4தமிழ்மீடியா மூலம் யாழ்ப்பாணம் வாசகர்களுக்காக, சென்ற ஆண்டுகளில் துல்லியமான பலன்களைக் கணித்து, தங்களின் நம்பியைக் பெற்றுக் கொண்ட,
பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள், ஸ்ரீ துர்முகி வருஷப் பிறப்பின் பலன்களை, கணித்து எழுதியுள்ளார். அவரது விரிவான ஜோதிட பலன்களை இங்கே காணலாம்.
நிகழும் மங்களகரமான 1191ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீ மன்மத வருஷம் உத்தராயணம் சசி ரிது பங்குனி மாதம் 31ம் தேதி - 13-04-2016 புதன்கிழமை சுக்லபக்ஷ சப்தமி திருவாதிரை நக்ஷத்ரம் 4ம் பாதம் அதிகண்ட நாமயோகம் பத்ரை கரணம் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி மாலை மணி 6.30க்கு துலா லக்னத்தில் ஸ்ரீதுர்முகி ஆண்டு பிறக்கிறது.
ஆண்டு பிறக்கக் கூடிய நேரத்தில் லக்னத்திற்கு தனஸ்தானத்தில் செவ்வாய் சனியும், பூர்வ புண்ணியஸ்தானத்தில் கேதுவும் ரண ருண ஸ்தானத்தில் லக்னாதிபதி சுக்கிரனும், சப்தம ஸ்தானத்தில் சூரியன் புதன், பாக்கியஸ்தானத்தில் சந்திரனும் லாபஸ்தானத்தில் குரு ராகு என நவகிரகங்கள் வலம் வருகிறார்கள்.
பொதுப் பலன்கள்:
பொதுவில் உலகளவில் அரசு சார்ந்த விஷயங்களில் சிறிது பிரச்சனைகள் தலைதூக்கலாம். அரசாங்கம் ஒவ்வொரு முடிவையும் தவறாக எடுப்பதும் அதற்கு பரிகாரமாக மேல் மட்டத்தில் இருக்கும் அதிகாரிகள் அதை சரி செய்வதுமாக இருக்கும். நாடுகளுக்குள் மோதல்கள் வரலாம். இவ்வருடம் வெப்பம் அதிகமாக இருக்கும்.
பணநடமாட்டம் சீராக இருக்கும். கல்வி சார்ந்த விஷயங்களில் தொய்வு ஏற்படும். அதே வேளையில் குரு கேது சம பார்வையால் ஆன்மீகம் மிக அதிகமான வளர்ச்சி காணும். பூமி நிலம் சம்பந்தாமான பிரச்சனைகள் அதிகமாவதும் அதை தீர்க்க நீதிமன்றத்தை நாடுவதும் அதிகமாகும். ராகு இருக்கும் இடத்திற்கு ரண ருண ரோக ஸ்தானமான மகர ராசியை சனி பார்க்கிறார். அறுவை சிகிச்சை சம்பந்தமான புதிய கண்டுபிடிப்பு உருவாகும்.
அதே வேளையில் கேதுவிற்கு கேந்திரத்தில் சனி பகவான் இருக்கிறார். ஆன்மீகம் - கோவில் சம்பந்தமான பிரச்சனைகளில் சிறிது சுணக்கம் ஏற்படும். ராகு - கேது சஞ்சாரம் செய்யும் இடங்களால் கலப்புத் திருமணங்கள் அதிகமாகும். நிலம் - நீர் - காற்று - ஆகாயம் - நெருப்பு என பஞ்சபூதங்கள் மூலமாகவும் மக்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும். தற்கொலைகள் அதிகமாகும். குருப் பெயர்ச்சிக்குப் பின் ஜீவகாருண்யம் மிக அற்பமாக இருக்கும்.
குருப் பெயர்ச்சி:
இவ்வருடம் ஆடி மாதம் 18ம் தேதி 2016 ஆகஸ்ட் 2ம் தேதி செவ்வாய்கிழமை குருபகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். பெயர்ச்சியான பின் அவர் ரிஷபம் - மகரம் - மீனம் ராசிகளைப் பார்ப்பார்.
பன்னிரு ராசிகளுக்குமான விரிவான பலன்கள்.உரிய இராசிகளின் படங்கள் மீது அழுத்திப் பலன்களைக் காண்க.
மேடம்:அசுபதி, பரணி, கார்த்திகை-1ம் பாதம் மற்றும் சு, சொ, சோ, சை, ல, லீ, லு, லோ, அ, ஆ ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.
எடுக்கும் காரியங்களை வேகத்தோடும், விவேகத்தோடும் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!!
நினைத்தது நிறைவேறும் ஆண்டாக அமையும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். இதுவரை தடைபட்ட திருமணம் போன்ற சுப காரியங்கள் தடைவிலகி இனிதாக நடைபெறும். புத்திர பாக்கியம் எதிர்பார்த்திருந்தவர்களுக்கு சந்தான பாக்கியம் கிட்டும். பலர் சொந்தமாக வீடு, வாகனம் வாங்கி மகிழ்வர். பூர்வீக சொத்துக்களால் லாபம் அடைவர். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கணவன் - மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். வேலையில் எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு பெற்று மனமகிழ்வர். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
குடும்ப பொருளாதாரம்:
குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். திருமணம் சுபச் செலவுகள் உண்டாகும். சொந்த பூமி, மனை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைக்கும். இதன் மூலம் உங்கள் பொருளாதார நிலை சீராகும்.
கொடுக்கல்-வாங்கல்:
பொருளாதார நிலை சீராக இருப்பது உங்களின் கொடுக்கல் வாங்கல் நல்ல நிலைமையில் இருப்பதைக் காட்டுகிறது. பிறரை நம்பி பெரிய தொகையைக் கடனாக கொடுக்கும் போது சற்று சிந்தித்துச் செயல்பட வேண்டும். உடனிருப்பவர்களே பண விஷயத்தில் துரோகம் செய்யத் துணிவார்கள். உங்களுக்கு உள்ள வம்பு வழக்குகள் நல்ல ஒரு முடிவுக்கு வரும்.
தொழில், வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் பெருகும். நவீன கருவிகளை வாங்க அரசு வழியில் கடனுதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளும் சேருவார்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். உங்களுக்குள்ள வங்கிக் கடன்கள் குறையும்.
உத்தியோகம்:
செய்யும் பணியில் உயர்வான நிலை ஏற்படும். கௌரவமான பதவிகள் கிடைக்கப்பெறும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலருக்கு எதிர்பார்த்த இட மாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.
அரசியல்:
பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடி வரும். மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். பண வரவுகளுக்கும் பஞ்சம் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
விவசாயிகள்:
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். விளைபொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கப்பெறுவதால் லாபங்கள் பெருகும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் புதிய நவீன கருவிகளையும் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு பூமி, மனை வாங்கும் யோகமும் கிட்டும்.
பெண்கள்:
உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கணவன் - மனைவி உறவில் அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும். உற்றார் - உறவினரை அனுசரித்துச் செல்வது நல்லது. பூர்வீக வழியில் லாபம் கிட்டும்.
கலைஞர்கள்:
திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதுவரை நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு கிடைக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். புதிய கார், பங்களா போன்றவற்றை வாங்குவீர்கள்.
மாணவ - மாணவியர்:
கல்வியில் நல்ல முன்னேற்றமான நிலையிருக்கும். திறமைக்கேற்ற மதிப்பெண்களைப் பெற்று முன்னேறுவீர்கள். விளையாட்டு போட்டிகளிலும் பரிசுகளையும் பாராட்டுகளையும் பெறுவீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும்.
உடல் ஆரோக்யம்:
ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாட பணிகளை திறம்பட செய்து முடிக்க முடியும். குடும்பத்திலுள்ளவர்களும் சில நேரங்களில் மருத்துவச் செலவுகளை ஏற்படுத்துவார்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.
அஸ்வினி:
இந்த ஆண்டு நீங்கள் பயமின்றி எந்த காரியத்திலும் இறங்கலாம். அவசரமாக எதையும் செய்ய தோன்றும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எல்லா அனுகூலமும் கிடைக்க பெறும். ஆனால் வீண்வாக்குவாதத்தால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டு செயல்படுத்துவது வளர்ச்சிக்கு உதவும்.
பரணி:
இந்த ஆண்டு வாடிக்கையாளர்களிடம் சாதூர்யமாக பேச வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு துணிச்சல் அதிகரிக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் வேலையில் வேகம் காட்டுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்கும் போது அவசரப்படாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் தன்மையாக பேசுவது நல்லது.
கார்த்திகை 1ம் பாதம்
இந்த ஆண்டு கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை குறைவு ஏற்படலாம் கவனம் தேவை. பிள்ளைகளுக்காக செய்யும் வேலைகளில் தடை ஏற்படலாம். கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம். பெண்களுக்கு எந்த காரியத்திலும் அவசரம் காட்ட தோன்றும். நிதானமாக செய்தால் வெற்றி நிச்சயம். வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்: முடிந்த வரை செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வரவும். செவ்வாய்கிழமை தோறும் அம்மனுக்கு செவ்வரளிப் பூவால் மாலை கட்டி அர்ப்பணிக்கவும்.
கிழக்கு, வடக்கு அதிர்ஷ்ட திசைகள்.
அதிர்ஷ்ட எண்கள் - 1, 3, 5
இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.
இந்த ஆண்டு உங்களுக்கு தேவையற்ற அலைச்சல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். குடும்பத்திலுள்ளவர்களால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவர் - மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் உண்டாகும். உற்றார் - உறவினர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும், திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் ஏற்படும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். ஆனால் எதையும் சமாளிக்கும் திறன் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்திலும் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் இருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாதிருப்பது நல்லது. கூட்டாளிகளும், தொழிலாளர்கள் ஓரளவுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும்.
குடும்பப் பொருளாதாரநிலை:
கணவன் - மனைவியிடையே அடிக்கடி வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. மணமாகாதவர்களுக்கு சுப காரியங்கள் நடைபெற தாமத நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சிகளிலும் தடைகளுக்குப் பின்பே வெற்றிபெற முடியும். அசையும்-அசையா சொத்துகளால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும்.
கொடுக்கல் - வாங்கல்:
பொருளாதார நிலை சுமாராக இருக்கும் என்பதால் பணம் கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். வாங்கிய பணத்தை திருப்பித்தருவதில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்ததைக்கேட்டால் அடுத்தது பகையாக மாறும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். பூர்வீக சொத்துக்களால் வீண் செலவுகளும், நெருக்கடிகளும் உண்டாகும்.
தொழில், வியாபாரம்:
தொழில், வியாபாரத்தில் கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றாலும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் லாபம் குறையும். உடனிருப்பவர்களே தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பையும் பெறமுடியாமல் போகும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து நிதானமுடன் செயல்பட்டால் லாபம் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.
உத்தியோகம்:
பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிலும் திறம்படச் செயல்படுவீர்கள். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும், உத்தியோக உயர்வுகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி உண்டாகும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும், பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பதும் நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் உண்டாகும். வேலைப்பளு அதிகமாக இருக்கும்.
அரசியல்:
மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை பூர்த்திசெய்தால் உங்கள் பதவிக்கு பங்கம் ஏற்படாது பார்த்துக்கொள்ள முடியும். கட்சிப்பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள வேண்டிவருவதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் நிலையில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. வாக்குறுதிகள் கொடுக்கும்போது சிந்தித்துச் செயல்படவும்.
விவசாயிகள்:
பயிர் விளைச்சல் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். நவீன முறைகளைக் கையாண்டு விளைச்சலைப் பெருக்க முடியும் என்றாலும் வேலைக்கு தக்க சமயத்திற்கு ஆட்கள் கிடைக்கமாட்டார்கள். இதனால் செய்யும் தொழிலில் சுணக்கம் ஏற்படும். அரசு வழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கும். நீர்வரத்து சிறப்பாகவே இருக்கும்.
பெண்கள்:
உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனமெடுப்பது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம். குடும்ப பிரச்சனைகளை வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்ளாதிருக்கவும் மணவயதை அடைந்தவர்களுக்கு மணமாக சில தடைகள் ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருக்கும்.
கலைஞர்கள்:
பயணங்களால் அலைச்சல்களும் உடல் சோர்வும் ஏற்படும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் பாதிப்பு ஏற்படும். நினைத்த காரியங்களை நிறைவேற்ற முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது.
மாணவ-மாணவியர்:
மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாகக்கூடிய காலமிது என்பதால் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. கல்விரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் தடைகள் ஏற்படும். தேவையற்ற நட்புகள் உங்களை வேறுபாதைக்கு அழைத்துச்செல்லும். எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும்.
உடல் ஆரோக்கியம்:
தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் உடல் ஆரோக்கியத்தால் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். உடல்நிலை சோர்வடையும். குடும்பத்திலுள்ளவர்களுக்கும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். எதிர்பாராத வீண் விரயங்களும் ஏற்படும்.
கார்த்திகை 2, 3, 4 பாதம்:
இந்த ஆண்டு அவசரப்படுவதை தவிர்ப்பது நன்மை தரும். வீண் செலவும், அலைச்சலும் உண்டாகலாம். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம். எனவே எதிலும் மிகவும் கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் தாமதம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.
ரோகிணி:
இந்த ஆண்டு உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவர்களுக்கான பொறுப்புகளை ஏற்கும் போது எச்சரிக்கை தேவை. தீ, ஆயுதம் இவற்றை கையாளும் போது கவமனாக இருப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் மனகவலை ஏற்படலாம்.
மிருக சிரீஷம் 1, 2, பாதம்:
இந்த ஆண்டு மற்றவர்களுக்கு உதவி செய்யபோய் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். கவனம் தேவை. மாணவர்களுக்கு: கல்வியில் எதிர்பாராத தடை, தாமதம் உண்டாகலாம். சிறிய வேலையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும்.
பரிகாரம்: முடிந்த வரை வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று தேங்காய் தீபம் ஏற்றி 11 முறை வலம் வரவும்.
கிழக்கு, வடக்கு அதிர்ஷ்ட திசைகள்.
அதிர்ஷ்ட எண்கள் - 3, 6, 9
இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.
இந்த ஆண்டு நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதம் உண்டாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன் - மனைவிடையே சிறு சிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படும் என்றாலும் பெரிய கெடுதி இல்லை. பொன்பொருள் சேரும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். தொழில் வியாபார செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். பணம் கொடுக்கல்-வாங்கல் விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்யத் துணிவார்கள் என்பதால் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் சற்று தாமத்த்ப்படும். சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் லாபங்களுக்கு குறை இருக்காது.
பொருளாதார் நிலை:
கணவன் - மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றிகிட்டும். புத்திர வழியில் சிறு சிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். தெய்வ தரிசனக்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பண வரவு சுமாராக இருக்கும்.
கொடுக்கல்-வாங்கல்:
பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்துச் செயல்படவும். கொடுத்த கடன்களை வசூலிப்பதிலும் சற்று தடைகள் உண்டாகும். தேவையற்ற வம்பு வழக்குகள், பூர்வீக சொத்துக்களால் அனுகூலமற்ற நிலைகள் தோன்றும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.
