வவுனியாவில் ‘தமிழ் மக்கள் பேரவை’யின் மக்கள் கருத்தறியும் கூட்டம்.
இலங்கைத்தீவின் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான ‘அரசியல் தீர்வுத்திட்டம்’ தொடர்பாக தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட ‘தீர்வுத்திட்ட முன்வரைவு’ பற்றி பொதுமக்களிடம் கருத்தறியும் கூட்டம், 28.02.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்கள்: மாண்புமிகு நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் (முதலமைச்சர் - வடக்கு மாகாணம்), இதய வைத்தியநிபுணர் பூ.லக்ஸ்மன் அவர்கள், சமுக செயல்பாட்டாளர் திரு.ரி.வசந்தராஜா அவர்கள் ஆகியோரின் சமுகமளிப்புடன்,
நிபுணர்குழு உறுப்பினர்கள்: சட்டத்தரணி திரு.ந.காண்டீபன், சட்டத்தரணி திரு.வி.புவிதரன், சமுக செயல்பாட்டாளர் திரு.ரி.பரந்தாமன், கௌரவ சுரேஸ் க.பிறேமச்சந்திரன் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்), கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (முன்னாள் பாராளுமன் உறுப்பினர்), கௌரவ த.சித்தார்த்தன் (பாராளுமன்ற உறுப்பினர்) ஆகியோர் விளக்கமளிக்கவுள்ளனர்.
இந்தக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு, தமிழ் மக்கள் பேரவை தொடர்பிலும், அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைவு தொடர்பிலும் தமது கேள்விகள் - ஐயங்களை கேட்டுத்தெளிவுற முடியும். தங்களது கருத்துகள் - ஆலோசனைகளையும் தெரிவிக்குமாறும் அன்புடன் அழைக்கின்றனர் தமிழ் மக்கள் பேரவையினர்.
தகவல்: கி.தேவராசா (நிர்வாககுழு உறுப்பினர் - தமிழ் மக்கள் பேரவை)
தொடர்புகளுக்கு: 0094 77 277 4018