ஊடகவியலாளர் சுகிர்தராஜன் படுகொலை- 10ஆவது வருட நினைவு நிகழ்வு!

கடந்த 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 10ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு இன்று கல்முனை வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் நடைபெற்றதது.
  
இந்த நிகழ்வை ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டு இயக்கம், யாழ் ஊடக மையம் ஆகியவற்றுடன் இணைந்து கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்தன. 
 
படுகொலை செய்யப்பட்ட சுகிர்தராஜனின் புகைப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து ஒளிச்சுடரும் ஏற்றி வைக்கப்பட்டதுடன் சுகிர்தராஜனின் ஊடக நண்பர்களின் நினைவலைகள் நினை உரைகளும் நிகழ்த்தப்பட்டன. 
 
இதேவேளை இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் மற்றும் அவர்களது உயிரிழப்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய ஆவணப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டது.  
 
இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரியர் பீட பணிப்பாளர் சமன் வகஆரச்சி, தினகரன் பத்திரிகை பிரதம ஆசிரியர் கே. குணராசா, உட்பட வடக்கு கிழக்கு மற்றும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.