ஐ.நா. ஆணையாளரை சந்திக்க வேண்டும்: காணாமற்போனோரின் உறவினர்கள் கோரிக்கை!!!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு காணாமற்போனோரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமது கோரிக்கை அடங்கிய இரண்டு மகஜர்களை யாழ்ப்பாணத்திலுள்ள ஐ.நா. அலுவலகத்திடமும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடமும் அவர்கள் சமர்ப்பித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

காணாமற்போனவர்களின் உறவினர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் கூடி கலந்துரையாடினர்.

இந்தக் கலந்துரையாடலில் தமிழ் ​தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கலந்துகொண்டிருந்தார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரை சந்தித்து தமது நிலைமை குறித்து தெளிவுபடுத்துவதற்கு காணாமற்போனவர்களின் உறவினர்கள் இதன்போது தீர்மானித்துள்ளனர்.