தொழில், வியாபாரம்:
தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலையே இருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருக்கும். பல பெரிய மனிதர்களின் உதவிகளும் கிடைக்கும். புதிய புதிய வாய்ப்புகள் தேடிவந்தாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.
உத்தியோகம்:
பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறாப்பாகவே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை உண்டாக்கும். உயரதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை உண்டாகும்,
அரசியல்:
மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்றாலும் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டியிருக்கும். கட்சிப்பணிகளுக்காக நிறைய செலவாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால்தான் முன்னேற முடியும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் ஓரளவுக்கு ஆதாயப் பலனையே அடையமுடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படும்.
விவசாயிகள்:
விளைச்சல் ஓரளவுக்குத்தான் இருக்கும். போட்ட முதலீட்டினை எடுக்கவே அரும்பாடு பட வேண்டிவரும். வயல் வேலைகளுக்கு தகுந்த நேரத்தில் வேலைக்கு ஆள் கிடைக்கமாட்டார்கள். சந்தையிலும் விளைபொருளுக்கு சுமாரான விலையே கிடைக்கும். புதிய பூமி, மனை வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. பங்காளிகளை அனுசரித்துச் செல்லவும்.
பெண்கள்:
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடனேயே செயல்படுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன்கள் அமைவதில் தாமத நிலை ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்ளவும் புத்திர வழியில் மனசஞ்சலங்கள் தோன்றும்.
கலைஞர்கள்:
தகுந்த பாத்திரங்களுக்காக காத்திராமல் கிடைப்பதைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது. போட்டி, பொறாமைகள் அதிகரிப்பதால் நல்ல வாய்ப்புகள் பறிபோகும். ஆடம்ப்ர வாழ்க்கையிலும் பாதிப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும்.
மாணவ-மாணவியர்:
கல்வியில் மந்த நிலை ஏற்படக்கூடிய காலம் என்பதால் சற்று ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற பொழுதுபோக்குகளால் மனம் வேறுபாதைகளுக்கு மாறிச்செல்லும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவைப் பெற இயலாமல் போகும்.
உடல் ஆரோக்யம்:
உடல் ஆரோக்யம் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று கூறமுடியாது. அடிக்கடி பாதிப்புகள் உண்டாகியபடியே இருக்கும். மனைவி, பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய ஆரோக்கிய பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். நீண்டநாள் நோய்களுக்காக சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பவர்கள் உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது.
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
இந்த ஆண்டு எல்லாவிதமான முன்னேற்றத்தையும் தரும். வாகனங்களால் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் அல்லது வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
திருவாதிரை:
இந்த ஆண்டு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். திருமணம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவும், கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் உண்டாகும். பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.
புனர்பூசம் 1, 2, 3 பாதம்:
இந்த ஆண்டு தொலைதூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். காரிய தடை நீங்கும். எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
பரிகாரம்: முடிந்த வரை புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று நல்லெண்ணையில் தீபம் ஏற்றி 7 முறை வலம் வரவும். புதன்கிழமை தோறும் பெருமாளுக்கு துளசி சாற்றி வழிபடவும்.
தென்கிழக்கு, வடக்கு, வட மேற்கு அதிர்ஷ்ட திசைகள்.
அதிர்ஷ்ட எண்கள் - 1, 3, 5, 9
இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.
இந்த ஆண்டு ராகு குடும்ப ஸ்தானத்தில் இருந்தாஅலும் உங்கள் ராசிக்கு நட்பு கிரகமான குருவுடன் இணைந்திருக்கிறார். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி கணவன் - மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம், கார், பங்களா போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல் - வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவும் முடியும். லாபங்கள் தடைபடாது. வெளிவட்டாரத தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தினை அடையமுடியும். அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
பொருளாதார நிலை:
குடும்ப்த்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். கணவன் - மனைவி ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவுகள் தாராளமாக அமையும். பொன்பொருள் சேர்க்கை சேரும். சிலருக்கு, பூமி, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நடைபெறும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.
கொடுக்கல்-வாங்கல்:
பொருளாதார நிலை மிகவும் முன்னேற்றகரமாக இருப்பதால் கொடுக்கல்-வாங்கலில் சரளமான நிலையினை அடையமுடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.
தொழில் வியாபாரம்:
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். அரசுவழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை அபிவிருத்தியை பெருக்க உதவும். வெளியூர் தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கப்பெறும்.
உத்தியோகம்:
பணியில் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியினைத் தரும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப்பெறும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். எடுக்கும் பணிகளை திறம்பட செய்துமுடிக்க முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். நினைத்தது யாவும் நிறைவேறி மகிச்சி தரும்.
அரசியல்:
பெயரும், புகழும் உயரக்கூடிய காலமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் வெற்றிகள் குவியும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். மாண்புமிகு பதவிகள் தேடிவரும்.
விவசாயிகள்:
பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விளைபொருளுக்கேற்ற விலையும் சந்தையில் கிடைப்பதால் தாராள தன வரவுகள் உண்டாகும். நீர்வரத்து தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகளைக் கையாண்டு அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள். புதிய பூமி, நிலம், மனை போன்றவற்றை வாங்கும் யோகமும் உண்டாகும்.
பெண்கள்:
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும். கணவன் - மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். சொந்த கார், பங்களா போன்றவற்றை வாங்குவீர்கள். சேமிப்பும் பெருகும்.
கலைஞர்கள்:
புதிய வாய்ப்புகள் தேடிவரும். புதுப்புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். கைக்குவராமலிருந்த பணத்தொகைகளும் தடையின்றி வந்து சேரும். சுகவாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. புதிய கார், பங்களா போன்றவற்றையும் வாங்கி மகிழ்வீர்கள்.
மாணவ மாணவியர்:
நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெறமுடியும். கல்விக்காக வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். விளையாட்டும் போட்டிகளில் சிறப்பான பரிசுகளைப் பெறுவீர்கள்.
உடல் ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கடந்த கால மருத்துவச் செலவுகள் குறையும். மனைவி, பிள்ளைகள் சுபிட்சமாக அமைவார்கள். மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும். நீண்ட நாள் மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
புனர் பூசம் 4ம் பாதம்:
இந்த ஆண்டு மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.
பூசம்:
இந்த ஆண்டு சரக்குகளை பாதுகாப்பாக வைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும்.
ஆயில்யம்:
இந்த ஆண்டு குழந்தைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சி தரும். பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டில் இருக்கும் போட்டிகள் நீங்கும். மனகுழப்பம் நீங்கி. காரிய வெற்றி கிடைக்கும். மன நிம்மதி கிடைக்கும்.
பரிகாரம்:
திங்கட்கிழமை தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று இலுப்பை எண்ணையில் பஞ்சமுக தீபம் ஏற்றி வணங்கி 16 முறை வலம் வரவும். திங்கட்கிழமை தோறும் அம்மனுக்கு அரளிப்பூமாலை சாற்றி வழிபடவும்.
மேற்கு, வடக்கு, தென்கிழக்கு அதிர்ஷ்ட திசைகள்.
அதிர்ஷ்ட எண்கள் - 1, 3, 9
இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.
இந்த ஆண்டு உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் அன்றாட்டப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றிமறையும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். உற்றார்-உறவினர்களை அனுசரித்துச் செல்லவேண்டியிருக்கும். பணவரவுகளில் சுமாரான நிலையே இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் - வாங்கலிலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கல் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாக்கக்கூடிய காலம் என்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது.
பொருளாதார நிலை:
பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை நிலவினாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் வீண்செலவுகளும், புத்திர வழியில் மகிழ்ச்சி குறைவும் ஏற்படலாம். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் உற்றார்-உறவினர்களுக்கு தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.
கொடுக்கல்-வாங்கல்:
பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை கொடுக்கல்-வாங்கலில் ஈடுபடுத்தும்போது கவனமுடன் செயல்படுவது நல்லது. பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண்பிரச்சினைகளில் சிக்கிகொள்வீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளின் தீர்ப்பு இழுபறி நிலையிலிருக்கும்.
தொழில், வியாபாரம்:
செய்யும் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். அவ்வப்போது சற்று மந்தமான நிலை காணப்பட்டாலும் பொருட்தேக்கம் உண்டாகாது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலம் அடைவார்கள். அபிவிருத்தியும் பெருகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை.
உத்தியோகம்:
பணியில் சற்று கவனமுடன் செயல்படுவதும் உயரதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தைக் கையாள்வதும் நல்லது. உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைப் பளுவை குறைத்துக் கொள்ள முடியும். புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைப்பதை பயன்படுத்திக் கொள்ளவும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும்.
அரசியல்:
பெயர், புகழை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய காலமிது என்பதால் மக்களின் ஆதரவைப் பெற முயற்சி செய்வது நல்லது. எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். கட்சிப் பணிகளுக்காக சில செலவுகளை செய்ய நேரிடும். மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சுமாராக இருந்தாலும் போட்ட முதலீட்டினை எடுத்துவிட முடியும். நீர்வரத்து தேவைக்கேற்றபடி இருக்கும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். உற்றர்-உறவினர்களை அனுசரித்துச் செல்வது. வாய்க்கால், வரப்பு பிரச்சினைகளை பெரிதுபடுத்தாமலிருப்பது நல்லது.
பெண்கள்:
உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. பொருளாதார நிலை ஓரளவுக்கு தேவைக்கேற்றபடி இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். கணவன் - மனைவி சற்று விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது. ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கவும்.
கலைஞர்கள்:
கிடைத்த வாய்ப்புகளை கைநழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும்
மாணவ-மாணவியர்:
கல்வியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் அனுகூலத்தை அடையலாம். விளையாட்டு போட்டிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையால் வீண் அலைச்சலையும், பிரச்சனைகளையும் எதிர்கொள்ள நேரிடும். அரசு வழியில் ஆதரவு கிட்டும்.
உடல் ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரணக் கோளாறு போன்றவை தோன்றும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்படும் என்றாலும் அன்றாடப் பணிகளில் உங்களின் தனித்திறனால் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு நல்ல பெயரெடுப்பீர்கள்.
மகம்:
இந்த ஆண்டு தடைபட்டு வந்த காரியங்கள் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மை உண்டாகும். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகப்படும். உடல் நலம் சீரடையும். மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும்.
பூரம்
இந்த ஆண்டு அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக நடக்கும். ஆர்டர்கள் பெறுவதில் இருந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். மற்றவர்கள் மூலம் உதவி கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். இதனால் வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும்.
உத்திரம் 1ம் பாதம்:
இந்த ஆண்டு கவுரவம் அந்தஸ்து உயரும். துக்கமும், துன்பமும் நீங்கும். பெண்களுக்கு தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கி சாதகமாக நடந்து முடியும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் உண்டாகும். எதிர்கால கல்வி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். திறமை வெளிப்படும். எல்லா பிரச்சனைகளும் தீரும். மனகவலை அகலும்.
பரிகாரம்: ஞாயிறுகிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று 9 முறை வலம் வரவும். சூரிய உதயத்திற்குப் பின் தூங்குவதைத் தவிர்க்கவும். பிரதோஷம் தோறும் அபிஷேகத்திற்கு எலுமிச்சை சாறு அர்ர்பணிக்கவும்.
கிழக்கு, வடக்கு, வடகிழக்கு அதிர்ஷ்ட திசைகள்.
அதிர்ஷ்ட எண்கள் - 3, 6, 9
இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.
இந்த ஆண்டு நீங்கள் எடுத்த முயற்சிகளில் வெற்றியினைப் பெற்றிடுவீர்கள். பண வரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத வகையில் உதவிகள் கிட்டும். குடும்பத்தில் சுபவிரயங்கள் ஏற்படும் என்பதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். கணவன் - மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றிமறையும். தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றமான நிலை ஏற்படும். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் வேலை பளு அதிகமாக இருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. எதையும் சமாளித்து ஏற்றத்தைப் பெறுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். வம்பு, வழக்குகளில் சாதகமான பலன் உண்டாகும்.
பொருளாதார நிலை:
குடும்பத்தின் பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத சுபச்செலவுகள் ஏற்படும். வீண் விரயங்கள் அதிகரிக்கும். கணவன் - மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பதும், முன்கோபத்தைக் குறைப்பதும் நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்களுக்குப் பின் அனுகூலம் உண்டாகும்.
கொடுக்கல் - வாங்கல்:
பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் வீண் செலவுகள் அதிகரிக்கக்கூடிய காலம் என்பதால் முடிந்தவரை பெரிய தொகைகளை கொடுக்கல்-வாங்கல் போன்றவற்றில் ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுத்த கடன்களை திரும்பப்பெறுவதில் தடைகள் ஏற்படும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாதிருப்பது நல்லது.
தொழில், வியாபாரம்:
தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு சுமாரான நிலைகள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.
உத்தியோகம்:
பணியில் சற்று வேலைப் பளு கூடுதலாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அனுகூலப் பலனை பெற முடியும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப்படும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை குறைத்துகொண்டால் வீண் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும். புதிதாக வேலைதேடுபவர்கள் கிடைப்பதைப் பயன்படுத்திக்கொள்ளவும்.
அரசியல்:
பெயர் புகழுக்கு இழுக்கு நேராமல் பாதுகாத்துகோள்ளவேண்டிய நேரம் என்பதால் எல்லா விஷயங்களிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. அரசு வழியில் வீண் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மக்களின் ஆதரவு ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் எதையும் எதிர்கொண்டு வெற்றிபெற முடியும். பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும்.
விவசாயிகள்:
பயின் விளைச்சல் சுமாராகத்தானிருக்கும் போட்ட முதலீட்டினை எடுக்க அரும்பாடுபட வேண்டிவரும். நீர்வரத்து போதிய அளவு இருக்கும் என்றாலும் வேலையாட்கள் சரியான நேரத்திற்கு வேலைக்கு கிடைக்கமாட்டார்கள். வாய்க்கால், வரப்பு பிரச்சினைகளால் வீண் விவாதங்கள் ஏற்படும். பண வரவு தேவைக்கேற்றபடி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.
பெண்கள்:
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் வீண் விரயங்கள் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன்கள் அமைவதில் தாமத நிலை ஏற்படும். அசையும் - அசையா சொத்துக்களால் வாங்கும் முயற்சிகளில் அனுகூலம் கிட்டும்.
கலைஞர்கள்:
மக்களின் ஆதரவும், ரசிகர்களின் ஆதரவும் சிறப்பாகவே இருக்கும். கிடைத்த வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொண்டால் சிரிய பட்ஜெட் படம் என்றாலும் நல்ல பெயரினை வாங்கித்தரும். வரவேண்டிய பணத்தொகைகளில் சற்று இழுபறி நிலை இருக்கும்.
மாணவ-மாணவியர்:
கல்வியில் முன்னேற்றத்தினைப் பெற்றுவிட முடியும். சிறுசிறு இடையூறுகள், தேவையற்ற நட்பு வட்டாரங்கள் ஏற்படுவதால் அவ்வப்போது கல்வியில் மந்த நிலை தோன்றினாலும் எதையும் சமாளித்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பயணங்களில் கவனமுடனிருப்பது நற்பலனைத் தரும்.
