மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்குழு வீதியில் கலைத்து கலைத்து வாள்வெட்டு

(சினிமாப்பாணியில் நடந்த சமூக விரோகம்)
இச்சம்பவம் நேற்று மாலை ஆறு மணியளவில் யாழ்.தட்டாதெரு சந்தியில் இடம்பெற்றுள்ளது.
மரக் காலை ஒன்றில் நின்ற இளைஞர்களை மோட்டர் சைக்கிளில் வந்த இளைஞர் குழு ஒன்று நடு வீதியில் கலைத்து கலைத்து வாளால் வெட்டியுள்ளது. இச்சம்பவம் நேற்று மாலை ஆறு மணியளவில் யாழ்.தட்டாதெரு சந்தியில் இடம்பெற்றுள்ளது. இதனால் அந்த பகுதி நேற்றைய தினம் பயத்தில் உறைந்திருந்தது.

தட்டாதெருவில் அமைந்துள்ள் விறகு காலை ஒன்றில் சில இளைஞர்கள் நின்றுள்ளனர். இதன் போது அப்பகுதியால் மூன்று மோட்டார் சைக்கிளில் வாள்கள் கொட்டன்கள் சகிதம் வந்த 6 இளைஞர்கள், விறகு காலையில் நின்றவர்களை சண்டைக்கு அழைத்துள்ளனர். இதன் போது இருதரப்பும் முரண்பட மோட்டார் சைக்கிளில் வந்த சமூக விரோத கும்பல்,

விறகு காளையில் நின்றிருந்தவர்களை வாளால் வெட்ட முயன்றுள்ளனர், சமூக விரோத கும்பலின் வாள் வெட்டிலிருந்து தப்புவதற்காக அங்கிருந்து ஓட முயன்றுள்ளனர். எனினும் மோட்டார் சைக்கிளில் கலைத்து கலைத்து நடு வீதியில் வெட்டியுள்ளனர். இச்சம்பவம் நடைபெற்றது கே.கே.எஸ்.வீதி என்பதனால் குறித்த இடத்தில் அதிக சன நாட்டமும் காணப்பட்டுள்ளது.

எனினும் பலர் பாத்திருக்க இந்த துணிகர சம்பவம் அனைவரையும் பயத்தில் ஆழ்த்தியுள்ளது. குறித்த வாள்வெட்டில் காயமடைந்த இளைஞர்கள் அனைவரும் தட்டாதெரு மற்றும் கலட்டியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் சினிமா பாணியில் நடைபெற்றதாகவும், சுமார் நூற்றுக்கணக்கானோர் சம்பவ இடத்தில் நின்ற போதும் எவ்வித அச்சமும் இன்றி வாள்களுடன் வந்திறங்கிய கும்பல் சராமரியாக வாள் வீச்சினை மேற்கொண்டதாகவும், அங்கு நின்ற இளைஞர்கள் தப்பி செல்லா விட்டால் நிச்சம் ஒரு கொலை சம்பவித்திருக்கும் என குறித்த வாள்வெட்டு சம்பவத்தை நேரில் கண்டவர்கள் விபரிக்கின்றனர்.

மிகக்கொடூரமான முறையில் நடைபெற்ற இவ்வாள் வெட்டு சம்பவத்தினால் அங்கு நேற்று இரவு முழுவதும் பெரும் பதற்றம் நிலவியது. எனினும் இவ்வாள்வெட்டு சமவத்திற்கு காரணம் பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தகராறே காரணம் என தெரிவிக்கபடுகின்றது. 

குறித்த வாள்வெட்டு கும்பல் தொடர்பில் வெட்டு வாங்கிய இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டால் தகவல் தெரியவரும் என ஒருசிலர் தெரிவிக்கின்றனர். இவ்வாறான சமூக விரோத கும்பல்களை இவ்வாறு வெளியே நடமாட விட்டால் ஆபத்து எனவும், இவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கோபத்துடன் தெரிவிக்கின்றனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, வெட்டுக்கு இலக்கான நபரிடமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அண்மைக்காலமாக கஞ்சா கடத்தல், வாள் வெட்டு சம்பவங்கள், திருட்டு, மற்றும் கொள்ளை என்பன யாழ்ப்பாணத்தில் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.(செ-40)

நன்றி