தமிழர்களை விடாமல் துரத்தும் மழை.. சென்னை போன்றே கிளிநொச்சியும் வெள்ளத்தில் மிதக்கிறது !

கிளிநொச்சி பகுதியில் பெய்து வரும் கனமழையால் சென்னையைப்போல அந்த நகரமே நீரில் மிதக்கிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு பெய்து வரும் கனமழையால் ஊரை சுற்றியுள்ள அனைத்து குளங்களுக்கும் நீர் வரத்து அதிகம் உள்ளது. எனவே, குளங்களில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


பரவலாக மக்கள் குடியிருப்புக்கள் எங்கும் வெள்ளம் பாய்ந்துள்ள நிலையில் இரணைமடு குளம் 29.04 அடியும் அக்கராயன் குளம் 25.09 அடியும், கரியாலை நாகபடுவான் குளம் 11.00 அடியும் கல்மடுக்குளம் 24.09 அடியும், கனகாம்பிகைக்குளம் 11.25 அடியும்,நீர் தேங்கியுள்ளது. அதே போன்று வன்னேரிக்குளம் 9.10 அடியும், புதுமுறிப்புக்குளம் 20.00 அடியும், பிரமந்தனாறுக்குளம் 13.04 அடியும், குடமுருட்டிக் குளம் 8.11 அடியும் நீர்மட்டத்தை எய்தியுள்ளன.