முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் பங்கு கொள்ளும் சக்கர நாற்காலி மரதன் ஓட்டப்போட்டி வருகின்ற வியாழக் கிழமை 03.12.2015 அன்று வவுனியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஓமந்தை பாடசாலை முன் ஆரம்பமாகும் இந்த மரதன் ஓட்டமானது வவுனியா நகரை வந்தடையும்,
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடாத்தப்படும் இப்போட்டியானது , உயிரிழை எனும் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடந்து நிகழ்வுகள் மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்தோடு இணைந்து வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக நடை பெற இருக்கின்றது.
போரினாலும், இயற்கை அனர்த்தத்தினாலும், விபத்தினாலும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு, சக்கரநாற்காலிக்குள் முடக்கப்பட்ட நிலையில் வடக்கு கிழக்கில் வாழும் அனைவரையும் ஒருங்கிணைக்கும் அமைப்பாக உயிரிழை அமைப்பு இயங்குகின்றது. முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோரை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்ட அமைப்பான உயிரிழை, அவ்வாறு பதிக்கப்பட்டோரின் வாழ்வில் ஓரளவு ஆறுதலை ஏற்படுத்தும் நோக்குடன் இயங்கிவருகின்றது குறிப்பிடத்தக்கது.
போரினதும் அனர்த்தத்தினதும் வடுக்களையும் , வலிகளையும் தாங்கி வாழ்வோர் தமது வாழ்வியல் மற்றும் , சவால்கள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு , அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை சமூகத்தின் பார்வைக்கு கொண்டுவருவதற்காக இப்போட்டிகளை உயிரிழை ஏற்பாடு செய்கின்றது.
அப்போட்டிகளின் ஒரு அங்கமாக சக்கர நாற்காலி கூடைப்பந்தாட்ட போட்டி வவுனியா நகர சபை மைதானத்தில் மிகவும் சிறப்பாக கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.
இப்போட்டிகளுக்கு பின்வருவோர் அனுசரணை வழங்குகின்றார்கள்
- ஊதா அமைப்பு (லண்டன்)
- உதவும் உறவுகள் அமைப்பு (சுவிஸ்)
- வாழவைப்போம் அமைப்பு (கனடா)
- Accountancy group (striving .Achieving. Encouraging)
- SUGUN (Cheap& Quality app calls)
- பிரித்தானியா தமிழர் பேரவை
- சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் விடியல் அமைப்பினர்
- கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு (ஐ.இ)
- மாவட்ட பொது வைத்திய சாலை (வவுனியா)
சாதாரண மனிதர்களாக வாழ்ந்து பின்னர் சக்கர நாற்காலிகளுக்குள் முடக்கப்பட்டுள்ள உங்கள் சகோதரர்களின் வாழ்வில் ஓர் முன்னேற்றத்தை கொண்டு வருவதற்கு இந்த பூமிப்பந்தில் வாழும் தமிழ்கூறும் நல்லுககத்தினர் நிட்சயம் கரம் கொடுப்பார்கள் என்ற பெரும் நம்பிக்கையோடு நாம் இந்த உயிரிழை என்னும் அமைப்பை உருவாக்கியதோடு அவர்கள் தொடர்பான தகவல்களையும் உயிரிழை பகிர்ந்து வருகின்றது.
பின்வரும் இலக்குகளை நோக்கி பணிபுரியும் உயிரிழைக்கு உதவும் உள்ளம் கொண்டோருக்காக பின்வரும் தகவல்களை பகிர்கின்றோம்
உயிரிழையின் இலக்கு :
முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட தனி நபரோ அல்லது குடும்ப உறுப்பினரோ தாங்களே சுயமாக இயங்கக்கூடிய வகையில் மேம்படுத்தலும், உறுதிப்படுத்தலும்.
முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக உயிரிழை அமைப்பினூடாக குரல் கொடுத்தலும், பெற்றுக் கொடுத்தலும்.
மருத்துவம், வாழ்வாதாரம், போக்குவரத்து நிரந்தர பராமரிப்ப மையம் ஆகிய நான்கினையும் நீதியான, நேர்மையான வகையில் வழங்குதல், உறுதி செய்தல்.
அரச மற்றும் அரசசார்பற்ற அமைப்புக்களின் உதவியினை நேரடியாகவோ அல்லது உயிரிழையூடாகவோ பெற்றுக் கொடுப்பதும், உறுதிப்படுத்தலும்
எனவே எமதுஅமைப்பிற்கககு ஒத்துழைப்பு வழங்கி வரும் அனுசரணையாளர்களுக்கும் எம்மோடு இணைந்து செயற்ப்படும் மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்தினருக்கும் பிரதேச செயலகத்தினருக்கும் இணைந்து செயற்படும் அத்தனை உள்ளங்களுக்கும் எமது அமைப்பிலான நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.
Account number : Uyirilai Spinal Cord Injury Association , Bank of Ceylon ,Vavuniya. A.C No. 72954093
தகவல்
வி.ஜெயகாந்தன்
தலைவர்
உயிரிழை.