யாழ்/அச்சுவேலி நவகிரி பகுதியில் சிறிய அளவில் நிலநடுக்கம்!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பூமியதிர்வு காரணமாக மக்கள் மத்தியில் பதற்றமான நிலை ஏற்பட்டது.

எனினும் இந்த அனர்த்தம் பூமியதிர்வுதானா என்பது தொடர்பில் சிறிலங்கா அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டம் ஒரு சுண்ணாம்புக்கல் பிரதேசம். ஆகையால் கால நிலை மாற்றம் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் ரவி தெரிவித்துள்ளார். பூமியதிர்வு ஏற்பட்டதா என்பது தொடர்பில் இதுவரை உறுதிப்படுத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாகவும் இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ் பண்டார சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, El Niño எனும் பருவநிலை மாற்றம் காரணமாக இந்தியா, இலங்கைத் தீவில் பாதிப்புகள் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டிருந்தது. இலங்கைத்தீவில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இதன் தாக்கம் வெகுவாக பாதிக்கும் எனவும் விஞ்ஞானிகளால் எச்சரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







நன்றி 
பரிஸ்தமிழ்.