வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாத்திர மகோற்சவ தேர்த்திருவிழா, இன்று ஞாயிற்றுக்கிழமை (19) காலை இடம்பெற்றது.
காலை 7 மணியளவில் ஆரம்பமான வசந்த மண்டபபூஜையை அடுத்து பிள்ளையார் முருகன் சமேதரராய் உள் வீதியுலா வந்த நாகபூசணி அம்மன், காலை 8.30க்கு தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
இன்றைய தேர்த் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளிள் அருளாசியைப் பெற்றனர். நாட்டின் பலபகுதிகளிலிருந்தும் நயினை நாகபூஷணி அம்மனைத் தரிசிக்க அடியார்கள் திரண்டிருந்தனர்.
பக்தர்களின் போக்குவரத்து வசதி கருதி இ.போ.ச. விசேட பஸ்சேவைகளை நடத்தியது. அத்துடன் விசேட படகுச் சேவையும் இடம்பெற்றது.
(விரைவில் காணொளி மற்றும் மேலதிக புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.)

நன்றி