உடல் ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகக்கூடும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படுவதால் மனநிம்மதி குறைவு உண்டாகும். நீண்டநாள் பிரச்சினைகளுக்காக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பவர்கள் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது என்றாலும் பெரிய கெடுதியில்லை.
உத்திரம் 2, 3, 4 பாதம்:
இந்த ஆண்டு நிம்மதியும், சுகமும் அதிகமாகும். புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்ல வேண்டி வரலாம். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பலவகையிலும் பிறர் உதவி கிடைக்க பெறுவீர்கள். புத்திசாதூர்யம் அதிகரிக்கும். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். புதிய ஆர்டர்கள் பெறவும், வாடிக்கையாளர்களை திருப்தி செய்யவும் அலைய வேண்டி இருக்கும்.
அஸ்தம்:
இந்த ஆண்டு உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களுக்காக பொறுப்புகள் ஏற்கும் போது மிகவும் கவனமாக இருப்பது வீண்பழி ஏற்படாமல் தடுக்கப்படும். அனுபவபூர்வமான அறிவுதிறன் கூடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம்.
சித்திரை 1, 2, பாதம்:
இந்த ஆண்டு செலவு செய்ய நேரிடும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். பெண்களுக்கு மற்றவர்கள் உதவி கிடைப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண அனுபவ பூர்வமான அறிவு கைகொடுக்கும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும். காரிய தடை நீங்கும்.
பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் அல்லது சாஸ்தா கோவிலுக்குச் சென்று நெய் அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வரவும். புதன் ஹோரைகளில் பெருமாள் அல்லது விநாயகர் அல்லது சாஸ்தா கோவிலுக்கு மரிக்கொழுந்தை அர்ப்பணிக்கவும்.
மேற்கு, தெற்கு அதிர்ஷ்ட திசைகள்.
அதிர்ஷ்ட எண்கள் - 6, 9
இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.
இந்த ஆண்டு குடும்பத்தில் தடைபட்டுக்கொண்டிருந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. சுக வாழ்வு அமையும். சொந்தமாக வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கக்கூடிய யோகமும் சிலருக்கு உண்டாகும். எதிலும் வெற்றிமேல் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம். பல இடையூறுகளைச் சந்தித்து வந்தாலும் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அபிவிருத்தியும் லாபமும் பெருகு. வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியொகத்தில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் தற்போது கிடைக்ககூடிய வாய்ப்புகள் உண்டாகும்.
பொருளாதார நிலை:
குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். கணவன் - மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது பணவரவுகள் தாராளமாக இருப்பதால் பொன் பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவை வாங்கும் யோகம் உண்டாகும்.
கொடுக்கல்-வாங்கல்:
பணவரவுகள் தாராளமாக இருப்பதால் கொடுக்கல்-வாங்கலும் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் வீடு தேடிவரும். பண விஷயமாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். பொருளாதார உயர்வுகளால் குடும்பத் தேவைகள் மட்டுமின்றி பிற தேவைகளும் பூர்த்தியாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.
தொழில், வியாபாரம்:
தொழில், வியாபாரம் அமோகமாக நடைபெறும். போட்டிகள் குறையும். நல்ல வாய்ப்புகள் தேடிவரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். வெளியூர், வெளிநாடுகள் மூலமும் முன்னேற்றம் உண்டாகும். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெறும்
உத்தியோகம்:
பணியில் தடைபட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் தடை விலகி கிடைக்கப் பெறும். கௌரவமும், புகழும் உயரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிகேற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரம் உயர்வடையும்.
அரசியல்:
பெயர், புகழ் உயர்வடையும். மக்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்யநேர்ந்தாலும் வரவேண்டிய பணவரவுகள் வந்து சேரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் உண்டாகும். கௌரவ பதவிகள் கிடைக்கும்.
விவசாயிகள்:
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். நவீன முறைகளைக் கையாண்டு பயிர் விளைச்சலைப் பெருக்குவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். நீர்வரத்து தாராளமாக இருக்கும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். அரசு வழியில் மானிய உதவிகள் கிட்டும். சுபகாரியங்கள் யாவும் கைகூடும்.
பெண்கள்:
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு அசையா சொத்துக்களால் லாபம் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும்
கலைஞர்கள்:
எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று உங்களின் நடிப்புத்திறன் வெளிச்சத்திற்க் வரும். ரசிகர்களின் ஏகோபித்த ஆத்ரவுகளால் மனநிறைவு உண்டாகும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வுக்கு பஞ்சம் ஏற்படாது. புதிய கார், பங்களா போன்றவற்றையும் வாங்கிச் சேர்ப்பீர்கள்.
மாணவ-மாணவியர்:
கல்வியில் முன்னேற்றமான நிலையிருக்கும். தேவையற்ற நட்புகளையும் பொழுதுபோக்குகளையும் தவிர்ப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டிச்செல்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. குடும்பத்திலுள்ளவர்கள் அவ்வளவு நலமாக இருப்பார்கள் என்று கூறமுடியாது.
சித்திரை 3, 4 பாதம்:
இந்த ஆண்டு எதிலும் மிகவும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருப்பது நல்லது. ராசியாதிபதியால் திடீர் உடல்நல பாதிப்பு உண்டாகலாம். மனம் நிலை கொள்ளாமல் தவிக்கும் நிலை வரலாம். பணவரத்து இருக்கும். கவுரவம், அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் மற்றவர்கள் மூலம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்பட்டாலும் பணவரத்து குறைவு இருக்காது.
சுவாதி:
இந்த ஆண்டு தொழில் கூட்டாளிகளுடன் அனுசரித்து செல்வது நன்மைதரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. வீண் அலைச்சலும் கூடுதல் உழைப்பும் இருக்கும். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் நிம்மதி குறையலாம். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு நடக்க வேண்டி இருக்கும்.
விசாகம் 1, 2, 3ம் பாதம்:
இந்த ஆண்டு குடும்பத்தில் கவுரவம் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தடைபட்டு வந்த காரியங்கள் நடந்து மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் கவனமாக படிப்பது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. நன்மைகள் உண்டாகும். மனவருத்தம் நீங்கும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் லக்ஷ்மி பூஜை மற்றும் முன்னோர் வழிபாடு செய்யுங்கள். வெள்ளிக்கிழமைதோறும் மல்லிகை அல்லது பிச்சிப்பூவை கோவிலுக்கு அர்ப்பணிக்கவும்.
மேற்கு, தெற்கு அதிர்ஷ்ட திசைகள்.
அதிர்ஷ்ட எண்கள் - 2, 7
இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.
இந்த ஆண்டு தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரித்தாலும் கிடைக்க வேண்டிய உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். பணவரவுகள் தேவைகேற்றபடியிருக்கும். கணவன் - மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றிமறையும். குடும்ப ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகமும் அதனால் கடன்களும் உண்டாகும். உற்றார் - உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பொதுநல காரியங்களில் ஈடுபடுவீர்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது, ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடன் செயல்படுவது, உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
பொருளாதார நிலை:
பணவரவுகள் தேவைகேற்றபடி இருந்தாலும் எதிர்பாராத வீண்செலவுகள் உண்டாகும். முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. கணவன் - மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக்கக்கூடிய காலம் என்பதால் விட்டுகொடுத்து அனுசரித்து நடப்பது நல்லது. உற்றார்-உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும் சுப காரியங்களில் தாமத நிலை உண்டாகும்.
கொடுக்கல் - வாங்கல்:
பொருளாதார நிலை ஓரளவுக்குச் சிறப்பாக இருக்கும் என்றாலும் கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவது, பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சற்று சாதகமான நிலைகள் உண்டாகும். முடிந்தவரை தேவையற்ற பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது.
தொழில், வியாபாரம்:
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளால் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கைநழுவிப் போகும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படமாட்டார்கள். அரசு வழியிலும் சிறுசிறு நெருக்கடிகள் உண்டாகும். தொழிலிலும் மந்த நிலை ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது கவனமுடனிருப்பது நல்லது.
உத்தியோகம்:
உத்தியோகஸ்தர்களுக்கு நெருக்கடிகள் அதிகரிக்கும் காலம் என்பதால் தங்கள் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. வீண் பழிச் சொற்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகளை கண்முன்னேயே பிறர் தட்டிச்செல்வர். புதிய வேலை தேடுபவர்களுக்குத் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு தாமதமாக கிடைக்கும்.
அரசியல்:
மக்களின் ஆதரவைப் பெற அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது நல்லது. பெயர், புகழுக்கு இழுக்கு நேராதபடி பேச்சில் நிதானத்தைக் கடைபிடிக்கவும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்யவேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். உடல் நிலையில் கவனம் செலுத்துவது நல்லது.
விவசாயிகள்:
பயிர் விளைச்சல் நன்றாக அமைய கடும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டியிருக்கும். சரியான நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக்காத சூழ்நிலையால் பயிர் வேலைகள் சரிவர நடக்காது போகும். அரசு வழியில் கிடைக்க வேண்டிய மானிய உதவிகள் தாமதப்படும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை.
பெண்கள்:
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்துமென்றாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படமுடியும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார்-உறவினர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும்.
கலைஞர்கள்:
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. வரவேண்டிய பணத்தொகைகளிலும் இழுபறியான நிலையிருக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் உண்டாகும். சுக வாழ்க்கை பாதிப்படையும்.
மாணவ - மாணவியர்:
கல்வியில் ஓரளவுக்கு முன்னேற்றமான நிலையிருக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை அளிக்கும். விளையாட்டுப் போட்டிகளின் போது சற்று கவனமுடன் செயல்படுவது, தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது.
உடல் ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியம் ஓரளவுக்குச் சுறுசுறுப்பாக இருக்கும். அவ்வப்போது ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டாலும் சிறிதளவு மருத்துவச் செலவுகளுக்குப் பின் குணமாகும். எந்தவொரு காரியத்திலும் அதிக உழைப்பினை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.
விசாகம் 4ம் பாதம்:
இந்த ஆண்டு மனோதைரியம் அதிகரிக்கும். எல்லாகாரியங்களும் சாதகமாக நடந்து முடியும். எல்லா இடங்களிலும் மரியாதையும், கவுரவமும் அதிகரிக்கும். எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். தொழில் வியாபாரம் முன்னேற்ற மடையும்.
அனுஷம்:
இந்த ஆண்டு தொழிலில் இருந்து வந்த போட்டிகள் குறையும். தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்க பெறுவீர்கள். கடன் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள்.
கேட்டை:
இந்த ஆண்டு குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை சாதகமான பலன் தரும். கணவன், மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். பிள்ளைகளுக்காக செய்யும் பணிகள் திருப்தி தரும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த தகராறுகள் நீங்கும். பெண்களுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் அம்பாள் கோவிலுக்குச் சென்று காலையில் 3 முறை வலம் வரவும். நவக்கிரகங்களுக்கும் மலர்கள் வாங்கிக் கொடுக்கவும்.
கிழக்கு, வடக்கு, தென்மேற்கு அதிர்ஷ்ட திசைகள்.
அதிர்ஷ்ட எண்கள் - 3, 5
இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.
இந்த ஆண்டு குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். கணவன் - மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி, மனை வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று மேன்மை ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். உடல் ஆரோக்கிய விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் சிறப்பாக அமையும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்டுக் கொண்டிருந்த பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் தற்போது கிடைக்கும்.
பொருளாதார நிலை:
கணவன் - மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். உற்றார் - உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பிரிந்தவர்களும் ஒன்று சேருவார்கள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். சிலருக்கு சொந்தமாக கார், பங்களா வாங்கும் யோகமும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். குடும்பத்தில் சுபிசமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.
கொடுக்கல் - வாங்கல்:
பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கொடுக்கல் - வாங்கலும் சரளமாகவே இருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். பிறருக்கு முன் ஜாமீன் கொடுக்கும் விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. வம்பு, வழக்குகளில் சற்று இழுபறி நிலை ஏற்பட்டாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
தொழில், வியாபாரம்:
செய்யும் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் லாபம் கிட்டும். பயணங்களையும் அடிக்கடி மேற்கொள்வீர்கள். போட்டி, பொறாமைகள் குறையும். நவீன கருவிகள் வாங்க அரசு வழியில் கடனுதவி கிடைக்கும்.
உத்தியோகம்:
பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் தடையின்றிக் கிடைக்கும். பொருளாதார உயர்வுகளால் வாழ்க்கைத் தரம் உயரும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைப்பளு குறையும். புதிய வேலை வாய்ப்பு தகுதிகேற்றபடி கிடைக்கும்.
அரசியல்:
மக்களின் ஆதரவைப் பெற சிறிது போராட்டங்களை மேற்கொள்ளவேண்டியிருக்கும் என்றாலும் பெயர், புகழுக்கு பஞ்சம் ஏற்படாது. எடுக்கும் காரியங்களை திறம்பட செயல்படுத்துவீர்கள். மேடைப் பேச்சுகளில் நிதானமுடன் நடந்துகொள்வது நல்லது. கட்சிப் பணிகளுக்காக நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். வருவாய் பெருகும்.
விவசாயிகள்:
பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும். போட்ட முதலீட்டிற்கு மேல் லாபத்தினைப் பெற்றுவிட முடியும். வேலையாட்களும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்பட்டாலும் பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். பூமி மனை சேரும்.
பெண்கள்:
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் திறம்பட செயல்பட முடியும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் சிறுசிறு மன சஞ்சலங்கள் தோன்றும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். அசையும் - அசையா சொத்துக்களால் ஓரளவுக்கு அனுகூலம் ஏற்படும். சேமிக்க முடியும்.
கலைஞர்கள்:
இதுவரை பட்ட துயரங்களுக்கு ஒரு முடிவுவரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவதால் ரசிகர்களின் ஆதரவும் பெருகும். வரவேண்டிய பணத்தொகைகளும் கைக்கு வந்து சேரும். இழந்தவற்றை மீட்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும்.
மாணவ - மாணவியர்:
கல்வியில் சிறுசிறு தடைகளுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். விளையாட்டுப் போட்டிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பெற்றொர், ஆசிரியர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும்.
உடல் ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் சிறுசிறு கவலைதரும் சம்பவங்கள் நடைபெறும். தேவையற்ற அலைச்சலகள் அதிர்கரிப்பதால் உடல் நிலை சோர்வடையும்.
மூலம்:
இந்த ஆண்டு எதிர்ப்புகள் நீங்கும். பகைகள் விலகும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சனைகள் சரியாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எல்லாவசதிகளும் கிடைக்கும். தர்மசிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள்.
பூராடம்:
இந்த ஆண்டு வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம் உண்டாகும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள்.
உத்திராடம் 1ம் பாதம்:
இந்த ஆண்டு கணவன், மனைவிக் கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். பிள்ளைகள் மற்றும் துணையால் மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும். பெண்களுக்கு எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் உயர்வு உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். போட்டிகளில் பங்கு பெற ஆர்வம் உண்டாகும்.
பரிகாரம்: ஞாயிறு, வியாழக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும். சாமந்தி மலரை குருவிற்கு அர்ப்பணிக்கவும்.
கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு அதிர்ஷ்ட திசைகள்.
அதிர்ஷ்ட எண்கள் - 1, 3, 9
இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.
இந்த ஆண்டு நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், குடும்பத்தில் முன்னேற்றமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படலாம். திருமன சுபகாரியங்களில் சிறு சிறு தடைகளுக்கு பின் வெற்றிகிட்டும். பொருளாதார நிலையும் தேவைக்கேற்றபடியிருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பணம் கொடுக்கல், வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். கணவன் - மனைவியிடையே தெவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று போட்டிகளை எதிர்கொண்டே முன்னேற்றம் அடையமுடியும். எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.
பொருளாதார நிலை:
குடும்ப சூழ்நிலை ஓரளவுக்கு மகிழ்ச்சிகரமாக இருக்கும். கணவன் - மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. அசையும், அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பண வரவுகளில் சுமாரான நிலையே இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைக்கவும்.
கொடுக்கல்-வாங்கல்:
பொருளாதார தேவைகேற்றபடி இருந்தாலும் கொடுக்கல் - வாங்கலில் பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாகக் கொடுப்பதை தவிர்க்கவும். பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். தேவையற்ற வம்பு, வழக்குகள் உண்டாகி மன சஞ்சலங்கள் ஏற்படும்.
தொழில், வியாபாரம்:
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் குறைவாக இருந்தாலும் வர வேண்டிய வாய்ப்புகளுக்கு தடை இருக்காது. நிறைய போட்டிகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்துவிடுவது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்லவும்.
உத்தியோகம்:
பணியில் வேலைப் பளு அதிகமாக இருந்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் வேலைப்பளுவை குறைக்க உதவும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளில் தாமத நிலை ஏற்படும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்திக்கொள்வது நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்தும்.
அரசியல்:
மக்களின் தேவையறிந்து செயல்பாட்டால் பெயர், புகழை காப்பாற்றிக்கொள்ள முடியும். கட்சிப் பணிகளுக்காக நிறைய வீண் செலவுகளை செய்யவேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மேடைப் பேச்சுகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உடன் பழகுபவர்களை நம்பி எந்தவொரு காரியத்தையும் ஒப்படைக்காமலிருப்பது உத்தமம்.
விவசாயிகள்;
பயிர் விளைச்சல் சுமாராக இருக்கும். உழைப்பிற்கான பலனைப் பெறுவதில் இடையூறுகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் தாமதப்படும். சந்தையிலும் விளைபொருளுக்கேற்ற விலை கிடைக்காது. பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகக்கூடிய காலமென்பதால் தேவையற்ற செலவுகளைக் குறைக்கவும்.
பெண்கள்:
உடல் ஆரோக்கியத்தில் வயிறு, சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தோன்றிமறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையப்பெறுவதில் தடைகள் ஏற்படும். பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கவும்.
கலைஞர்கள்:
புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றாலும் அது தகுதிகேற்றதாக இருக்கது. ரசிகர்களின் ஆதரவுகள் குறையாமலிருப்பதால் எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடமுடியும். கார், பங்களா வாங்கும் முயற்சிகளில் கடன்கள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
மாணவ - மாணவியர்:
கல்வியில் சற்று மந்தமான நிலையே இருக்கும். எதிர்பார்க்கும் மதிப்பெண்களைப் பெற அதிக முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை உங்களை வேறுபாதைக்கு அழைத்துச் செல்லுமென்பதால் நண்பர்கள் விஷயத்தில் கவனம் தேவை.
உடல் ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். உணவு விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும்.
உத்திராடம் 2, 3, 4 பாதம்:
இந்த ஆண்டு மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும்.
திருவோணம்
இந்த ஆண்டு உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். செயல் திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு அதிகப்படியான வருமானமும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சகஜ நிலை காணப்படும். குழந்தைகள் திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள்.
அவிட்டம் 1,2 பாதம்:
இந்த ஆண்டு உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும் போதும் நிதானமாக பேசுவது நன்மை தரும். பெண்களுக்கு எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வீர்கள்.
பரிகாரம்:
சனிக்கிழமைகளில் அனுமான் கோவிலை வலம் வரவும். வெற்றிலை மாலை கட்டி அனுமனுக்கு சூட்டவும். மல்லிகை மலரை பெருமாளுக்கு அர்ப்பணித்து அர்ச்சனை செய்யவும்.
கிழக்கு, தெற்கு அதிர்ஷ்ட திசைகள்.
அதிர்ஷ்ட எண்கள் - 4, 6
இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.
இந்த ஆண்டு பணவரவுக்கு பஞ்சமிருக்காது. கடன்கள் யாவும் குறையும். குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த சுப காரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். நல்ல வரன்கள் தேடிவரும். புத்திர பாக்கியமும் உண்டாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெறும். கணவன் - மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உற்றார் - உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். சிலருக்கு அசையும் - அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பொன் பொருள் சேரும். செய்யும் தொழில், வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள், ஊதிய உயர்வுகள் போன்றவை கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, கணவன் - மனைவி விட்டுக்கொடுத்து நடப்பது உற்றார் - உறவினர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம்.
பொருளாதார நிலை:
பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன், குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். சிலருக்கு அசையும், அசையா சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகமும் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி, பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் போன்றவையும் உண்டாகும்.
கொடுக்கல் - வாங்கல்:
பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருப்பதால் பணம் கொடுக்கல்-வாங்கல் போன்றவற்றிலும் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். உங்களுக்குள்ள கடன் பிரச்சினைகள் குறையும். வம்பு, வழக்கு போன்றவற்றில் தீர்ப்பு சாதகமாக வரும்.
தொழில், வியாபாரம்:
தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலையிருக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தி பெருகுவதுடன் லாபங்களும் தாராளமாக அமையும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். நிதானமாகச் செயல்படுவது நல்லது.
உத்தியோகம்:
பணியில் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கப்பெறுவதால் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். எதிர்பார்த்துக் காத்திருந்த ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் தடையின்றிக் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறும். சக நண்பர்களிடம் கவனமாக இருப்பது நல்லது.
அரசியல்:
பெயர், புகழ் உயர்க்கூடிய காலமாக இருக்கும். மக்களின் ஆதரவுகள் பெருகும். அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பேச்சிற்கு அனைத்து இடங்களிலும் ஆதரவுகள் பெருகும். வருவாய் அதிகரிக்கும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள்.
விவசாயிகள்:
பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும். நவீன முறைகளைக் கையாண்டு பயிர் விளைச்சலைப் பெருக்குவீர்கள். அரசு வழியிலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் மேன்மையடையும். உற்றார் - உறவினர்களின் ஆதரவுகளின் மகிழ்ச்சியளிக்கும்,. கடன்கள் குறையும்.
கலைஞர்களுக்கு:
எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. புதிய கார், பங்களா போன்றவற்றையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். ரசிகர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை உண்டாக்கும்.
பெண்கள்:
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் திறம்படச் செயல்படுவீர்கள். மணமாகாதவர்களுக்கு மணமாகும். கணவன் - மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும் என்றாலும் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் - உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பொன் பொருள் சேரும். சொந்த வீடு வாகனங்களையும் வாங்குவீர்கள்.
மாணவ - மாணவியர்:
கல்வியில் முன்னேற்றமான நிலை உண்டாகும். எதிர்பார்த்தபடி நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டினைப் பெறுவீர்கள். கல்விக்காக சுற்றுலா தலங்கலுக்கு செல்வீர்கள். நல்ல நட்புகளால் அனுகூலப் பலன் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும். இதுவரை இருந்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும். அனைவரும் சுபிட்சமாக இருப்பதால் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
அவிட்டம் 3, 4 பாதம்:
இந்த ஆண்டு பணவரத்து அதிகரிக்கும். அதே நேரத்தில் செலவும் கூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். துணிச்சல் உண்டாகும். எதை பற்றியும் முன்பின் யோசிக்காமல் செயல்களில் இறங்கி விடுவீர்கள். தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். சரக்குகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது.
சதயம்:
இந்த ஆண்டு உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவார்கள். சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை இருக்கும் அதே நேரத்தில் அவர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
பூரட்டாதி 1, 2, 3 பாதம்:
இந்த ஆண்டு கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவதன் மூலம் கருத்து வேற்றுமை வருவதை தவிர்க்கலாம். பிள்ளைகளிம் அனுசரணையாக நடந்து கொள்வது நன்மைதரும். துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மைதரும். மாணவர்களுக்கு மிகவும் கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. கல்வியை பற்றிய கவலை நீங்கும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும். விநாயகருக்கு வெள்ளெருக்கு மாலை வாங்கிக் கொடுக்கவும்.
கிழக்கு, வடக்கு அதிர்ஷ்ட திசைகள்.
அதிர்ஷ்ட எண்கள் - 3, 5
இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.
இந்த ஆண்டு தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் மறையும். வீண் வம்பு, வழக்குகள் முடிவிற்கு வரும். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றிகிட்டும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் அனுகூலப்பலன் கிட்டும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் ஓரளவுக்கு லாபம் அமையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வெளிவட்டார பழக்கவழக்கங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. எந்த எதிர்ப்பையும் எதிர் கொண்டு வெற்றியினைப் பெறுவீர்கள். கணவன் - மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரணக் கோளாறு போன்றவை ஏற்படு மருத்துவச் செலவுகளை உண்டாக்கும்.
பொருளாதார நிலை:
குடும்ப ஒற்றுமை சுமாராகத்தான் இருக்கும். அனைவரிடமும் விட்டுக்கொடுத்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. உற்றார் - உறவினர்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். அசையும் - அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும்.
கொடுக்கல் - வாங்கல்:
பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாகக்கூடிய காலமென்பதால கொடுக்கல் - வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிக்க சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். பணவிஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதினால் வீண்பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வீர்கள். நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். வீண் வம்பு, வழக்குகள் ஏற்படும்.
தொழில் வியாபாரம்:
தொழில் வியாபாரம் சுமாராகத்தன் நடைபெறும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் மிகவும் கவனம் தேவை. புதிய கூட்டாளிகளால் தேவையற்ற மனசஞ்சலங்கள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனமுடனிருப்பது நல்லது. பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.
உத்தியோகம்:
பணியில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். செய்யும் பணியில் இடையூறுகள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைப்பளுவை குறைத்துக்கொள்ள முடியும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல் அதிகரிக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானமுடனிருப்பது நல்லது.
அரசியல்:
மக்களின் ஆதரவு சிறப்பாக இருந்தாலும் அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் இடையூறுகள் உண்டாகும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்தாலும் எந்தவொரு காரியத்திலும் திருப்தி இருக்காது. உடன் பழகுபவர்களுடன் எச்சரிக்கையுடனிருப்பது நல்லது.
விவசாயிகள்:
பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் விலைபொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்காது. இதனால் பட்ட பாட்டிற்கு பலன் குறைவாக இருக்கும். நீர்வரத்து குறைவதால் பயிரிட அதிக செலவு ஏற்படும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் விரயங்கள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளிலும் தாமத நிலை ஏற்படும்.
பெண்கள்:
உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியாமல் போகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கணவன் - மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றிமறையும்.
கலைஞர்கள்:
எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் கிடைத்த வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. வரவேண்டிய பணத் தொகைகளில் சற்று இழுபறி நிலை ஏற்பட்டாலும் வரவேண்டிய நேரத்தில் வந்து சேரும். உடனிருப்பவர்களிடம் பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.
மாணவ - மாணவியர்:
கல்வியில் சற்றே மந்த நிலை உண்டாகும். முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடையலாம். தேவையற்ற நட்புகளால் வீண் பிரச்சினைகளுக்கு ஆளாவீர்கள். வண்டி, வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. பொழுது போக்குகளாலும் கல்வியில் நாட்டம் குறையும்.
உடல் ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றியபடியே இருக்கும். மனக்குழப்பங்களும் நிம்மதிக் குறைவுகளும் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். அலைச்சல், டென்சன் அதிகரிக்கும்.
பூரட்டாதி 4ம் பாதம்:
இந்த ஆண்டு வீண் மனகுழப்பம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பிரச்சனையில் சிக்கி கொள்ளலாம். ஆன்மிக எண்ணம் ஏற்படும். விருப்பமான நபரை சந்திப்பதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் பெற முடியும்.
உத்திரட்டாதி:
இந்த ஆண்டு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், வீண் அலைச்சலும் உண்டாகும். கவனமாக வேலைகளை செய்யாவிட்டால் மேல் அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் உண்டாகலாம் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படும் நிலை உருவாகலாம். பிள்ளைகளுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
ரேவதி:
இந்த ஆண்டு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் சந்திப்பு உண்டாகும். வீண் செலவும் ஏற்படலாம். கோபத்தை குறைப்பது நல்லது. மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். அதே நேரத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும்.
பரிகாரம்: வியாழன்தோறும் அருகிலிருக்கும் நவக்கிரக கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும். ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும்.
மேற்கு, வடக்கு அதிர்ஷ்ட திசைகள்.
அதிர்ஷ்ட எண்கள் - 2, 6
இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.
பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள், ஸ்ரீ துர்முகி வருஷப் பிறப்பின் பலன்களை, கணித்து எழுதியுள்ளார். அவரது விரிவான ஜோதிட பலன்களை இங்கே காணலாம்.
நிகழும் மங்களகரமான 1191ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீ மன்மத வருஷம் உத்தராயணம் சசி ரிது பங்குனி மாதம் 31ம் தேதி - 13-04-2016 புதன்கிழமை சுக்லபக்ஷ சப்தமி திருவாதிரை நக்ஷத்ரம் 4ம் பாதம் அதிகண்ட நாமயோகம் பத்ரை கரணம் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி மாலை மணி 6.30க்கு துலா லக்னத்தில் ஸ்ரீதுர்முகி ஆண்டு பிறக்கிறது.
ஆண்டு பிறக்கக் கூடிய நேரத்தில் லக்னத்திற்கு தனஸ்தானத்தில் செவ்வாய் சனியும், பூர்வ புண்ணியஸ்தானத்தில் கேதுவும் ரண ருண ஸ்தானத்தில் லக்னாதிபதி சுக்கிரனும், சப்தம ஸ்தானத்தில் சூரியன் புதன், பாக்கியஸ்தானத்தில் சந்திரனும் லாபஸ்தானத்தில் குரு ராகு என நவகிரகங்கள் வலம் வருகிறார்கள்.
பொதுப் பலன்கள்:
பொதுவில் உலகளவில் அரசு சார்ந்த விஷயங்களில் சிறிது பிரச்சனைகள் தலைதூக்கலாம். அரசாங்கம் ஒவ்வொரு முடிவையும் தவறாக எடுப்பதும் அதற்கு பரிகாரமாக மேல் மட்டத்தில் இருக்கும் அதிகாரிகள் அதை சரி செய்வதுமாக இருக்கும். நாடுகளுக்குள் மோதல்கள் வரலாம். இவ்வருடம் வெப்பம் அதிகமாக இருக்கும்.
