றிசாட் - சத்தியலிங்கம் கள்ள டீல்!!!

றிசாட் - சத்தியலிங்கம் கள்ள டீல்! மத்திய அமைச்சர் றிசாட் எள் என்றதும் மாகாண அமைச்சர் சத்தியலிங்கம் எண்ணெய்யாய் ஒழுகுகின்றார் !!!

முதலமைச்சருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் பிரதான ஏற்பாட்டாளராக அமைச்சர் ப.சத்தியலிங்கம்!

முருங்கன் - கிளிநொச்சி விவசாய பண்ணைகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருந்தபோது, வடபகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு அத்தியாவசியமான உற்பத்தி பொருள்களையும் - விரிவாக்கல் தொழில்நுட்பங்களையும் வினைத்திறனுடன் வழங்கியதும், 

வடபகுதியில் விவசாய உயர் தொழில்நுட்ப டிப்ளோமா மாணவர்களுக்கு படிப்பின்போது செயல்முறை பயிற்சிகளை வழங்கி வருவதுமாகிய ஒரேயொரு பண்ணையாகிய வவுனியா (தாண்டிக்குளம்) விவசாய பண்ணையை, 

நீண்டகால சுற்றாடல் பாரம்பரிய பண்பாட்டு (கிராமிய) உணவு உற்பத்தி பாதுகாப்பையும், இன்று வடபகுதியில் சீவிப்பவர்கள் மட்டுமல்ல அவர்களது எதிர்கால சந்ததிகள் கூட ஈட்டு பொருளாதாரத்தில் தங்கியிராமல் தன்னிறைவு பொருளாதாரத்தில் தளையெடுக்கவேண்டும் என்பதையும் கவனத்தில்கொண்டு, 

‘சிறப்பு பொருளாதார வலயம்’ அமைக்க ஒதுக்கித்தரமுடியாது என்றும், மாற்றுக்காணி ஒழுங்குகள் செய்து தரப்படும் என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கூறிவிட்டார். முதலமைச்சரின் இதே நிலைப்பாட்டிலேயே வடக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசனும், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும், அவரது கட்சியை சார்ந்த வடக்கு மாகாணசபை உறுப்பினர்களும் உள்ளனர்.

உண்மையில் இது நிறைந்த சமுக அக்கறையோடும், மக்கள் நலன் - தேசவளப்பாதுகாப்பு தூரநோக்கு சிந்தனையோடும் எடுக்கப்பட்ட மிகச்சிறந்த முடிவுதான்!

ஆனால் இந்த விடையத்தில் மதில் மேல் பூனையாகவே செல்வம் அடைக்கலநாதன் பா.உ இருக்க விரும்புகின்றார். மாறாக வடக்கு மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் ப.சத்தியலிங்கமும், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனும் ‘குறித்த திட்டத்தை சுற்றிச்சுற்றி புத்தியை ஓட்டாமல் முதலமைச்சரை குறிவைத்து அவருக்கு எதிராக அறிக்கைகள் விடுவதையே ‘சிறப்பு பொருளாதார வலயம்’ அமைக்கும் விடையத்தில் தமது வகிபாகமாகக்கொண்டு செயல்பட்டு வருவதையும், சாந்தி சிறீஸ்கந்தராசா பா.உ மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் பா.உ இருவரும் இந்த விடையம் தொடர்பில் பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. 

வவுனியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களில் ஒருவராகிய ஜி.ரி.லிங்கநாதனோ, இந்த விடையத்தில் தனக்கு என்று தனது சுயபுத்தியின் பெயரால் தெளிவானதொரு முடிவை எடுத்துக்கொள்ளாமல், முதலமைச்சருக்கு எதிரான நிலைப்பாட்டை யார் யார் எடுக்கிறார்களோ, அவர்களுக்கு ஜால்ரா போடுவதையே ‘சிறப்பு பொருளாதார வலயம்’ அமைக்கும் விடையத்தில் தனது தலையாய கடமையாக்கொண்டும் செயல்பட்டு வருகின்றார்.

வவுனியா மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தனது சேவைக்காலத்தில், குறித்த ‘சிறப்பு பொருளாதார வலயம்’ அமைக்க ஓமந்தை மாணிக்கவளவு அரச காணியை பரிந்துரைத்திருந்தார். 

