வடபுலத்து மக்கள் நிம்மதியாக வாழக் கூடாது என்பதில் பல தரப்பினரும் கவனமாக இருப்பது தெரிகிறது.
ஒரு
காலத்தில் பொலிஸாரின் நாட்டாமைத்த னங்கள்; ஊர் சார்ந்த சண்டியர்களின்
அட்டகாசம்; இதன் பின்னர் ஆயுதப் போராட்டம்; ஒன்றுக்கு மேற் பட்ட
இயக்கங்கள்; கூடவே படையினரின் பிரசன் னங்கள்; தொடர்ந்து இடப்பெயர்வுகள்;
இறுதி யுத் தம்; பேரழிவு என்பதாக கடந்த நாற்பது ஆண்டு கால வரலாறு
பதிவாகியுள்ளது.
2009ஆம் ஆண்டில் வன்னிப் பெருநிலப்பரப் பில்
நடந்த யுத்தம் மிகப் பெரிய உயிரிழப்புக்களைத் தந்ததுடன், எங்கள் தமிழ்ப்
பண்பாட்டின் அடித் தளங்கள் அனைத்தையும் வேரோடு பிடுங்கிக் கொண்டன.
இவற்றின் விளைவு கணவனை இழந்த இளம் பெண்கள் தங்கள் குடும்பச் சுமையைத் தாங்க வேண்டிய பரிதாபத்திற்கு ஆளாகினர்.
ஆயிரக் கணக்கான சிறுவர்கள் பெற்றோரைப் பறி கொடுத்து அநாதைகளாகினர்.
தத்தம் தாய் தந்தையரோடு கூடி வாழ்ந்த அந்தச் சிறுவர்கள் அநாதை இல்லங்களிலும் பராமரிப்பு நிலையங்களிலும் வாழ வேண்டியதாயிற்று.
பெற்றவர்களின்
இழப்பால் பிள்ளைகள் அன்பையும் இழந்தனர். இந்தத் துயரங்கள் இந்த
ஜென்மத்தில் முடிந்து போகாது என்ற நிலைமையில், எங் கள் தமிழர் தாயகத்தில்
குழப்பங்களும் வன்முறைகளும் கலாசாரச் சீரழிவுகளும் ஏதோ ஒரு வகையில்
விஸ்வரூபம் எடுத்துக் கொண்டே இருக்கின்றன.
மகிந்த ராஜபக்
ஜனாதிபதியாக இருந்த போது கிறிஸ் பூதம் என்ற மிகப்பெரிய திகில் நாடகம்
வடபுல மண்ணில் அரங்கேறியது. அப்போது பாதுகாப்புச் செயலராக இருந்த கோத்தபாய
ராஜபக் கிறிஸ் பூதத்தை தமிழர்களின் ஒரு கற்பனைப் படைப்பாக
விமர்சித்திருந்தார். எனினும் கிறிஸ் பூதத்தின் உருவாக்கம்; அதன் நோக்கம்;
கிறிஸ் பூதங்கள் உருவாகிய இடங்கள்; அவை தங்கியி ருந்த இடங்கள் என
அனைத்தையும் அவர் அறி யாதவருமல்ல.
எதுவாயினும் கிறிஸ் பூத நாடகம் வடபுலத்து மக்களின் உறக்கத்தை நீண்டகாலத்திற்கு ஆக்கிர மித்திருந்தது.
பாலியல்
பலாத்காரங்கள், களவு என எல்லா மும் தலைவிரித்தாடின. இவை சற்றுத் தணிவு
பெற்றபோது, வாள்வெட்டுக் கலாசாரம் மேலெழுந் தது. எந்நேரமும் எதுவும்
நடக்கலாம் யாரையும் வாள் கொண்டு வெட்டலாம் என்ற நிலைமை இன்னமும் முற்றுப்
பெறாமல் இருக்கையில்,
இப்போது களவு மீண்டும் விஸ்வரூபம் எடுத்
துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் சில துறைக ளில் ஏற்பட்ட மாற்றங்கள் ஒரு
நிம்மதியான வாழ் வைத் தரும் என்று நினைத்த வேளை, இப்போது விஸ்வரூபம்
எடுத்துள்ள களவின் காரணமாக மக் கள் உறக்கத்தை தியாகம் செய்ய வேண்டிய
தாயிற்று.
எனவே இது தொடர்பில் பொலிஸார் தமது பணியை
தீவிரமாக்குவதுடன் சமூகச் சீரழிவுகளை கட்டுப்படுத்தும் செயற்பாட்டை
முழுமையாகச் செய் தாக வேண்டும். இல்லையேல் யாழ்ப்பாணம் உள்ளி ட்ட வட
புலத்தை வன்கலாசாரங்கள் தொடர்ந்தும் ஆக்கிரமித்துக் கொண்டே இருக்கும்.