பணநடமாட்டம் சீராக இருக்கும். கல்வி சார்ந்த விஷயங்களில் தொய்வு ஏற்படும். அதே வேளையில் குரு கேது சம பார்வையால் ஆன்மீகம் மிக அதிகமான வளர்ச்சி காணும். பூமி நிலம் சம்பந்தாமான பிரச்சனைகள் அதிகமாவதும் அதை தீர்க்க நீதிமன்றத்தை நாடுவதும் அதிகமாகும். ராகு இருக்கும் இடத்திற்கு ரண ருண ரோக ஸ்தானமான மகர ராசியை சனி பார்க்கிறார். அறுவை சிகிச்சை சம்பந்தமான புதிய கண்டுபிடிப்பு உருவாகும்.
அதே வேளையில் கேதுவிற்கு கேந்திரத்தில் சனி பகவான் இருக்கிறார். ஆன்மீகம் - கோவில் சம்பந்தமான பிரச்சனைகளில் சிறிது சுணக்கம் ஏற்படும். ராகு - கேது சஞ்சாரம் செய்யும் இடங்களால் கலப்புத் திருமணங்கள் அதிகமாகும். நிலம் - நீர் - காற்று - ஆகாயம் - நெருப்பு என பஞ்சபூதங்கள் மூலமாகவும் மக்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும். தற்கொலைகள் அதிகமாகும். குருப் பெயர்ச்சிக்குப் பின் ஜீவகாருண்யம் மிக அற்பமாக இருக்கும்.
குருப் பெயர்ச்சி:
இவ்வருடம் ஆடி மாதம் 18ம் தேதி 2016 ஆகஸ்ட் 2ம் தேதி செவ்வாய்கிழமை குருபகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். பெயர்ச்சியான பின் அவர் ரிஷபம் - மகரம் - மீனம் ராசிகளைப் பார்ப்பார்.
பன்னிரு ராசிகளுக்குமான விரிவான பலன்கள்.உரிய இராசிகளின் படங்கள் மீது அழுத்திப் பலன்களைக் காண்க.
மேடம்:அசுபதி, பரணி, கார்த்திகை-1ம் பாதம் மற்றும் சு, சொ, சோ, சை, ல, லீ, லு, லோ, அ, ஆ ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.
எடுக்கும் காரியங்களை வேகத்தோடும், விவேகத்தோடும் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!!
நினைத்தது நிறைவேறும் ஆண்டாக அமையும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். இதுவரை தடைபட்ட திருமணம் போன்ற சுப காரியங்கள் தடைவிலகி இனிதாக நடைபெறும். புத்திர பாக்கியம் எதிர்பார்த்திருந்தவர்களுக்கு சந்தான பாக்கியம் கிட்டும். பலர் சொந்தமாக வீடு, வாகனம் வாங்கி மகிழ்வர். பூர்வீக சொத்துக்களால் லாபம் அடைவர். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கணவன் - மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். வேலையில் எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு பெற்று மனமகிழ்வர். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
குடும்ப பொருளாதாரம்:
குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். திருமணம் சுபச் செலவுகள் உண்டாகும். சொந்த பூமி, மனை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைக்கும். இதன் மூலம் உங்கள் பொருளாதார நிலை சீராகும்.
கொடுக்கல்-வாங்கல்:
பொருளாதார நிலை சீராக இருப்பது உங்களின் கொடுக்கல் வாங்கல் நல்ல நிலைமையில் இருப்பதைக் காட்டுகிறது. பிறரை நம்பி பெரிய தொகையைக் கடனாக கொடுக்கும் போது சற்று சிந்தித்துச் செயல்பட வேண்டும். உடனிருப்பவர்களே பண விஷயத்தில் துரோகம் செய்யத் துணிவார்கள். உங்களுக்கு உள்ள வம்பு வழக்குகள் நல்ல ஒரு முடிவுக்கு வரும்.
தொழில், வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் பெருகும். நவீன கருவிகளை வாங்க அரசு வழியில் கடனுதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளும் சேருவார்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். உங்களுக்குள்ள வங்கிக் கடன்கள் குறையும்.
உத்தியோகம்:
செய்யும் பணியில் உயர்வான நிலை ஏற்படும். கௌரவமான பதவிகள் கிடைக்கப்பெறும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலருக்கு எதிர்பார்த்த இட மாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.
அரசியல்:
பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடி வரும். மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். பண வரவுகளுக்கும் பஞ்சம் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
விவசாயிகள்:
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். விளைபொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கப்பெறுவதால் லாபங்கள் பெருகும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் புதிய நவீன கருவிகளையும் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு பூமி, மனை வாங்கும் யோகமும் கிட்டும்.
பெண்கள்:
உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கணவன் - மனைவி உறவில் அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும். உற்றார் - உறவினரை அனுசரித்துச் செல்வது நல்லது. பூர்வீக வழியில் லாபம் கிட்டும்.
கலைஞர்கள்:
திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதுவரை நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு கிடைக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். புதிய கார், பங்களா போன்றவற்றை வாங்குவீர்கள்.
மாணவ - மாணவியர்:
கல்வியில் நல்ல முன்னேற்றமான நிலையிருக்கும். திறமைக்கேற்ற மதிப்பெண்களைப் பெற்று முன்னேறுவீர்கள். விளையாட்டு போட்டிகளிலும் பரிசுகளையும் பாராட்டுகளையும் பெறுவீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும்.
உடல் ஆரோக்யம்:
ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாட பணிகளை திறம்பட செய்து முடிக்க முடியும். குடும்பத்திலுள்ளவர்களும் சில நேரங்களில் மருத்துவச் செலவுகளை ஏற்படுத்துவார்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.
அஸ்வினி:
இந்த ஆண்டு நீங்கள் பயமின்றி எந்த காரியத்திலும் இறங்கலாம். அவசரமாக எதையும் செய்ய தோன்றும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எல்லா அனுகூலமும் கிடைக்க பெறும். ஆனால் வீண்வாக்குவாதத்தால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டு செயல்படுத்துவது வளர்ச்சிக்கு உதவும்.
பரணி:
இந்த ஆண்டு வாடிக்கையாளர்களிடம் சாதூர்யமாக பேச வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு துணிச்சல் அதிகரிக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் வேலையில் வேகம் காட்டுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்கும் போது அவசரப்படாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் தன்மையாக பேசுவது நல்லது.
கார்த்திகை 1ம் பாதம்
இந்த ஆண்டு கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை குறைவு ஏற்படலாம் கவனம் தேவை. பிள்ளைகளுக்காக செய்யும் வேலைகளில் தடை ஏற்படலாம். கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம். பெண்களுக்கு எந்த காரியத்திலும் அவசரம் காட்ட தோன்றும். நிதானமாக செய்தால் வெற்றி நிச்சயம். வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்: முடிந்த வரை செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வரவும். செவ்வாய்கிழமை தோறும் அம்மனுக்கு செவ்வரளிப் பூவால் மாலை கட்டி அர்ப்பணிக்கவும்.
கிழக்கு, வடக்கு அதிர்ஷ்ட திசைகள்.
அதிர்ஷ்ட எண்கள் - 1, 3, 5
இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.
ரிஷபம்: கார்த்திகை-
2, 3, 4ம் பாதம், ரோகினி, மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள் மற்றும் இ, உ,
எ,ஏ, ஒ, வா, வ, வி, ஆ, லோ ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர்
கொண்டவர்கள்
தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் அதிக அக்கறையும், ஆடை ஆபரணங்களின் மீது ஆர்வமும் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே! இந்த ஆண்டு உங்களுக்கு தேவையற்ற அலைச்சல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். குடும்பத்திலுள்ளவர்களால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவர் - மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் உண்டாகும். உற்றார் - உறவினர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும், திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் ஏற்படும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். ஆனால் எதையும் சமாளிக்கும் திறன் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்திலும் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் இருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாதிருப்பது நல்லது. கூட்டாளிகளும், தொழிலாளர்கள் ஓரளவுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும்.
குடும்பப் பொருளாதாரநிலை:
கணவன் - மனைவியிடையே அடிக்கடி வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. மணமாகாதவர்களுக்கு சுப காரியங்கள் நடைபெற தாமத நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சிகளிலும் தடைகளுக்குப் பின்பே வெற்றிபெற முடியும். அசையும்-அசையா சொத்துகளால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும்.
கொடுக்கல் - வாங்கல்:
பொருளாதார நிலை சுமாராக இருக்கும் என்பதால் பணம் கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். வாங்கிய பணத்தை திருப்பித்தருவதில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்ததைக்கேட்டால் அடுத்தது பகையாக மாறும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். பூர்வீக சொத்துக்களால் வீண் செலவுகளும், நெருக்கடிகளும் உண்டாகும்.
தொழில், வியாபாரம்:
தொழில், வியாபாரத்தில் கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றாலும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் லாபம் குறையும். உடனிருப்பவர்களே தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பையும் பெறமுடியாமல் போகும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து நிதானமுடன் செயல்பட்டால் லாபம் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.
உத்தியோகம்:
பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிலும் திறம்படச் செயல்படுவீர்கள். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும், உத்தியோக உயர்வுகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி உண்டாகும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும், பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பதும் நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் உண்டாகும். வேலைப்பளு அதிகமாக இருக்கும்.
அரசியல்:
மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை பூர்த்திசெய்தால் உங்கள் பதவிக்கு பங்கம் ஏற்படாது பார்த்துக்கொள்ள முடியும். கட்சிப்பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள வேண்டிவருவதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் நிலையில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. வாக்குறுதிகள் கொடுக்கும்போது சிந்தித்துச் செயல்படவும்.
விவசாயிகள்:
பயிர் விளைச்சல் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். நவீன முறைகளைக் கையாண்டு விளைச்சலைப் பெருக்க முடியும் என்றாலும் வேலைக்கு தக்க சமயத்திற்கு ஆட்கள் கிடைக்கமாட்டார்கள். இதனால் செய்யும் தொழிலில் சுணக்கம் ஏற்படும். அரசு வழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கும். நீர்வரத்து சிறப்பாகவே இருக்கும்.
பெண்கள்:
உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனமெடுப்பது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம். குடும்ப பிரச்சனைகளை வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்ளாதிருக்கவும் மணவயதை அடைந்தவர்களுக்கு மணமாக சில தடைகள் ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருக்கும்.
கலைஞர்கள்:
பயணங்களால் அலைச்சல்களும் உடல் சோர்வும் ஏற்படும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் பாதிப்பு ஏற்படும். நினைத்த காரியங்களை நிறைவேற்ற முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது.
மாணவ-மாணவியர்:
மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாகக்கூடிய காலமிது என்பதால் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. கல்விரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் தடைகள் ஏற்படும். தேவையற்ற நட்புகள் உங்களை வேறுபாதைக்கு அழைத்துச்செல்லும். எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும்.
உடல் ஆரோக்கியம்:
தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் உடல் ஆரோக்கியத்தால் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். உடல்நிலை சோர்வடையும். குடும்பத்திலுள்ளவர்களுக்கும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். எதிர்பாராத வீண் விரயங்களும் ஏற்படும்.
கார்த்திகை 2, 3, 4 பாதம்:
இந்த ஆண்டு அவசரப்படுவதை தவிர்ப்பது நன்மை தரும். வீண் செலவும், அலைச்சலும் உண்டாகலாம். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம். எனவே எதிலும் மிகவும் கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் தாமதம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.
ரோகிணி:
இந்த ஆண்டு உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவர்களுக்கான பொறுப்புகளை ஏற்கும் போது எச்சரிக்கை தேவை. தீ, ஆயுதம் இவற்றை கையாளும் போது கவமனாக இருப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் மனகவலை ஏற்படலாம்.
மிருக சிரீஷம் 1, 2, பாதம்:
இந்த ஆண்டு மற்றவர்களுக்கு உதவி செய்யபோய் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். கவனம் தேவை. மாணவர்களுக்கு: கல்வியில் எதிர்பாராத தடை, தாமதம் உண்டாகலாம். சிறிய வேலையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும்.
பரிகாரம்: முடிந்த வரை வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று தேங்காய் தீபம் ஏற்றி 11 முறை வலம் வரவும்.
கிழக்கு, வடக்கு அதிர்ஷ்ட திசைகள்.
அதிர்ஷ்ட எண்கள் - 3, 6, 9
இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.
மிதுனம்: மிருகசீரிஷம்
3, 4ம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள் மற்றும் கா,
கி, கு, கூ, க, ச, சே, கோ, கை, ஹை ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர்
கொண்டவர்கள்.
பார்வைக்கு வெகுளி போல இருந்தாலும் தன்னுடைய காரியங்கள் அனைத்தையும்
எளிதில் சாதித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!!இந்த ஆண்டு நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதம் உண்டாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன் - மனைவிடையே சிறு சிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படும் என்றாலும் பெரிய கெடுதி இல்லை. பொன்பொருள் சேரும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். தொழில் வியாபார செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். பணம் கொடுக்கல்-வாங்கல் விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்யத் துணிவார்கள் என்பதால் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் சற்று தாமத்த்ப்படும். சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் லாபங்களுக்கு குறை இருக்காது.
பொருளாதார் நிலை:
கணவன் - மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றிகிட்டும். புத்திர வழியில் சிறு சிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். தெய்வ தரிசனக்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பண வரவு சுமாராக இருக்கும்.
கொடுக்கல்-வாங்கல்:
பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்துச் செயல்படவும். கொடுத்த கடன்களை வசூலிப்பதிலும் சற்று தடைகள் உண்டாகும். தேவையற்ற வம்பு வழக்குகள், பூர்வீக சொத்துக்களால் அனுகூலமற்ற நிலைகள் தோன்றும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.
தொழில், வியாபாரம்:
தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலையே இருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருக்கும். பல பெரிய மனிதர்களின் உதவிகளும் கிடைக்கும். புதிய புதிய வாய்ப்புகள் தேடிவந்தாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.
உத்தியோகம்:
பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறாப்பாகவே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை உண்டாக்கும். உயரதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை உண்டாகும்,
அரசியல்:
மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்றாலும் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டியிருக்கும். கட்சிப்பணிகளுக்காக நிறைய செலவாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால்தான் முன்னேற முடியும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் ஓரளவுக்கு ஆதாயப் பலனையே அடையமுடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படும்.
விவசாயிகள்:
விளைச்சல் ஓரளவுக்குத்தான் இருக்கும். போட்ட முதலீட்டினை எடுக்கவே அரும்பாடு பட வேண்டிவரும். வயல் வேலைகளுக்கு தகுந்த நேரத்தில் வேலைக்கு ஆள் கிடைக்கமாட்டார்கள். சந்தையிலும் விளைபொருளுக்கு சுமாரான விலையே கிடைக்கும். புதிய பூமி, மனை வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. பங்காளிகளை அனுசரித்துச் செல்லவும்.
பெண்கள்:
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடனேயே செயல்படுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன்கள் அமைவதில் தாமத நிலை ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்ளவும் புத்திர வழியில் மனசஞ்சலங்கள் தோன்றும்.
