சுடச்சுட உண்மைகள் (தற்போது யாழ்ப்பாணத்தில்...)

யாழ். கிறீன் கிறாஸ் ஹோட்டலில் வடமாகாணசபையின் இயர்என்ட் பார்ட்டி! - இது இப்ப தேவை தானா? அப்படி என்னத்த சாதித்து விட்டீர்கள்.

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள கிறீன் கிறாஸ் ஹோட்டலில், வடக்கு மாகாணசபையின் நிதியில் இன்று (30.12.2015) மதியம் இயர்என்ட் பார்ட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இந்த பார்ட்டியில் வடக்கு மாகாண முதலமைச்சர், அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், அலுவலகப்பணியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

வடக்கு மாகாணசபை வினைத்திறனுடன் தொழில்படவில்லை. கிடைக்கப்பெற்ற நிதியை மக்கள் நலப்பணிகளுக்கு உரிய திட்டங்களுடன் நடைமுறைப்படுத்தவில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகளும், அதிருப்தியும் பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில், மக்களின் வரிப்பணத்தை இறைத்து இவர்கள் இப்படி உயர்ரக அறுசுவை விருந்துபசாரம் நடத்தி மகிழ்ச்சியில் திளைத்திருக்க அப்படி என்னத்தை இந்த வருடத்தில் சாதித்து விட்டார்கள்? 

இனி பிறக்கப்போகும் புதிய வருடத்திலாவது காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்கள், அரசியல் கைதிகள், முன்னாள் போராளிகள் இந்த குடும்பங்களின் மறுவாழ்வு, வேலைவாய்ப்பு தொடர்பில் இவர்களிடம் என்ன திட்டங்கள் தான் உள்ளன? ஆனால் மக்கள் பணம் தண்ணீரில் கரைந்துகொண்டிருக்கின்றது. 

இதேவேளை குறித்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர்கள் அனைவரும், ஹோட்டலுக்குள்ளே ஏசி அறைகளில் இருந்து உணவை அருந்திக்கொண்டு அவர்களின் வாகன சாரதிகளை ஹோட்டலுக்கு உள்ளே அழைக்காமல் அவர்களை வெளியே மரநிழல்களுக்கே கீழே இருத்திவைத்து உணவு கொடுத்து அநாகரிகமாக நடத்தியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

-ஆழ ஊடுருவி-