முன்னதாக இன்ற நண்பல் யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு பல்கலைக்கழக சமூகத்தினர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர். இந்த நிலையில் மாவீரர் நினைவுச்சுடர் ஏற்றப்படும், நேரமான மாலை 6.05 மணியளவில், யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள நினைவுத்தூபியில் தீபமேற்றில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதேவேளை, இன்று இராணுவ கெடுபிடிகளையும் மீறி வடக்கு கிழக்கில் பரவலாக மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் புலம் பெயர் நாடுகளிலும் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.