கலைஞர்கள்:
தகுந்த பாத்திரங்களுக்காக காத்திராமல் கிடைப்பதைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது. போட்டி, பொறாமைகள் அதிகரிப்பதால் நல்ல வாய்ப்புகள் பறிபோகும். ஆடம்ப்ர வாழ்க்கையிலும் பாதிப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும்.
மாணவ-மாணவியர்:
கல்வியில் மந்த நிலை ஏற்படக்கூடிய காலம் என்பதால் சற்று ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற பொழுதுபோக்குகளால் மனம் வேறுபாதைகளுக்கு மாறிச்செல்லும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவைப் பெற இயலாமல் போகும்.
உடல் ஆரோக்யம்:
உடல் ஆரோக்யம் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று கூறமுடியாது. அடிக்கடி பாதிப்புகள் உண்டாகியபடியே இருக்கும். மனைவி, பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய ஆரோக்கிய பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். நீண்டநாள் நோய்களுக்காக சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பவர்கள் உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது.
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
இந்த ஆண்டு எல்லாவிதமான முன்னேற்றத்தையும் தரும். வாகனங்களால் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் அல்லது வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
திருவாதிரை:
இந்த ஆண்டு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். திருமணம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவும், கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் உண்டாகும். பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.
புனர்பூசம் 1, 2, 3 பாதம்:
இந்த ஆண்டு தொலைதூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். காரிய தடை நீங்கும். எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
பரிகாரம்: முடிந்த வரை புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று நல்லெண்ணையில் தீபம் ஏற்றி 7 முறை வலம் வரவும். புதன்கிழமை தோறும் பெருமாளுக்கு துளசி சாற்றி வழிபடவும்.
தென்கிழக்கு, வடக்கு, வட மேற்கு அதிர்ஷ்ட திசைகள்.
அதிர்ஷ்ட எண்கள் - 1, 3, 5, 9
இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.
கடகம்: புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் மற்றும் ஹி, ஹூ, ஹ, ட, டு, டே, டோ ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்
நல்ல அறிவாற்றலும், கற்பனைத்திறனும் எதிலும் சிந்தித்துச் செயல்படும் குணமும் கொண்ட கடக ராசி அன்பர்களே!!இந்த ஆண்டு ராகு குடும்ப ஸ்தானத்தில் இருந்தாஅலும் உங்கள் ராசிக்கு நட்பு கிரகமான குருவுடன் இணைந்திருக்கிறார். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி கணவன் - மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம், கார், பங்களா போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல் - வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவும் முடியும். லாபங்கள் தடைபடாது. வெளிவட்டாரத தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தினை அடையமுடியும். அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
பொருளாதார நிலை:
குடும்ப்த்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். கணவன் - மனைவி ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவுகள் தாராளமாக அமையும். பொன்பொருள் சேர்க்கை சேரும். சிலருக்கு, பூமி, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நடைபெறும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.
கொடுக்கல்-வாங்கல்:
பொருளாதார நிலை மிகவும் முன்னேற்றகரமாக இருப்பதால் கொடுக்கல்-வாங்கலில் சரளமான நிலையினை அடையமுடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.
தொழில் வியாபாரம்:
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். அரசுவழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை அபிவிருத்தியை பெருக்க உதவும். வெளியூர் தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கப்பெறும்.
உத்தியோகம்:
பணியில் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியினைத் தரும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப்பெறும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். எடுக்கும் பணிகளை திறம்பட செய்துமுடிக்க முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். நினைத்தது யாவும் நிறைவேறி மகிச்சி தரும்.
அரசியல்:
பெயரும், புகழும் உயரக்கூடிய காலமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் வெற்றிகள் குவியும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். மாண்புமிகு பதவிகள் தேடிவரும்.
விவசாயிகள்:
பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விளைபொருளுக்கேற்ற விலையும் சந்தையில் கிடைப்பதால் தாராள தன வரவுகள் உண்டாகும். நீர்வரத்து தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகளைக் கையாண்டு அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள். புதிய பூமி, நிலம், மனை போன்றவற்றை வாங்கும் யோகமும் உண்டாகும்.
பெண்கள்:
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும். கணவன் - மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். சொந்த கார், பங்களா போன்றவற்றை வாங்குவீர்கள். சேமிப்பும் பெருகும்.
கலைஞர்கள்:
புதிய வாய்ப்புகள் தேடிவரும். புதுப்புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். கைக்குவராமலிருந்த பணத்தொகைகளும் தடையின்றி வந்து சேரும். சுகவாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. புதிய கார், பங்களா போன்றவற்றையும் வாங்கி மகிழ்வீர்கள்.
மாணவ மாணவியர்:
நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெறமுடியும். கல்விக்காக வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். விளையாட்டும் போட்டிகளில் சிறப்பான பரிசுகளைப் பெறுவீர்கள்.
உடல் ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கடந்த கால மருத்துவச் செலவுகள் குறையும். மனைவி, பிள்ளைகள் சுபிட்சமாக அமைவார்கள். மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும். நீண்ட நாள் மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
புனர் பூசம் 4ம் பாதம்:
இந்த ஆண்டு மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.
பூசம்:
இந்த ஆண்டு சரக்குகளை பாதுகாப்பாக வைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும்.
ஆயில்யம்:
இந்த ஆண்டு குழந்தைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சி தரும். பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டில் இருக்கும் போட்டிகள் நீங்கும். மனகுழப்பம் நீங்கி. காரிய வெற்றி கிடைக்கும். மன நிம்மதி கிடைக்கும்.
பரிகாரம்:
திங்கட்கிழமை தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று இலுப்பை எண்ணையில் பஞ்சமுக தீபம் ஏற்றி வணங்கி 16 முறை வலம் வரவும். திங்கட்கிழமை தோறும் அம்மனுக்கு அரளிப்பூமாலை சாற்றி வழிபடவும்.
மேற்கு, வடக்கு, தென்கிழக்கு அதிர்ஷ்ட திசைகள்.
அதிர்ஷ்ட எண்கள் - 1, 3, 9
இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.
சிம்மம்: மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் மற்றும் மா, மி, மீ, மு, மே, மோ, டா, டூ, டே ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்
வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டுமென்ற வேட்டை கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!!இந்த ஆண்டு உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் அன்றாட்டப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றிமறையும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். உற்றார்-உறவினர்களை அனுசரித்துச் செல்லவேண்டியிருக்கும். பணவரவுகளில் சுமாரான நிலையே இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் - வாங்கலிலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கல் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாக்கக்கூடிய காலம் என்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது.
பொருளாதார நிலை:
பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை நிலவினாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் வீண்செலவுகளும், புத்திர வழியில் மகிழ்ச்சி குறைவும் ஏற்படலாம். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் உற்றார்-உறவினர்களுக்கு தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.
கொடுக்கல்-வாங்கல்:
பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை கொடுக்கல்-வாங்கலில் ஈடுபடுத்தும்போது கவனமுடன் செயல்படுவது நல்லது. பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண்பிரச்சினைகளில் சிக்கிகொள்வீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளின் தீர்ப்பு இழுபறி நிலையிலிருக்கும்.
தொழில், வியாபாரம்:
செய்யும் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். அவ்வப்போது சற்று மந்தமான நிலை காணப்பட்டாலும் பொருட்தேக்கம் உண்டாகாது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலம் அடைவார்கள். அபிவிருத்தியும் பெருகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை.
உத்தியோகம்:
பணியில் சற்று கவனமுடன் செயல்படுவதும் உயரதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தைக் கையாள்வதும் நல்லது. உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைப் பளுவை குறைத்துக் கொள்ள முடியும். புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைப்பதை பயன்படுத்திக் கொள்ளவும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும்.
அரசியல்:
பெயர், புகழை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய காலமிது என்பதால் மக்களின் ஆதரவைப் பெற முயற்சி செய்வது நல்லது. எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். கட்சிப் பணிகளுக்காக சில செலவுகளை செய்ய நேரிடும். மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சுமாராக இருந்தாலும் போட்ட முதலீட்டினை எடுத்துவிட முடியும். நீர்வரத்து தேவைக்கேற்றபடி இருக்கும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். உற்றர்-உறவினர்களை அனுசரித்துச் செல்வது. வாய்க்கால், வரப்பு பிரச்சினைகளை பெரிதுபடுத்தாமலிருப்பது நல்லது.
பெண்கள்:
உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. பொருளாதார நிலை ஓரளவுக்கு தேவைக்கேற்றபடி இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். கணவன் - மனைவி சற்று விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது. ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கவும்.
கலைஞர்கள்:
கிடைத்த வாய்ப்புகளை கைநழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும்
மாணவ-மாணவியர்:
கல்வியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் அனுகூலத்தை அடையலாம். விளையாட்டு போட்டிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையால் வீண் அலைச்சலையும், பிரச்சனைகளையும் எதிர்கொள்ள நேரிடும். அரசு வழியில் ஆதரவு கிட்டும்.
உடல் ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரணக் கோளாறு போன்றவை தோன்றும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்படும் என்றாலும் அன்றாடப் பணிகளில் உங்களின் தனித்திறனால் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு நல்ல பெயரெடுப்பீர்கள்.
மகம்:
இந்த ஆண்டு தடைபட்டு வந்த காரியங்கள் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மை உண்டாகும். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகப்படும். உடல் நலம் சீரடையும். மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும்.
பூரம்
இந்த ஆண்டு அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக நடக்கும். ஆர்டர்கள் பெறுவதில் இருந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். மற்றவர்கள் மூலம் உதவி கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். இதனால் வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும்.
உத்திரம் 1ம் பாதம்:
இந்த ஆண்டு கவுரவம் அந்தஸ்து உயரும். துக்கமும், துன்பமும் நீங்கும். பெண்களுக்கு தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கி சாதகமாக நடந்து முடியும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் உண்டாகும். எதிர்கால கல்வி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். திறமை வெளிப்படும். எல்லா பிரச்சனைகளும் தீரும். மனகவலை அகலும்.
பரிகாரம்: ஞாயிறுகிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று 9 முறை வலம் வரவும். சூரிய உதயத்திற்குப் பின் தூங்குவதைத் தவிர்க்கவும். பிரதோஷம் தோறும் அபிஷேகத்திற்கு எலுமிச்சை சாறு அர்ர்பணிக்கவும்.
கிழக்கு, வடக்கு, வடகிழக்கு அதிர்ஷ்ட திசைகள்.
அதிர்ஷ்ட எண்கள் - 3, 6, 9
இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.
கன்னி: உத்திரம்
2, 3, 4ம் பாதம், ஹஸ்தம், சித்திரை 1, 2ம் பாதங்கள் மற்றும் டோ, ப, பா,
பி, பூ, ஷ, ட, பே, போ ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.
அழகிய உடல்வாகு நீல விழியும், சிறந்த ஒழுக்கமும் கொண்ட கன்னி ராசி அன்பர்களே!!இந்த ஆண்டு நீங்கள் எடுத்த முயற்சிகளில் வெற்றியினைப் பெற்றிடுவீர்கள். பண வரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத வகையில் உதவிகள் கிட்டும். குடும்பத்தில் சுபவிரயங்கள் ஏற்படும் என்பதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். கணவன் - மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றிமறையும். தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றமான நிலை ஏற்படும். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் வேலை பளு அதிகமாக இருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. எதையும் சமாளித்து ஏற்றத்தைப் பெறுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். வம்பு, வழக்குகளில் சாதகமான பலன் உண்டாகும்.
பொருளாதார நிலை:
குடும்பத்தின் பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத சுபச்செலவுகள் ஏற்படும். வீண் விரயங்கள் அதிகரிக்கும். கணவன் - மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பதும், முன்கோபத்தைக் குறைப்பதும் நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்களுக்குப் பின் அனுகூலம் உண்டாகும்.
கொடுக்கல் - வாங்கல்:
பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் வீண் செலவுகள் அதிகரிக்கக்கூடிய காலம் என்பதால் முடிந்தவரை பெரிய தொகைகளை கொடுக்கல்-வாங்கல் போன்றவற்றில் ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுத்த கடன்களை திரும்பப்பெறுவதில் தடைகள் ஏற்படும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாதிருப்பது நல்லது.
தொழில், வியாபாரம்:
தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு சுமாரான நிலைகள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.
உத்தியோகம்:
பணியில் சற்று வேலைப் பளு கூடுதலாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அனுகூலப் பலனை பெற முடியும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப்படும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை குறைத்துகொண்டால் வீண் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும். புதிதாக வேலைதேடுபவர்கள் கிடைப்பதைப் பயன்படுத்திக்கொள்ளவும்.
அரசியல்:
பெயர் புகழுக்கு இழுக்கு நேராமல் பாதுகாத்துகோள்ளவேண்டிய நேரம் என்பதால் எல்லா விஷயங்களிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. அரசு வழியில் வீண் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மக்களின் ஆதரவு ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் எதையும் எதிர்கொண்டு வெற்றிபெற முடியும். பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும்.
விவசாயிகள்:
பயின் விளைச்சல் சுமாராகத்தானிருக்கும் போட்ட முதலீட்டினை எடுக்க அரும்பாடுபட வேண்டிவரும். நீர்வரத்து போதிய அளவு இருக்கும் என்றாலும் வேலையாட்கள் சரியான நேரத்திற்கு வேலைக்கு கிடைக்கமாட்டார்கள். வாய்க்கால், வரப்பு பிரச்சினைகளால் வீண் விவாதங்கள் ஏற்படும். பண வரவு தேவைக்கேற்றபடி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.
பெண்கள்:
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் வீண் விரயங்கள் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன்கள் அமைவதில் தாமத நிலை ஏற்படும். அசையும் - அசையா சொத்துக்களால் வாங்கும் முயற்சிகளில் அனுகூலம் கிட்டும்.
கலைஞர்கள்:
மக்களின் ஆதரவும், ரசிகர்களின் ஆதரவும் சிறப்பாகவே இருக்கும். கிடைத்த வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொண்டால் சிரிய பட்ஜெட் படம் என்றாலும் நல்ல பெயரினை வாங்கித்தரும். வரவேண்டிய பணத்தொகைகளில் சற்று இழுபறி நிலை இருக்கும்.
மாணவ-மாணவியர்:
கல்வியில் முன்னேற்றத்தினைப் பெற்றுவிட முடியும். சிறுசிறு இடையூறுகள், தேவையற்ற நட்பு வட்டாரங்கள் ஏற்படுவதால் அவ்வப்போது கல்வியில் மந்த நிலை தோன்றினாலும் எதையும் சமாளித்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பயணங்களில் கவனமுடனிருப்பது நற்பலனைத் தரும்.
உடல் ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகக்கூடும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படுவதால் மனநிம்மதி குறைவு உண்டாகும். நீண்டநாள் பிரச்சினைகளுக்காக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பவர்கள் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது என்றாலும் பெரிய கெடுதியில்லை.
உத்திரம் 2, 3, 4 பாதம்:
இந்த ஆண்டு நிம்மதியும், சுகமும் அதிகமாகும். புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்ல வேண்டி வரலாம். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பலவகையிலும் பிறர் உதவி கிடைக்க பெறுவீர்கள். புத்திசாதூர்யம் அதிகரிக்கும். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். புதிய ஆர்டர்கள் பெறவும், வாடிக்கையாளர்களை திருப்தி செய்யவும் அலைய வேண்டி இருக்கும்.
