மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை, மின் நுகர்வோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இன்று முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் இடையிடையே மின் விநியோகம் தடைப்படும் எனவும் இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.
நுரைச்சோலை லக் விஜய மின் உற்பத்தி நிலையத்தை மீள இயக்க சில நாட்கள் தேவைப்படும் எனவும், போதியளவு மின்சாரத்தை விநியோகிக்க முடியாதுள்ளமையே இதற்கு காரணம் என தலைவர் அனுர விஜேபால தெரிவித்தார்.
இதனால் அடிக்கடி நாட்டின் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.