களனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு: அண்மித்திருப்பவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை

களனி ஆற்றின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது.
நாகலகம் வீதியிலுள்ள நீர்மட்ட அளவீட்டு மானியில் 07 மீற்றர் உயரத்திற்கு நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

களனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு: அண்மித்திருப்பவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கைஇது பாரிய வௌ்ள நிலைமைக்கான அறிகுறி என கொழும்பு பிராந்தியத்திற்கான நீர்ப்பாசன பொறியியலாளர் ஜீ.கே. பத்மகீர்த்தி தெரிவித்தார்.






களனி ஆற்றை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளிலுள்ளவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் நீர்ப்பாசன பொறியியலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.


இலங்கையில் பெய்துவரும் தொடர் கனமழைக்கு 28 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு கிழக்கு, தென் இலங்கை, மத்திய மலைநாட்டுப் பகுதி, வடமேற்கு மாகாணம் போன்ற பகுதிகளில் க‌ன மழை காரணமாக கடும் நிலச்சரிவும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மலையகப் பிரதேசங்களான கண்டி, கேகாலை, கடுகன்னாவை, கம்பளை, ஹட்டன், நுவரெலியா, உள்ளிட்ட பல பகுதிகளில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவினால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு, ரத்தினபுரி, காலி,புத்தளம், குருநாகல் , யாழ்ப்பாணம், போன்ற பகுதிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 81 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மூன்றரை லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு, மழைவெள்ளப் பாதிப்பினால் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.


நன்றி: முதன்மை செய்தி சக்தி