ஆட்சி மாற்றத்தின் பின்னர், அரசின் அழைப்பின்பேரில் நாடு திரும்பிய குடும்பஸ்தர் தற்கொலை!!!

அண்மையில் நடந்த இலங்கையின் 68ஆவது சுதந்திரதினமன்று தற்கொலை செய்துகொண்ட தன்னுடைய தந்தை மனவிரக்தியின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும் அதற்கு அரசே பொறுப்பு என்றும் அவரது மகன் குற்றம் சுமத்தியுள்ளார். 
                                         தமிழகத்தில் அகதியாக இருந்து தாயகம் திரும்பிய தந்தை மனவிரக்தியில் தற்கொலை - அரசே காரணம் -  மகன்
தமிழகத்தில் கடந்த பல வருடங்களாக அகதியாக வாழ்ந்த நிலையில் கடந்த நவம்பர்மாதம் தாயசகம் திரும்பிய யாழ்ப்பாணம் கரைநகரைச் சேர்ந்த 59வயதான பரஞ்சோதி உருத்திரமூர்த்தி என்ற குடும்பஸ்தர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இவர் இல்கையின் சுதந்திரதினமன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீண்ட காலத்தின் பின்னர் நாடு திரும்பிய தமக்கு முதலாவது அடியை எடுத்து வைக்க அரசாங்கம் எந்த உதவிகளையும் செய்யவில்லை என்று அவரது மகன் குற்றம் சுமத்துகின்றார்.

மீள்குடியேறிய தம்மை எவரும் கவனிக்கவில்லை என்றும் அரசினதும் அதிகாரிகளினதும் அசமந்தப் போக்கு காரணமாகவே தன் தந்தையை இழக்க நேரிட்டதாகவும் அவரது மகன் செந்தூரன் குறிப்பிட்டுள்ளார்.

2006ஆம் ஆண்டில் திருகோணமலையில் இருந்து படகு மூலம் தமிழகத்திற்கு அகதியாக சென்ற உருத்திரமூர்த்தி 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர் தாயகத்தில் வாழும் ஆசையுடன் அரசின் அழைப்பின்பேரில் நாடு திரும்பினார்.

தனது சொந்த ஊரில் உறவினரின் வீட்டில் தங்கியிருந்த இவர் வீட்டுத்திட்டம் மற்றும் சுயதொழில் வாழ்வதார உதவிகளுக்காக அரச அலுவலகங்களுக்கு அலைந்து திரிந்துள்ளார். இந்த நிலையில் பெப்ரவரி 4 அன்று நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

குளோபல் தமிழ் செய்தி