உ/த பரீட்சை 2015 முடிவுகள் வெளியாகின "

03.01.2015 அன்று வெளியாகிய கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட தொழில்நுட்பவியல் பாடப் பிரிவில் தோற்றிய யாழ்.மாணவர்கள் இருவர் அகில இலங்கை ரீதியில் 2ஆம், 3ஆம் இடங்களை பெற்று முன்னணி
வகிக்கின்றனர்.

அதற்கமைய இம்முறை முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்ட உயிரியல் தொழில் நுட்பவியல் பிரிவில் மாவட்டத்தில் முதலிட த்தையும் அகில இலங்கை ரீதியில் 2ஆம் இடத்தையும் யாழ்.சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவன் கருணைநாயகம் ரவீகரன் பெற் றுக் கொண்டுள்ளார்.
பொறியில் தொழில்நுட்பவியல் பிரிவில் ஆங்கில மொழிமூலம் கல்வி பயின்ற யாழ். இந்துக் கல்லூரி மாணவன் பால சுப்பிரமணி யம் ஞானகீதன் மாவட்டமட்டத்தையும் அகில இலங்கை ரீதியில் 3ஆம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

யாழ்.மாவட்ட மட்டத்தில் தமிழ்மொழி மூலம் தோற்றி முதல் இடம்பெற்றுள்ள மாணவ ர்களின் விபரம் வருமாறு,

உயிரியல் பிரிவில் யாழ்.இந்துக் கல்லூரி மாணவன் ஆனந்தராஜா ஹரிசங்கர் 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத் தையும் தேசிய மட்டத்தில் 24ஆவது இடத்தை யும் பெற்றுள்ளார். கணிதப் பிரிவில் நெல்லி யடி மத்திய கல்லூரி மாணவன் கலாமணி மதனாகரன் 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்ட த்தில் முதல் இடத்தையும் தேசிய மட்டத்தில் 22ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

வர்த்தக பிரிவில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் மாணிக்கவாசர் லஜீபன் 3ஏ பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் இட த்தையும் தேசிய மட்டத்தில் 62ஆவது இட த்தையும் பெற்றுள்ளார். கலைப்பிரிவில் அச்சு வேலி இடைக்காடு மகா வித்தியாலய மாணி குணபாலசிங்கம் நிதர்சனா 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தையும் தேசிய மட்டத்தில் 46ஆவது இடத்தையும் பெற்றுள்ளார். 
கிளிநொச்சி மாவட்டத்தில் விஞ்ஞானப் பிரிவில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி முத லிடத்தைப் பெற்றுள்ளது. 

இதனடிப்படையில் கிளிநொச்சி ஆனந்த நகரைச் சேர்ந்த மதுரநாயகம் அஜித் ஜெரோம் யு, 2 டீ பெறுபேற்றைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கணிதப்பிரி வில் முள்ளியவளை வித்தியானந்தா கல் லூரி முதலிடத்தைப் பெற்றுள்ளது.

இதன் அடிப்படையில் முதலாம் வட்டாரம் முள்ளியவளையை சேர்ந்த விஸ்வலிங்கம் விஜிந்தன் யுஇ 2டீ பெறுபேற்றைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள் ளார்.
அத்துடன் குறித்த பாடசாலையைச் சேர் ந்த  கமலகாந்தன் பூர்வீகன் 3டீ பெறுபேற் றைப் பெற்று மாவட்ட ரீதியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார்.

அகில இலங்கை ரீதியில் சிறந்த பெறு பேறுகளை பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியல்,
உயிரியல் பிரிவு
1 ஆம் இடம் - கே.பி.ஜி. தெபுலி உமேஷா -கம் பஹா ரத்னாவலி மகளீர் கல்லூரி
2 ஆம் இடம்- ஜே.எம்.மொஹமட் முன் சீப் - புத்தளம் ஜனாதிபதி கல்லூரி
3 ஆம் இடம் - யசஸ்வி வத்சலா- கொழு ம்பு விசாகா மகளீர் கல்லூரி

கணித பிரிவு
1 ஆம் இடம் - தசுன் ஓஷத -  கொழும்பு ரோயல் கல்லூரி
2 ஆம் இடம் -  நதீஷான் தனன்ஜய -  குருநாகல் மல்லியதேவ ஆண்கள் கல்லூரி
3 ஆம் இடம் -  சவித் நில்மன்த்த -  இரத்தின புரி சீவலி மத்திய மகா வித்தியாலயம்

வணிக பிரிவு
1 ஆம் இடம் -  எஸ்.எம்.அகில் மொஹ மட் - குருநாகல் மல்லியதேவ ஆண்கள் கல் லூரி
2 ஆம் இடம் -  சதனி இரங்கா -  கொழு ம்பு தேவி பாலிக்கா கல்லுரி
3 ஆம் இடம் -  ரன்தி ரமேஷ் -  மொற ட்டுவ புனித செபஸ்ட்டியன் கல்லூரி

கலைத் துறை
1 ஆம் இடம் - கே.ஏ.ஜீவா நயனமாலி -  குருநாகல் மல்லியதேவ மகளீர் கல்லூரி
2 ஆம் இடம் - நிராஷா நதீஷானி - கண்டி புஷ்பதான மகளீர் கல்லூரி
3 ஆம் இடம் - பாத்திமா அம்ரா - கொழு ம்பு 07, சீ.எம்.எஸ்.மகளீர் கல்லூரி
பொறியியல் தொழில்நுட்ப பிரிவு
1 ஆம் இடம் - ஷானக அநுராத - மாத் தளை புனித தோமியன் கல்லூரி
2 ஆம் இடம் -இஷார புந்திக்க - கொழு ம்பு ஆனந்தா கல்லூரி
3 ஆம் இடம் - பாலசுப்ரமணியம் ஞான கீதன் -யாழ். இந்து கல்லூரி

உயிரியல் தொழில்நுட்பவியல் பிரிவு
1 ஆம் இடம் - வாசனா நவோதனி - பண் டார வளை தர்மபால மகா வித்தியாலயம்
2 ஆம் இடம் - கருனைநாயகம் ரவீகரன் -யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி
3 ஆம் இடம் - உபுலி அநுத்தரா - கேகா லை சுவர்ண ஜயன்த்தி மகா வித்தியாலயம்.

இந்த ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக 2500 மாணவர்கள் இணைப்பு

நாடளாவிய ரீதியிலுள்ள பல்கலைகழகங்களுக்கு இம்முறை 2000 தொடக்கம் 2,500 வரையான மாணவர்கள் மேலதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழகக் கல்வி மற்றும், நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

சுமார் 2,000 வரையான மாணவர்கள் தொழிநுட்பவியல் கற்கைநெறிக்கு ஈடுபடுத்தப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் டீ.சீ. திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

5 பல்கலைகழகங்களில் தொழிநுட்பவியல் கற்கை நெறியை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 நன்றி: வலம்புரி