உணவுப் பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் !

எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆறு உணவுப் பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆறு உணவுப் பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்மைசூர் பருப்பு, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், கோழி இறைச்சி, கோதுமை மற்றும் செத்தல் மிளகாய் ஆகியவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலை அறிவிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
அதன்பிரகாரம், ஒரு கிலோகிராம் மைசூர் பருப்புக்கு 190 ரூபாவும், ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்குக்கு 145 ரூபாவும் அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோகிராம் வெங்காயத்தின் சில்லறை விலை 155 ரூபாவாகவும், தோல் அகற்றிய கோழி இறைச்சி ஒரு கிலோகிராம் 480 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொதியிடப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் அதிகபட்ச சில்லறை விலை 95 ரூபாவாகும்.
செத்தல் மிளகாய் ஒரு கிலோகிராமின் அதிகபட்ச சில்லறை விலை 355 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.