அவர் பரிந்துரைத்த அந்த காணிக்கு அண்மித்த பகுதியில் தற்போது ஏறத்தாழ நாற்பது ஏக்கர்கள் அளவில் சுவீகரித்து, வாகனங்கள் - இயந்திரங்களின் கைவிடப்பட்ட அல்லது பழுதடைந்த மின்பற்றரிகளிலிருந்து (ஈயம் நாகம்) உலோகங்கள் பிரித்தெடுக்கும் சொந்த கம்பனி ஒன்றை அமைத்து அமைச்சர் றிசாட் பதியூதீன் தனது தனிப்பட்ட பிசினஸ் ஆக நடத்திவருவதால், ‘சிறப்பு பொருளாதார வலயம்’ ஓமந்தை மாணிக்கவளவில் அமையப்பெறுவதை அவர் எள்ளளவேனும் விரும்பவில்லை.

தனது பிசினஸ் கம்பனிக்காக தான் ஆக்கிரமித்துள்ள காணிகள் மீளப்பெறப்படலாம் எனும் கலக்கமும், சுற்றுச்சூழலுக்கும் மண்வளத்துக்கும் நிலத்தடி நீர் பாதுகாப்புக்கும் (அசிட் அமிலம் நிலத்தில் ஊற்றப்படுகின்றது) உத்தரவாதம் இல்லாமல் இயங்கிவரும் அவரது பிசினஸ் கம்பனி சீல் வைக்கப்படலாம் என்ற அச்சமும், அமைச்சர் றிசாட்டை பிடித்து பலமாக உலுப்பிக்கொண்டிருப்பதால், அவர் எப்பாடுபட்டேனும் - யாரை மசக்கியேனும் - கொமிசன் கொடுத்தேனும் வவுனியா (தாண்டிக்குளம்) விவசாய பண்ணைக்காணியை தாரை வார்த்துவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கின்றார். 

அதற்காக அவர் தேடிக்கண்டு கடைந்தெடுத்த அரும்பெரும்அன்னச்சொத்து தான் அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆவார். மத்திய அமைச்சர் றிசாட் எள் என்றதும் மாகாண அமைச்சர் சத்தியலிங்கம் எண்ணெய்யாய் வடிந்து ஒழுகுகின்றார்.  

இந்தநிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களை மக்கள் நலன் விரோதியாக குறிப்பாக வவுனியா மாவட்ட வாழ் மக்களுக்கு பரமவைரியாக சித்திரிப்பதற்காக, சிறீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக்கட்சி, றிசாட்டின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, இலங்கை தமிழரசுக்கட்சி இந்நான்கு கட்சிகளினதும் வவுனியா மாவட்ட பிரதிநிதிகள், ஆதரவாளர்களை ஒன்று திரட்டி முதலமைச்சருக்கு எதிராக அவதூறு கண்டனப்போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு அமைச்சர் ப.சத்தியலிங்கம் திட்டமிட்டுள்ளார். 

ஆர்ப்பாட்டத்துக்கான ஒழுங்கமைப்புக்கூட்டம் நேற்று (05.05.2016) வவுனியாவில் நடைபெற்றது. அமைச்சர் சத்தியலிங்கம் சார்பில் அவரது தம்பியும் பிரத்தியேக செயலாளருமாகிய ப.சத்தியசீலன், ரெலோ கட்சியின் சார்பில் நந்தன், மற்றும் புளொட், சிறீ ரெலோ, றிசாட்டின் கட்சிகளின் பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். 

வவுனியா (தாண்டிக்குளம்) விவசாய பண்ணைக்காணியில் ‘சிறப்பு பொருளாதார வலயம்’ அமைக்கப்படுவதால் ஏற்படப்போகும் பிரதிகூலங்கள் தொடர்பில், துறைசார் நிபுணர்கள் குழு தயாரித்துள்ள அறிக்கையை சாதாரண பொதுமக்களுக்கும் - வர்த்தகப்பெரு மக்களுக்கும் பகிரங்கப்படுத்தி அதுதொடர்பில் விளக்கமளிக்காமல், 

முதலமைச்சருக்கு எதிராக சில பொதுஅமைப்புகளையும் மூளைச்சலவை செய்துகொண்டு நாளை (07.05.2016) நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டத்தின் பிரதான ஏற்பாட்டாளராக அமைச்சர் ப.சத்தியலிங்கம் உள்ளார்.

‘சிறப்பு பொருளாதார வலயம்’ அமைக்கும் விடையத்தில், அமைச்சர் றிசாட் பதியூதினோ, தனது சமுகத்தின் நலனையும் - தனது பிசினஸ் கம்பனியின் இலாபத்தையும் மட்டுமே நோக்கமாகக்கொண்டு தொழில்படுகின்றார்.

அமைச்சர் ப.சத்தியலிங்கமோ, சமுக அக்கறை - மக்கள் நலன் - தேசவளப்பாதுகாப்பு தூரநோக்கு சிந்தனை’ இவை எவையுமே இல்லாமல், கூலிக்கு மட்டும் நல்லாவே மாரடிக்கின்றார்.

சிறப்புச்செய்தியாளர்,
-கவரிமான்-