சரவணபவன் எம்.பிக்கு ஒரு பகிரங்க மடல் !!!

சர. எம்.பிக்கு ஒரு பகிரங்க மடல் !!!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்காகவே தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளதாக ஓட்டுப்பொறுக்கி அரசியல் நடத்தும் சிலர் பேரவையின் உண்மையான நோக்கத்தைத் திரிபுபடுத்துகின்றனர். ஒரு ஊடகவியலாளராகவும் ஒரு ஊடகத்தின் முதலாளியாகவும் தமிழ் இனத்தின் விடுதலைக்காகக் குரல்கொடுக்கும் பாராளுமன்ற உறுப்பினராகவும் செயற்படுகின்ற ஈ.சரவணபவன் அவர்களும் இதே கருத்தைத் தெரிவித்திருக்கிறார். 

அவரது கருத்து உண்மையான ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கில் தோற்றுவிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையை நேசிப்பவர்களை முகம்சுழிக்கச் செய்திருக்கிறது. ஊடக தர்மம் மீறப்பட்டிருப்பதாகவே அவரது செயலை பார்க்கமுடிகிறது.

அவரது கருத்தே அவருக்கு ஒரு பகிரங்கக் கடிதத்தை எழுதுவதற்கும் உந்துகிறது. அவரது மனத்தைப் புண்படுத்துவது எமது நோக்கமல்ல. அவரது மனச்சாட்சியைத் தட்டியெழுப்புவதும் அவர் தன்னை அறியாமல் தவறிழைத்திருந்தால் திருத்திக்கொள்வதற்கான சந்தர்ப்பமாக இது அமையவேண்டும் என்பதே எமது நோக்கம்.

உதயன் பத்திரிகையின் வாசகர்கள் இதுநாள்வரை தவறானதும் பிழையானதுமான செய்திகளைப் படித்து தமது தேடுதலை ஒரு வரம்பெல்லைக்குள் சுருக்கிக்கொண்டுள்ளனர். அவர்களும் உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.

ஊடகவியலாளர்களின் உயிர்த்தியாகத்தில் வளர்ந்த உதயனின் வெள்ளிவிழாவின்போது, யாழில் பல படுகொலைகளின் சூத்திரதாரியாக இனங்காணப்பட்டவரும் பல ஊடகவியலாளர்கள் காணாமல் போகச் செய்யப்பட்டதற்குப் பொறுப்பானவருமான அப்போதைய யாழ் மாவட்ட கட்டளை தளபதி ஹத்துருசிங்கவை வைத்து மங்கல விளக்கேற்றியதுடன் அவரை வைத்தே தமிழ் ஊடகவியலாளருக்கு விருதும் வழங்க வைத்தீர்கள். ஊடகவியலாளர்கள் அந்த விருதினை மிகுந்த வேதனையுடனேயே வாங்கிச் சென்றனர்.

ஆசியாவின் மிகப் பிரபல்யமான யாழ் நூல்நிலையத்தை எரிப்பதற்கு கொழும்பிலிருந்து வந்திருந்த உங்களது ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவர்களுக்கு உங்களது வீட்டில் தங்க இடமளித்து அவர்களுக்கு இரவு உணவு வழங்கி எரிப்பதற்கு வழியனுப்பி வைத்தீர்கள். இதை மக்கள் மறந்திருப்பார்கள் என்று எண்ணுகிறீர்களா?

நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது வயிற்றையும் வாயையும் கட்டி சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தையும் ஓய்வூதியக் கொடுப்பனவுகளுக்கு தகுதியற்ற மக்கள் தமது ஓய்வின்போது வழங்கப்பட்ட பெருந்தொகை பணத்தையும் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு உங்களது சப்ரா நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தனர். உங்களின் சுயநலனிற்காக அவர்கள் அனைவருக்கும் அசலைக்கூட திரும்பச் செலுத்தாத யோக்கியசிகாமணிதானே நீங்கள்.

மேற்கண்ட உங்களின் செயலால் எத்தனைபேர் தற்கொலை செய்துகொண்டார்கள்? எத்தனை குடும்பங்கள் உங்களால் வீதிக்கு வந்துள்ளன? உங்களின் செல்வச் செழிப்பின் பின்னால் எத்தனை குடும்பங்களின் வயிற்றெரிச்சல் இருக்கின்றன? இவைகளை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று எண்ணுகிறீர்களா? இவைகள் குறித்து என்றாவது நீங்கள் உங்களது மனச்சாட்சியுடன் பேசியதுண்டா?

பாடசாலை மாணவி வித்தியாவின் மரணத்தைக்கூட உங்களது பத்திரிகையின் விற்பனையைக் கூட்டி பணம் சம்பாதிக்கத் துடித்து அவரது படத்தை அலங்கோலமாக அச்சிட்டு வெளியிட்ட உங்களது வக்கிரத்தனத்தை என்னவென்று சொல்வது?

