கடந்த மூன்று நாட்களாகப் பெய்த மழை காரணமாக வட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 5371 குடும்பங்களைச் சேர்ந்த 11,982 பேர்
பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்
பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களில் 1192 பேர் 12 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஏனையவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் 1884 குடும்பங்களைச் சேர்ந்த 6625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 856 பேர் 11 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ரியாஸ் குறிப்பிட்டார்.
வவுனியா மாவட்டத்தில் நிலவிய மழையுடனான வானிலையினால் 1130 குடும்பங்களைச் சேர்ந்த 4442 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 18 குடும்பங்களைச் சேர்தவர்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட இடர் முகாமைத்துவ பணிப்பாளர் பி.சூரியராஜ் குறிப்பிட்டார்.
இதனிடையே முல்லைத்தீவு மாவட்டத்திலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் 68 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இரண்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கூறினார்.
மேலும் புத்தளம் மாவட்டத்தில் சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்டவர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
போக்குவரத்து வசதிகள் ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில், கடற்படையினரின் உவியுடன் பயணிகள் படகுச் சேவை முன்னெடுக்கப்படுவதாகவும் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
மழையினால் 2860 குடும்பங்களைச் சேர்ந்த 11500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி: முதன்மை செய்தி சக்தி