குடை பிடித்து பரீட்சை எழுதும் மாணவர்கள் !

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இரணைப்பாலை ரோமன் கத்தோலிக்க மகாவித்தியாலய மாணவர்கள் குடை பிடித்த வாறு பரீட்சை எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
 

பாடசாலையில் அமைக்கப்பட்டு உள்ள ஓலைக் கொட்டகைக்குள் வகுப்புக்கள் நடைபெற்று வந்தான. அக் கொட்டகைக்குள்லையே தற்போது மாணவர்களுக்கு மூன்றாம் தவணை பரீட்சை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. 
தற்போது வடக்கில் பெய்து வரும் கடும் மழைக்கு ஓலைக் கொட்டகைகள் ஈடு கொடுக்க முடியாது அதனுள் மழை நீர் ஒழுக ஆரம்பித்து உள்ளது.

அதனால் கொட்டகைக்குள் இருந்து பரீட்சை எழுதும் மாணவர்கள் குடை பிடித்த வாறே பரீட்சை எழுதி வருகின்றனர்.










நன்றி:குளோபல் தமிழ் விசேட செய்தியாளா்