அஸ்தம்:
இந்த ஆண்டு உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களுக்காக பொறுப்புகள் ஏற்கும் போது மிகவும் கவனமாக இருப்பது வீண்பழி ஏற்படாமல் தடுக்கப்படும். அனுபவபூர்வமான அறிவுதிறன் கூடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம்.
சித்திரை 1, 2, பாதம்:
இந்த ஆண்டு செலவு செய்ய நேரிடும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். பெண்களுக்கு மற்றவர்கள் உதவி கிடைப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண அனுபவ பூர்வமான அறிவு கைகொடுக்கும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும். காரிய தடை நீங்கும்.
பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் அல்லது சாஸ்தா கோவிலுக்குச் சென்று நெய் அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வரவும். புதன் ஹோரைகளில் பெருமாள் அல்லது விநாயகர் அல்லது சாஸ்தா கோவிலுக்கு மரிக்கொழுந்தை அர்ப்பணிக்கவும்.
மேற்கு, தெற்கு அதிர்ஷ்ட திசைகள்.
அதிர்ஷ்ட எண்கள் - 6, 9
இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.
துலாம்:
சித்திரை 3, 4ம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள் மற்றும் ர,
ரா, ரி, ரு, ரே ,ரோ, த , தா, தி, து ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக
பெயர் கொண்டவர்கள்.
அனைவரையும் கவர்ந்திழுக்ககூடிய அழகும், அறிவும் உடைய துலா ராசி அன்பர்களே!!இந்த ஆண்டு குடும்பத்தில் தடைபட்டுக்கொண்டிருந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. சுக வாழ்வு அமையும். சொந்தமாக வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கக்கூடிய யோகமும் சிலருக்கு உண்டாகும். எதிலும் வெற்றிமேல் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம். பல இடையூறுகளைச் சந்தித்து வந்தாலும் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அபிவிருத்தியும் லாபமும் பெருகு. வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியொகத்தில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் தற்போது கிடைக்ககூடிய வாய்ப்புகள் உண்டாகும்.
பொருளாதார நிலை:
குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். கணவன் - மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது பணவரவுகள் தாராளமாக இருப்பதால் பொன் பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவை வாங்கும் யோகம் உண்டாகும்.
கொடுக்கல்-வாங்கல்:
பணவரவுகள் தாராளமாக இருப்பதால் கொடுக்கல்-வாங்கலும் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் வீடு தேடிவரும். பண விஷயமாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். பொருளாதார உயர்வுகளால் குடும்பத் தேவைகள் மட்டுமின்றி பிற தேவைகளும் பூர்த்தியாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.
தொழில், வியாபாரம்:
தொழில், வியாபாரம் அமோகமாக நடைபெறும். போட்டிகள் குறையும். நல்ல வாய்ப்புகள் தேடிவரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். வெளியூர், வெளிநாடுகள் மூலமும் முன்னேற்றம் உண்டாகும். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெறும்
உத்தியோகம்:
பணியில் தடைபட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் தடை விலகி கிடைக்கப் பெறும். கௌரவமும், புகழும் உயரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிகேற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரம் உயர்வடையும்.
அரசியல்:
பெயர், புகழ் உயர்வடையும். மக்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்யநேர்ந்தாலும் வரவேண்டிய பணவரவுகள் வந்து சேரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் உண்டாகும். கௌரவ பதவிகள் கிடைக்கும்.
விவசாயிகள்:
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். நவீன முறைகளைக் கையாண்டு பயிர் விளைச்சலைப் பெருக்குவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். நீர்வரத்து தாராளமாக இருக்கும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். அரசு வழியில் மானிய உதவிகள் கிட்டும். சுபகாரியங்கள் யாவும் கைகூடும்.
பெண்கள்:
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு அசையா சொத்துக்களால் லாபம் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும்
கலைஞர்கள்:
எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று உங்களின் நடிப்புத்திறன் வெளிச்சத்திற்க் வரும். ரசிகர்களின் ஏகோபித்த ஆத்ரவுகளால் மனநிறைவு உண்டாகும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வுக்கு பஞ்சம் ஏற்படாது. புதிய கார், பங்களா போன்றவற்றையும் வாங்கிச் சேர்ப்பீர்கள்.
மாணவ-மாணவியர்:
கல்வியில் முன்னேற்றமான நிலையிருக்கும். தேவையற்ற நட்புகளையும் பொழுதுபோக்குகளையும் தவிர்ப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டிச்செல்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. குடும்பத்திலுள்ளவர்கள் அவ்வளவு நலமாக இருப்பார்கள் என்று கூறமுடியாது.
சித்திரை 3, 4 பாதம்:
இந்த ஆண்டு எதிலும் மிகவும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருப்பது நல்லது. ராசியாதிபதியால் திடீர் உடல்நல பாதிப்பு உண்டாகலாம். மனம் நிலை கொள்ளாமல் தவிக்கும் நிலை வரலாம். பணவரத்து இருக்கும். கவுரவம், அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் மற்றவர்கள் மூலம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்பட்டாலும் பணவரத்து குறைவு இருக்காது.
சுவாதி:
இந்த ஆண்டு தொழில் கூட்டாளிகளுடன் அனுசரித்து செல்வது நன்மைதரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. வீண் அலைச்சலும் கூடுதல் உழைப்பும் இருக்கும். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் நிம்மதி குறையலாம். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு நடக்க வேண்டி இருக்கும்.
விசாகம் 1, 2, 3ம் பாதம்:
இந்த ஆண்டு குடும்பத்தில் கவுரவம் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தடைபட்டு வந்த காரியங்கள் நடந்து மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் கவனமாக படிப்பது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. நன்மைகள் உண்டாகும். மனவருத்தம் நீங்கும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் லக்ஷ்மி பூஜை மற்றும் முன்னோர் வழிபாடு செய்யுங்கள். வெள்ளிக்கிழமைதோறும் மல்லிகை அல்லது பிச்சிப்பூவை கோவிலுக்கு அர்ப்பணிக்கவும்.
மேற்கு, தெற்கு அதிர்ஷ்ட திசைகள்.
அதிர்ஷ்ட எண்கள் - 2, 7
இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.
விருச்சிகம்: விசாகம்
4ம் பாதம், அனுஷம், கேட்டை ஆகிய நக்ஷத்திரங்கள் பிறந்தவர்கள் மற்றும் தோ,
நா, நீ, நே, நோ, ய, யி, யு, நு ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.
நல்ல அறிவாற்றலும், மற்றவர்களின் மனநிலையறிந்து பேசும் திறனும் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!!இந்த ஆண்டு தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரித்தாலும் கிடைக்க வேண்டிய உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். பணவரவுகள் தேவைகேற்றபடியிருக்கும். கணவன் - மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றிமறையும். குடும்ப ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகமும் அதனால் கடன்களும் உண்டாகும். உற்றார் - உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பொதுநல காரியங்களில் ஈடுபடுவீர்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது, ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடன் செயல்படுவது, உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
பொருளாதார நிலை:
பணவரவுகள் தேவைகேற்றபடி இருந்தாலும் எதிர்பாராத வீண்செலவுகள் உண்டாகும். முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. கணவன் - மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக்கக்கூடிய காலம் என்பதால் விட்டுகொடுத்து அனுசரித்து நடப்பது நல்லது. உற்றார்-உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும் சுப காரியங்களில் தாமத நிலை உண்டாகும்.
கொடுக்கல் - வாங்கல்:
பொருளாதார நிலை ஓரளவுக்குச் சிறப்பாக இருக்கும் என்றாலும் கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவது, பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சற்று சாதகமான நிலைகள் உண்டாகும். முடிந்தவரை தேவையற்ற பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது.
தொழில், வியாபாரம்:
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளால் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கைநழுவிப் போகும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படமாட்டார்கள். அரசு வழியிலும் சிறுசிறு நெருக்கடிகள் உண்டாகும். தொழிலிலும் மந்த நிலை ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது கவனமுடனிருப்பது நல்லது.
உத்தியோகம்:
உத்தியோகஸ்தர்களுக்கு நெருக்கடிகள் அதிகரிக்கும் காலம் என்பதால் தங்கள் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. வீண் பழிச் சொற்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகளை கண்முன்னேயே பிறர் தட்டிச்செல்வர். புதிய வேலை தேடுபவர்களுக்குத் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு தாமதமாக கிடைக்கும்.
அரசியல்:
மக்களின் ஆதரவைப் பெற அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது நல்லது. பெயர், புகழுக்கு இழுக்கு நேராதபடி பேச்சில் நிதானத்தைக் கடைபிடிக்கவும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்யவேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். உடல் நிலையில் கவனம் செலுத்துவது நல்லது.
விவசாயிகள்:
பயிர் விளைச்சல் நன்றாக அமைய கடும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டியிருக்கும். சரியான நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக்காத சூழ்நிலையால் பயிர் வேலைகள் சரிவர நடக்காது போகும். அரசு வழியில் கிடைக்க வேண்டிய மானிய உதவிகள் தாமதப்படும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை.
பெண்கள்:
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்துமென்றாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படமுடியும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார்-உறவினர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும்.
கலைஞர்கள்:
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. வரவேண்டிய பணத்தொகைகளிலும் இழுபறியான நிலையிருக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் உண்டாகும். சுக வாழ்க்கை பாதிப்படையும்.
மாணவ - மாணவியர்:
கல்வியில் ஓரளவுக்கு முன்னேற்றமான நிலையிருக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை அளிக்கும். விளையாட்டுப் போட்டிகளின் போது சற்று கவனமுடன் செயல்படுவது, தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது.
உடல் ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியம் ஓரளவுக்குச் சுறுசுறுப்பாக இருக்கும். அவ்வப்போது ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டாலும் சிறிதளவு மருத்துவச் செலவுகளுக்குப் பின் குணமாகும். எந்தவொரு காரியத்திலும் அதிக உழைப்பினை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.
விசாகம் 4ம் பாதம்:
இந்த ஆண்டு மனோதைரியம் அதிகரிக்கும். எல்லாகாரியங்களும் சாதகமாக நடந்து முடியும். எல்லா இடங்களிலும் மரியாதையும், கவுரவமும் அதிகரிக்கும். எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். தொழில் வியாபாரம் முன்னேற்ற மடையும்.
அனுஷம்:
இந்த ஆண்டு தொழிலில் இருந்து வந்த போட்டிகள் குறையும். தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்க பெறுவீர்கள். கடன் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள்.
கேட்டை:
இந்த ஆண்டு குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை சாதகமான பலன் தரும். கணவன், மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். பிள்ளைகளுக்காக செய்யும் பணிகள் திருப்தி தரும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த தகராறுகள் நீங்கும். பெண்களுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் அம்பாள் கோவிலுக்குச் சென்று காலையில் 3 முறை வலம் வரவும். நவக்கிரகங்களுக்கும் மலர்கள் வாங்கிக் கொடுக்கவும்.
கிழக்கு, வடக்கு, தென்மேற்கு அதிர்ஷ்ட திசைகள்.
அதிர்ஷ்ட எண்கள் - 3, 5
இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.
தனுசு:
மூலம், பூராடம், உத்திராடம் 1, 2, 3ம் பாதங்கள் ஆகிய நக்ஷத்திரங்கள்
பிறந்தவர்கள் மற்றும் யே, யோ, ப, பி, பூ, த, ட, பே, ஜ, ஜா ஆகிய
எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்
கம்பீரமான தோற்றமும், சிறந்த தெய்வபக்தியும், எதிலும் தைரியத்துடன் செயல்படும் ஆற்றலும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!!இந்த ஆண்டு குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். கணவன் - மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி, மனை வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று மேன்மை ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். உடல் ஆரோக்கிய விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் சிறப்பாக அமையும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்டுக் கொண்டிருந்த பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் தற்போது கிடைக்கும்.
பொருளாதார நிலை:
கணவன் - மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். உற்றார் - உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பிரிந்தவர்களும் ஒன்று சேருவார்கள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். சிலருக்கு சொந்தமாக கார், பங்களா வாங்கும் யோகமும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். குடும்பத்தில் சுபிசமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.
கொடுக்கல் - வாங்கல்:
பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கொடுக்கல் - வாங்கலும் சரளமாகவே இருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். பிறருக்கு முன் ஜாமீன் கொடுக்கும் விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. வம்பு, வழக்குகளில் சற்று இழுபறி நிலை ஏற்பட்டாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
தொழில், வியாபாரம்:
செய்யும் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் லாபம் கிட்டும். பயணங்களையும் அடிக்கடி மேற்கொள்வீர்கள். போட்டி, பொறாமைகள் குறையும். நவீன கருவிகள் வாங்க அரசு வழியில் கடனுதவி கிடைக்கும்.
உத்தியோகம்:
பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் தடையின்றிக் கிடைக்கும். பொருளாதார உயர்வுகளால் வாழ்க்கைத் தரம் உயரும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைப்பளு குறையும். புதிய வேலை வாய்ப்பு தகுதிகேற்றபடி கிடைக்கும்.
அரசியல்:
மக்களின் ஆதரவைப் பெற சிறிது போராட்டங்களை மேற்கொள்ளவேண்டியிருக்கும் என்றாலும் பெயர், புகழுக்கு பஞ்சம் ஏற்படாது. எடுக்கும் காரியங்களை திறம்பட செயல்படுத்துவீர்கள். மேடைப் பேச்சுகளில் நிதானமுடன் நடந்துகொள்வது நல்லது. கட்சிப் பணிகளுக்காக நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். வருவாய் பெருகும்.
விவசாயிகள்:
பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும். போட்ட முதலீட்டிற்கு மேல் லாபத்தினைப் பெற்றுவிட முடியும். வேலையாட்களும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்பட்டாலும் பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். பூமி மனை சேரும்.
பெண்கள்:
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் திறம்பட செயல்பட முடியும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் சிறுசிறு மன சஞ்சலங்கள் தோன்றும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். அசையும் - அசையா சொத்துக்களால் ஓரளவுக்கு அனுகூலம் ஏற்படும். சேமிக்க முடியும்.
கலைஞர்கள்:
இதுவரை பட்ட துயரங்களுக்கு ஒரு முடிவுவரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவதால் ரசிகர்களின் ஆதரவும் பெருகும். வரவேண்டிய பணத்தொகைகளும் கைக்கு வந்து சேரும். இழந்தவற்றை மீட்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும்.
மாணவ - மாணவியர்:
கல்வியில் சிறுசிறு தடைகளுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். விளையாட்டுப் போட்டிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பெற்றொர், ஆசிரியர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும்.
உடல் ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் சிறுசிறு கவலைதரும் சம்பவங்கள் நடைபெறும். தேவையற்ற அலைச்சலகள் அதிர்கரிப்பதால் உடல் நிலை சோர்வடையும்.
மூலம்:
இந்த ஆண்டு எதிர்ப்புகள் நீங்கும். பகைகள் விலகும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சனைகள் சரியாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எல்லாவசதிகளும் கிடைக்கும். தர்மசிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள்.
