முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவமதிக்காதீர்!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சிலர் அவமதிப்பு செய்வதைக் கண்டித்தும் அவரை சுதந்திரமாக செயற்பட அனு மிக்க வேண்டும் என வலியுறுத்தியும் தனி ஒருவரினால் யாழில் நேற்று அடையாள உண்ணாவிரதம் ஒன்று முன் எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சரை அவமதிக்கும் செயற்பாடுகளை கண்டித்து  நேற்றையதினம் காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை தந்தை செல்வா சதுக்க முன்றிலில் அடையாள உண்ணா விரத போராட்டம் ஒன்று மேற் கொள்ளப்பட்டது.

வரணி இயற்றாலை பகுதியை சேர்ந்த நாகேந்திரன் துஷாந் என்பவரே இந்த அடையாள உண்ணா விரதத்தை மேற்கொண்டிருந்தார்.
அவர் தனது கோரிக்கையில்,
1. கூட்டமைப்பு அரசியல்வாதிகளே! தமிழ் மக்களின் பெயரால் போரின் வலிசுமந்து வாழும் மக்களின் பெயரால் ஒன்றுபட்டு செயற்படுங்கள்.
2. வடமாகாண சபை உறுப்பினர்களே, அமைச்சர்களே! ஜீவா செல்வகுமாரி (வற்றாப்பளை) போன்றோரின் குடும்ப வறுமையை- குறைந்தபட்சம் உணவுக்கும் வழியற்றிருக்கும் வன்னி மக்களின் மீது அக்கறை கொள்ளுங்கள்.
3. நல்லூர் சங்கிலி மன்னன் அரண்மனை தமிழ் மக்களின் வரலாற்றுச் சின்னங்களில் ஒன்று. அதன் தற்போதைய நிலை கவலைக்குரியது. அதனை சுற்றுமதிலமைத்துபாதுகாப்புத் தாருங்கள்.
4. தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையாகும் வரை அவர்களின் குடும்ப நிலையறிந்து அவர்களின் நலன் குறித்து உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்துங்கள்.
5. நீதியரசர் விக்கினேஸ்வரன் ஐயா அவர்கள் தமிழ் மக்களின் அரும் பொக்கி­ம். அவர் முதலமைச்சராக இருப்பது நமது வரப்பிரசாதம். தயவு செய்து அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்கள் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே மேற்படி அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ளப் பட்டது. 
குறித்த நபரை வடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் செயலாளர்கள் நேரில் சென்று உண்ணாவிரதத்தை கைவிடும்படி கோரிக்கை விடுத்திருந்தும் அவர்  உண்ணாவிரதத்தை தொடர்ந்து மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.                                   
  (இ-9)
நன்றி 
வலம்புரி.