட்டங்கள் மஞ்சள் எச்சரிக்கைக்குள் உட்படுத்தப்பட்டுள்ளன.