இலங்கையில் மழைக்கான காலநிலையை
கடந்த சில நாட்களாக ஏற்படுத்தியிருந்த வளிமண்டலக் குழப்பமானது தற்போது
இலங்கையை விட்டு அப்பால் நகர்ந்துள்ளது. அதேவேளை மற்றுமொரு வளிமண்டலக்
குழப்பமானது இலங்கையின் மேற்காக உருவாகி வருகின்றது.
இதன் காரணத்தினால் இலங்கையின் பல பகுதிகளில் மேகமூட்டத்துடன் மழையும் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் மதியம் 12 மணிக்குப் பின்னர் மழை காணப்படும்.
இடியுடன்கூடிய மழை காணப்படும் சந்தர்ப்பங்களில் காற்று பலமானதாக வீசும். இடிமின்னல் தாக்கத்திலிருந்து ஏற்படும் சேதங்களைக் குறைத்துக் கொள்ளும் பொருட்டு பொது மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இலங்கைக்கு அருகில் புதிதாக உருவாகியுள்ள வளிமண்டலக் குழப்பம் காரணமாக இலங்கைத் தீவைச்சுற்றியுள்ள பல கடல் பிராந்தியங்களிலும் மழை அல்லது இடியுடன்கூடிய மழை காணப்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன.
காங்கேசன்துறை முதல் மன்னார், கொழும்பு ஊடான காலி வரையான கடல் பிராந்தியங்களில் காற்றானது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் முதல் 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் வீசும்.
கடல் பிராந்தியங்களில் இடியுடன்கூடிய மழை காணப்படும் சந்தர்ப்பங்களில் காற்றானது மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் முதல் 80 கிலோமீற்றர் வரையான வேகத்தில் வீசுவதால்இந்தக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகவே காணப்படும்.