பிரான்ஸ் பரிஸில் பயங்கரவாதிகளிடம் சிக்கியுள்ள பணயக்கைதிகள்!! இதுவரை 60 பேர் பலி!! (காணொளி) இரண்டாம் இணைப்பு
பரிசின் பல இடங்களில் துப்பாக்கிச் சூடுகள் மற்றும் வெடிகுண்டுத் தாக்குதல்கள்
நடாத்தப்பட்டதை அடுத்து, பயங்கரவாதிகள் நூற்றுக்கணக்கானவர்களைப் பணயக்கைதிகளாகப்
பிடித்து வைத்துள்ளனர். அமெரிக்காவின் பிரபல ரொக் இசைக்கச்சேரியைப் பார்த்துக்
கொண்டிருந்த நூற்றுக்கணக்காணவர்களை Bataclan இற்குள் பணயக்கைதிகளாகப் பிடித்துள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த தீவிரவாத தாக்குதலைத்
தொடர்ந்து அந்த நாட்டிலுள்ள உலகப் புகழ் பெற்ற ஈபிள் டவரின் விளக்குகள்
மங்கல் ஒளியில் ஒளிரவிடப்பட்டன. மேலும் காலவரையின்றி மூடப்படுவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பல்வேறு இடங்களில்
குழுக்களாகப் பிரிந்து தீவிரவாதிகள் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். இதில்
127 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
இந்த இசைநிகழ்ச்சி மண்டபத்தின் பிற்பக்கத்தால், சுட்டபடி
நுழைந்த பயங்கரவாதிகள் உள்ளிருந்தவர்களைப் பணயக்கைதிகளாக வைத்துள்ளனர்.
இப்பகுதியில் பெருமளவில் கனரக ஆயுதங்களுடன் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு,
பத்தக்லோன் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்தத் தாக்குதல்களில் 40 பேர் கொல்லப்பட்டதாகத்
தற்காலிகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாம்
இணைப்பு
இந்நிலையில், உலக அதிசயங்களில் ஒன்றான பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ஈபிள் டவரில் ஏறி நகரின் அழகை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம். இங்கு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதையடுத்து டவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஈபிள் டவர் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.