பூராடம்:
இந்த ஆண்டு வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம் உண்டாகும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள்.
உத்திராடம் 1ம் பாதம்:
இந்த ஆண்டு கணவன், மனைவிக் கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். பிள்ளைகள் மற்றும் துணையால் மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும். பெண்களுக்கு எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் உயர்வு உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். போட்டிகளில் பங்கு பெற ஆர்வம் உண்டாகும்.
பரிகாரம்: ஞாயிறு, வியாழக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும். சாமந்தி மலரை குருவிற்கு அர்ப்பணிக்கவும்.
கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு அதிர்ஷ்ட திசைகள்.
அதிர்ஷ்ட எண்கள் - 1, 3, 9
இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.
மகரம்:
உத்திராடம் 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதங்கள் ஆகிய
நக்ஷத்திரங்கள் பிறந்தவர்கள் மற்றும் ஜி, கி, கு, கே, கோ, க, சி, சே, சோ
ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.
எதிலும் போராடி வெற்றிபெறக்கூடிய ஆற்றலும் தன்னம்பிக்கையும், தைரியமும் கொண்ட மகர ராசி அன்பர்களே!!இந்த ஆண்டு நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், குடும்பத்தில் முன்னேற்றமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படலாம். திருமன சுபகாரியங்களில் சிறு சிறு தடைகளுக்கு பின் வெற்றிகிட்டும். பொருளாதார நிலையும் தேவைக்கேற்றபடியிருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பணம் கொடுக்கல், வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். கணவன் - மனைவியிடையே தெவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று போட்டிகளை எதிர்கொண்டே முன்னேற்றம் அடையமுடியும். எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.
பொருளாதார நிலை:
குடும்ப சூழ்நிலை ஓரளவுக்கு மகிழ்ச்சிகரமாக இருக்கும். கணவன் - மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. அசையும், அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பண வரவுகளில் சுமாரான நிலையே இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைக்கவும்.
கொடுக்கல்-வாங்கல்:
பொருளாதார தேவைகேற்றபடி இருந்தாலும் கொடுக்கல் - வாங்கலில் பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாகக் கொடுப்பதை தவிர்க்கவும். பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். தேவையற்ற வம்பு, வழக்குகள் உண்டாகி மன சஞ்சலங்கள் ஏற்படும்.
தொழில், வியாபாரம்:
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் குறைவாக இருந்தாலும் வர வேண்டிய வாய்ப்புகளுக்கு தடை இருக்காது. நிறைய போட்டிகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்துவிடுவது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்லவும்.
உத்தியோகம்:
பணியில் வேலைப் பளு அதிகமாக இருந்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் வேலைப்பளுவை குறைக்க உதவும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளில் தாமத நிலை ஏற்படும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்திக்கொள்வது நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்தும்.
அரசியல்:
மக்களின் தேவையறிந்து செயல்பாட்டால் பெயர், புகழை காப்பாற்றிக்கொள்ள முடியும். கட்சிப் பணிகளுக்காக நிறைய வீண் செலவுகளை செய்யவேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மேடைப் பேச்சுகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உடன் பழகுபவர்களை நம்பி எந்தவொரு காரியத்தையும் ஒப்படைக்காமலிருப்பது உத்தமம்.
விவசாயிகள்;
பயிர் விளைச்சல் சுமாராக இருக்கும். உழைப்பிற்கான பலனைப் பெறுவதில் இடையூறுகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் தாமதப்படும். சந்தையிலும் விளைபொருளுக்கேற்ற விலை கிடைக்காது. பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகக்கூடிய காலமென்பதால் தேவையற்ற செலவுகளைக் குறைக்கவும்.
பெண்கள்:
உடல் ஆரோக்கியத்தில் வயிறு, சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தோன்றிமறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையப்பெறுவதில் தடைகள் ஏற்படும். பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கவும்.
கலைஞர்கள்:
புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றாலும் அது தகுதிகேற்றதாக இருக்கது. ரசிகர்களின் ஆதரவுகள் குறையாமலிருப்பதால் எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடமுடியும். கார், பங்களா வாங்கும் முயற்சிகளில் கடன்கள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
மாணவ - மாணவியர்:
கல்வியில் சற்று மந்தமான நிலையே இருக்கும். எதிர்பார்க்கும் மதிப்பெண்களைப் பெற அதிக முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை உங்களை வேறுபாதைக்கு அழைத்துச் செல்லுமென்பதால் நண்பர்கள் விஷயத்தில் கவனம் தேவை.
உடல் ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். உணவு விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும்.
உத்திராடம் 2, 3, 4 பாதம்:
இந்த ஆண்டு மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும்.
திருவோணம்
இந்த ஆண்டு உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். செயல் திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு அதிகப்படியான வருமானமும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சகஜ நிலை காணப்படும். குழந்தைகள் திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள்.
அவிட்டம் 1,2 பாதம்:
இந்த ஆண்டு உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும் போதும் நிதானமாக பேசுவது நன்மை தரும். பெண்களுக்கு எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வீர்கள்.
பரிகாரம்:
சனிக்கிழமைகளில் அனுமான் கோவிலை வலம் வரவும். வெற்றிலை மாலை கட்டி அனுமனுக்கு சூட்டவும். மல்லிகை மலரை பெருமாளுக்கு அர்ப்பணித்து அர்ச்சனை செய்யவும்.
கிழக்கு, தெற்கு அதிர்ஷ்ட திசைகள்.
அதிர்ஷ்ட எண்கள் - 4, 6
இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.
கும்பம்:
அவிட்டம் 3, 4ம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2 ,3ம் பாதங்கள் ஆகிய
நக்ஷத்திரங்கள் பிறந்தவர்கள் மற்றும் கு, கே, கோ, ஸ, ஸி, ஸூ, ஸே, ஸோ, த
ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்
எந்த பிரச்சினைகளையும் அலசி ஆராய்ந்து நியாயமாக தீர்த்துவைக்கும் அறிவாற்றல் கொண்ட கும்ப ராசி அன்பர்களே!!இந்த ஆண்டு பணவரவுக்கு பஞ்சமிருக்காது. கடன்கள் யாவும் குறையும். குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த சுப காரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். நல்ல வரன்கள் தேடிவரும். புத்திர பாக்கியமும் உண்டாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெறும். கணவன் - மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உற்றார் - உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். சிலருக்கு அசையும் - அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பொன் பொருள் சேரும். செய்யும் தொழில், வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள், ஊதிய உயர்வுகள் போன்றவை கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, கணவன் - மனைவி விட்டுக்கொடுத்து நடப்பது உற்றார் - உறவினர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம்.
பொருளாதார நிலை:
பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன், குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். சிலருக்கு அசையும், அசையா சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகமும் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி, பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் போன்றவையும் உண்டாகும்.
கொடுக்கல் - வாங்கல்:
பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருப்பதால் பணம் கொடுக்கல்-வாங்கல் போன்றவற்றிலும் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். உங்களுக்குள்ள கடன் பிரச்சினைகள் குறையும். வம்பு, வழக்கு போன்றவற்றில் தீர்ப்பு சாதகமாக வரும்.
தொழில், வியாபாரம்:
தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலையிருக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தி பெருகுவதுடன் லாபங்களும் தாராளமாக அமையும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். நிதானமாகச் செயல்படுவது நல்லது.
உத்தியோகம்:
பணியில் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கப்பெறுவதால் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். எதிர்பார்த்துக் காத்திருந்த ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் தடையின்றிக் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறும். சக நண்பர்களிடம் கவனமாக இருப்பது நல்லது.
அரசியல்:
பெயர், புகழ் உயர்க்கூடிய காலமாக இருக்கும். மக்களின் ஆதரவுகள் பெருகும். அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பேச்சிற்கு அனைத்து இடங்களிலும் ஆதரவுகள் பெருகும். வருவாய் அதிகரிக்கும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள்.
விவசாயிகள்:
பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும். நவீன முறைகளைக் கையாண்டு பயிர் விளைச்சலைப் பெருக்குவீர்கள். அரசு வழியிலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் மேன்மையடையும். உற்றார் - உறவினர்களின் ஆதரவுகளின் மகிழ்ச்சியளிக்கும்,. கடன்கள் குறையும்.
கலைஞர்களுக்கு:
எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. புதிய கார், பங்களா போன்றவற்றையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். ரசிகர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை உண்டாக்கும்.
பெண்கள்:
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் திறம்படச் செயல்படுவீர்கள். மணமாகாதவர்களுக்கு மணமாகும். கணவன் - மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும் என்றாலும் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் - உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பொன் பொருள் சேரும். சொந்த வீடு வாகனங்களையும் வாங்குவீர்கள்.
மாணவ - மாணவியர்:
கல்வியில் முன்னேற்றமான நிலை உண்டாகும். எதிர்பார்த்தபடி நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டினைப் பெறுவீர்கள். கல்விக்காக சுற்றுலா தலங்கலுக்கு செல்வீர்கள். நல்ல நட்புகளால் அனுகூலப் பலன் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும். இதுவரை இருந்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும். அனைவரும் சுபிட்சமாக இருப்பதால் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
அவிட்டம் 3, 4 பாதம்:
இந்த ஆண்டு பணவரத்து அதிகரிக்கும். அதே நேரத்தில் செலவும் கூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். துணிச்சல் உண்டாகும். எதை பற்றியும் முன்பின் யோசிக்காமல் செயல்களில் இறங்கி விடுவீர்கள். தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். சரக்குகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது.
சதயம்:
இந்த ஆண்டு உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவார்கள். சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை இருக்கும் அதே நேரத்தில் அவர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
பூரட்டாதி 1, 2, 3 பாதம்:
இந்த ஆண்டு கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவதன் மூலம் கருத்து வேற்றுமை வருவதை தவிர்க்கலாம். பிள்ளைகளிம் அனுசரணையாக நடந்து கொள்வது நன்மைதரும். துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மைதரும். மாணவர்களுக்கு மிகவும் கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. கல்வியை பற்றிய கவலை நீங்கும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும். விநாயகருக்கு வெள்ளெருக்கு மாலை வாங்கிக் கொடுக்கவும்.
கிழக்கு, வடக்கு அதிர்ஷ்ட திசைகள்.
அதிர்ஷ்ட எண்கள் - 3, 5
இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.
மீனம்:
பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நக்ஷத்திரங்கள்
பிறந்தவர்கள் மற்றும் தி, து, ஸ, ச, த, தே, தோ, ச, சி ஆகிய எழுத்துக்களை
முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.
எல்லாருக்கும் எல்லா சமயங்களிலும் உதவிகரமாகத் திகழவேண்டுமென்ற எண்ணம் கொண்ட மீன ராசி அன்பர்களே!!இந்த ஆண்டு தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் மறையும். வீண் வம்பு, வழக்குகள் முடிவிற்கு வரும். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றிகிட்டும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் அனுகூலப்பலன் கிட்டும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் ஓரளவுக்கு லாபம் அமையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வெளிவட்டார பழக்கவழக்கங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. எந்த எதிர்ப்பையும் எதிர் கொண்டு வெற்றியினைப் பெறுவீர்கள். கணவன் - மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரணக் கோளாறு போன்றவை ஏற்படு மருத்துவச் செலவுகளை உண்டாக்கும்.
பொருளாதார நிலை:
குடும்ப ஒற்றுமை சுமாராகத்தான் இருக்கும். அனைவரிடமும் விட்டுக்கொடுத்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. உற்றார் - உறவினர்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். அசையும் - அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும்.
கொடுக்கல் - வாங்கல்:
பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாகக்கூடிய காலமென்பதால கொடுக்கல் - வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிக்க சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். பணவிஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதினால் வீண்பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வீர்கள். நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். வீண் வம்பு, வழக்குகள் ஏற்படும்.
தொழில் வியாபாரம்:
தொழில் வியாபாரம் சுமாராகத்தன் நடைபெறும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் மிகவும் கவனம் தேவை. புதிய கூட்டாளிகளால் தேவையற்ற மனசஞ்சலங்கள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனமுடனிருப்பது நல்லது. பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.
உத்தியோகம்:
பணியில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். செய்யும் பணியில் இடையூறுகள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைப்பளுவை குறைத்துக்கொள்ள முடியும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல் அதிகரிக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானமுடனிருப்பது நல்லது.
அரசியல்:
மக்களின் ஆதரவு சிறப்பாக இருந்தாலும் அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் இடையூறுகள் உண்டாகும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்தாலும் எந்தவொரு காரியத்திலும் திருப்தி இருக்காது. உடன் பழகுபவர்களுடன் எச்சரிக்கையுடனிருப்பது நல்லது.
விவசாயிகள்:
பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் விலைபொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்காது. இதனால் பட்ட பாட்டிற்கு பலன் குறைவாக இருக்கும். நீர்வரத்து குறைவதால் பயிரிட அதிக செலவு ஏற்படும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் விரயங்கள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளிலும் தாமத நிலை ஏற்படும்.
பெண்கள்:
உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியாமல் போகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கணவன் - மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றிமறையும்.
கலைஞர்கள்:
எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் கிடைத்த வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. வரவேண்டிய பணத் தொகைகளில் சற்று இழுபறி நிலை ஏற்பட்டாலும் வரவேண்டிய நேரத்தில் வந்து சேரும். உடனிருப்பவர்களிடம் பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.
மாணவ - மாணவியர்:
கல்வியில் சற்றே மந்த நிலை உண்டாகும். முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடையலாம். தேவையற்ற நட்புகளால் வீண் பிரச்சினைகளுக்கு ஆளாவீர்கள். வண்டி, வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. பொழுது போக்குகளாலும் கல்வியில் நாட்டம் குறையும்.
உடல் ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றியபடியே இருக்கும். மனக்குழப்பங்களும் நிம்மதிக் குறைவுகளும் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். அலைச்சல், டென்சன் அதிகரிக்கும்.
பூரட்டாதி 4ம் பாதம்:
இந்த ஆண்டு வீண் மனகுழப்பம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பிரச்சனையில் சிக்கி கொள்ளலாம். ஆன்மிக எண்ணம் ஏற்படும். விருப்பமான நபரை சந்திப்பதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் பெற முடியும்.
உத்திரட்டாதி:
இந்த ஆண்டு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், வீண் அலைச்சலும் உண்டாகும். கவனமாக வேலைகளை செய்யாவிட்டால் மேல் அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் உண்டாகலாம் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படும் நிலை உருவாகலாம். பிள்ளைகளுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
ரேவதி:
இந்த ஆண்டு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் சந்திப்பு உண்டாகும். வீண் செலவும் ஏற்படலாம். கோபத்தை குறைப்பது நல்லது. மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். அதே நேரத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும்.
பரிகாரம்: வியாழன்தோறும் அருகிலிருக்கும் நவக்கிரக கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும். ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும்.
மேற்கு, வடக்கு அதிர்ஷ்ட திசைகள்.
அதிர்ஷ்ட எண்கள் - 2, 6
இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.
****************************
நன்றி
- 4தமிழ்மீடியா(விற்காக : ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)