வைத்தியராவதே எனது இலட்சியம்-: முதன்மை பெற்ற மாணவர்களின் இலட்சியம்!

யாழ்.மாவட்டத்தில் 192 புள்ளிகளைப் பெற்று
முதலிடத்தை தனதாக்கிய மாணவன் வசீகரன்

எதிர்காலத்தில் சிறந்த வைத்தி யராக உருவாகி எமது மக்களுக்கு சேவையாற்றுவதே எனது இலட் சியம் என புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றில் யாழ்.மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்ற சோதிநாதன் வசீ கரன் கூறியுள்ளார்.
யாழ்.புனித ஜோண் பொஸ்கோ வித்தியாலய மாணவன் வசீகரன், வெளியாகியுள்ள தரம் 5 புலமை ப்பரிசில் பரீட்சை பெறுபேற்றில் 192 புள்ளிகளை பெற்று சித்தியயய்தி மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத் தினை பெற்றுள்ளான். மாணவனின் வெற்றி குறித்து கேட்டபோதே அவன் மேற்கண்டவாறு தெரிவித்தான்.
கொக்குவிலை சேர்ந்த நான் விடாமுயற்சியுடன் கல்வி கற்று இந்த சிறந்த பெறுபேற்றினை பெற்றுள் ளேன். இதற்கு எனது பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,பெற்றோர் உறுதுணையாக இருந்துள்ளனர்.
அதிகாலையிலும் இரவிலும் சுய கற்றலை மேற்கொண்டமையினால் தான் மாவட்ட மட்டத்தில் என்னால் முதலிடம் பெற முடிந்துள்ளது.
என்னைப்போல் ஏனைய மாணவர்களும் வரவிரும்பினால் கட்டாயம் காலையிலும் இரவிலும் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அந்த மாணவன் மேலும் கூறினான்.                  (இ-4)
தன்னம்பிக்கையிருந்தால் அனைவரும் சாதிக்கலாம்
யாழ்.மாவட்டத்தில் 191 புள்ளிகளைப்பெற்று 
இரண்டாமிடம் வந்த மாணவன் துளசிகன்

விடாமுயற்சியும் தன்னம்பிக்கையு மிருந்தால் அனைவராலும் கல்வியில் சாதிக்க முடியுமென புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் இரண்டாமிடம் பெற்ற சிவஞானம் துள சிகன் தெரிவித்தார்.
யாழ்.இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் தற்போது வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பெறு பேற்றில் 191 புள்ளிகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 2ஆம் இடத்தைப்  பெற்றுக் கொண்டுள்ளான்.
மாணவனின் பெறுபேறு குறித்து கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தான்.
வண்ணார்பண்ணையை சேர்ந்த நான் மாவட்ட மட்டத்தில் இரண்டாம் நிலையைப்பெற்றுள்ளேன்.  எனது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் எனது பெற்றோரின் உதவியுடன் கற்றதனால் இந்த சிறந்த பெறுபேற்றைப் பெற முடிந்துள்ளது.
எதிர்காலத்தில் ஒரு வைத்தியராக வந்து சிறந்த சேவையாற்ற வேண்டு மென்பதே எனது விருப்பாகும் என் றான் மாணவன்.