மாணவியின் கோரக்கொலையை எதிர்த்து நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தினால் பேருந்து போக்குவரத்துகளும் பணியில் ஈடுபடவில்லை. அதனால் தங்களது ஊடகத்தில் பணியாற்றும் தூரப்பிரதேச பெண் ஊழியர்கள் பணிக்கு வரமுடியாத சூழல் ஏற்பட்டிருந்தது. அவர்கள் அடுத்தநாள் பணிக்கு வந்தபொழுது வேலையைவிட்டு நீக்கி அவர்களின் வயிற்றில் அடித்த உத்தமர் அல்லவா நீங்கள்?

இங்கிலாந்துப் பிரதமர் டேவிட்கெமரோன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தபோது வலிவடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பிரதமரின் கவனத்தை ஈர்ப்பதற்காக உண்ணாவிரதம் இருந்தனர். அவர் அந்த இடத்தையும் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவரது திட்டத்தைத் தடுத்து நிறுத்தி உங்களது ஊடக அலுவலகத்தைக் காட்டி அவரது அனுதாபத்தைப் பெற்றுக்கொண்டீர்கள். வலி.வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்தை விடவும் டேவிட்கெமரோனுடன் படம் பிடித்து அதை அடுத்தநாள் பத்திரிகையில் பிரசுரிப்பதே உங்கள் முக்கிய நோக்கமாக இருந்தது. 

காணாமல் போகச் செய்யப்பட்டிருந்தவர்களின் உறவினர்களையும் இடம்பெயர்ந்த மக்களையும் டேவிட் கெமரோன் சந்தித்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த சம்பந்தன் சுமந்திரனின் நிகழ்ச்சிநிரலை கச்சிதமாக நிறைவேற்றினீர்கள். என்னே உங்களது தேசிய உணர்வு? ஆகா மெய்சிலிர்க்கிறது உங்களது இனப்பற்றை நினைத்து!

கொழும்பிலிருந்து வருகின்ற எலிபென்ட் ஹவுஸ் உற்பத்திகளின் வடமாகாண ஏஜென்டான நீங்கள் அந்நிறுவனத்தின் ஐஸ்கிரீம்களை விற்பனை செய்வதற்காக யாழ்ப்பாணத்தில் தயாராகும் ஐஸ்கிரிம்களில் மலத்தொற்று இருப்பதாக உங்களது பத்திரிகையில் வதந்தியைப் பரப்பினீர்கள். யாழ்ப்பாணத்தில் பல்வேறு இன்னல்கள் மத்தியில் தமது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பப்போராடும் தொழில்முனைவோரின் வாழ்க்கையில் மண்ணைப்போட்டீர்கள்.

இதனால் 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்தன. உதயன் மற்றும் சுடரொளி என்னும் இரு பத்திரிகைகளை வைத்து சம்பாதிப்பது போதாமல் உள்ளுரில் சிறு முதலீட்டுடன் ஆரம்பிக்கப்பட்ட ஏராளமான ஐஸ்கிரிம் கம்பெனிகளையும் முடக்கி அவர்களை தொழிலற்றவர்களாக்கினீர்கள். என்னே உங்களது மனிதநேயம்!

2010ம் ஆண்டு யாழில் ஊடக நிறுவனங்களின் கட்டமைப்பை உருவாக்குவதற்காக அமைச்சர் டக்ளஸால் விடுக்கப்பட்ட அழைப்புக்கமைய அதில் கலந்துகொண்டு வழங்கப்பட்ட ரூ25ஆயிரம் நிதியைப் பெற்றுக்கொண்ட நீங்கள், போரால் தங்களுடைய புகைப்பட கருவிகள், மடிக்கணினிகளை இழந்துள்ள கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தனது பண்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் வழங்கப்பட்ட மடிக்கணினியை உங்களது ஊடகவியலாளர் பெற்றுக்கொண்டார் என்பதற்காக அவரை பணியைவிட்டு நீக்கியது ஏன்?

ஊடகவியலாளர்கள் தங்களது பாதுகாப்பிற்காகவும் தமது கோரிக்கைகளை முன்வைப்பதற்காகவும் அவர்களது தேவைகளையும் பிரச்சினைகளையும் வெளிப்படுத்துவதற்கான களமாக தமக்கென ஒரு சங்கத்தை மாவட்ட ரீதியாக அமைத்து செயற்படுவது வழமை. அதில் உங்கள் பத்திரிகையை சேர்ந்த ஊடகவியலாளர்கள் அங்கத்துவம் வகிக்கும் உரிமையைப் பறித்துள்ளீர்கள். சொந்த நிறுவன ஊழியர்களுக்கே உரிமை வழங்காத நீங்கள் எவ்வாறு ஒரு இனத்தின் விடுதலையை அங்கீகரித்து அவர்களுக்காகக் குரல்கொடுப்பீர்கள் என்று நம்புவது?

2013ஆம் ஆண்டு நடைபெற்ற வடமாகாணசபைத் தேர்தலில் அனந்தி சசிதரன் வெற்றிபெற்றுவிட்டால் அவர் உங்களது தொகுதியான வட்டுக்கோட்டையில் உங்களின் எதிர்கால அரசியலுக்கு பெரும் சவாலாக இருப்பார் என்பதற்காக அவரைத் தோல்வியடையச் செய்ய நடவடிக்கை எடுத்தீர்கள். அதற்காகவே உதயனின் பிரத்தியேக பதிப்பொன்றையும் தேர்தல் அன்று காலை வெளியிட்டீர்கள். அதில் அனந்தி அரசாங்கத்தின் பக்கம் போய்விட்டார் என்ற பொய்யான செய்தியையும் வெளியிட்டு அந்த பத்திரிகையை அச்சிட்டது டக்ளஸ் தேவானந்தா என்று போலியான குற்றச்சாட்டையும் முன்வைத்தீர்கள். நீங்கள் எவ்வளவு பெரிய யோக்கியவான்?

நீங்கள் இன்றுவரை உங்களது ஐக்கிய தேசியக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவில்லையாமே? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஆசனம் பெறுவதற்காக பத்திரிகையைக் காட்டி மிரட்டினீர்கள். வென்றபின் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் ஒட்டிக்கொண்டு உங்களது தொழிலை லாபகரமாகக் கொண்டுசெல்கிறீர்கள். இதை மறுக்க முடியுமா?

வடமாகாணசபைத் தேர்தல் நேரத்தில் முதலமைச்சரை தங்களது உதயன் விருந்தினர் விடுதியில் தங்கவைத்து வென்ற பின்னர் உங்களது வியாபாரத்திற்காக அவரைப் பயன்படுத்த நினைத்து அவர் அதற்கு ஒத்துழைக்க மறுத்தமையினால் பின்னர் அவருக்கு எதிராக வரும் செய்திகளை தொடர்ச்சியாக முக்கியத்துவம் கொடுத்து முன்பக்கத்தில் பிரசுரித்து வந்தீர்கள். இது எத்தகைய இனப்பற்று?

2015ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் யாழ் தேர்தல் தொகுதியில் நீங்கள் அருந்தவபாலனின் வெற்றியைத் தட்டிப்பறித்ததை நாடே அறியும். நீங்கள் நேர்மையானவர்தானா? தமிழ் மக்கள் பேரவையை துரோகியாக காட்ட நீங்களும் உங்கள் பத்திரிகையும் முற்பட்டு அம்பலப்பட்டு போய் நிற்கின்றீர்கள். 

தமிழ் மக்கள் பேரவையை துரோகியாக விமர்சனம் செய்யும் நீங்கள் என்றாவது முகம் பார்க்கும் கண்ணாடியின்முன் நின்று உங்களை நீங்களே விமர்சித்துப் பார்த்திருக்கிறீர்களா? உங்களது நிழல்கூட உங்களுடன் இருப்பதற்கு வெறுக்குமே. இனிமேலாவது இத்தகைய சேறுபூசும் விமர்சனங்களைத் தவிர்த்து முடிந்தால் சமுதாயத்திற்கு உதவி செய்யுங்கள் அல்லது தமிழ் மக்கள் போட்ட பிச்சையில் உங்களது தொழிலை அபிவிருத்தி செய்து வளமாக வாழுங்கள். மக்களை ஏமாற்றாதீர்கள். மக்களை தவறான வழியில் திசைதிருப்பாதீர்கள். நாளை நீங்கள் கூட பேரவைக்குள் சேர வேண்டிய நிலை வரலாம். 

பாராளுமன்ற உறுப்பினர் அவர்களே! 

மேற்குறிப்பிடப்பட்ட விடையங்கள் யாவும் உங்களை பற்றி பலருக்கும் தெரிந்தவையே. தெரியாத விடையங்களை தெரியப்படுத்துவதற்கு முன்னர் உங்களை நீங்களே மீளாய்வுக்கு உட்படுத்திக்கொள்ளுங்கள். 

உதாரணத்துக்கு ஒரு விடையத்தை சூசகமாக குறிப்பிடுகின்றோம். இந்த விடையம் உங்களையும் உங்கள் மெய்ப்பாதுகாவலர்களையும் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று நீங்கள் நினைக்கலாம். அது உங்களுக்கும் உங்கள் மெய்ப்பாதுகாவலர்களுக்கும் இடையிலான உறவு பற்றியது புரிகிறதா? நிச்சயம் இப்போது உங்களுக்கு பொறி தட்ட வேண்டும். 

இதைப்போல நீங்கள் சந்தித்த இராஜதந்திரிகளுடனும் வெளிநாட்டு பயணங்களின் போதும் நீங்கள் நடந்துகொண்ட முறைகள் தொடர்பாகவும் பல தகவல்களை விரைவில் வெளியிட வேண்டிய நிலைவரும் என்பதையும் ஒரு எச்சரிக்கை மணியாக உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
 

-யாதுமாகி-