இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் புளியங்குளம் வடக்கில் வழங்கப்பட்ட வீடுகள் பல பொருத்தமற்றவர்களுக்கும், வீடுகள் உள்ளவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளமையால் சில வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கிராம அலுவலரின் உறவினரான வீடு உள்ள ஒருவருக்கு வழங்கப்பட்ட வீடு ஒன்று எட்டு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், அப்பகுதியில் உண்மையில் இருப்பதற்கு கூட வீடு இல்லாத பலர் வாழ்கின்றனர். அவர்கள் தமக்கு வீட்டுத் திட்டம் வழங்கப்படவில்லை என கூறுகின்றனர்.
தனிநபர்கள், அப்பகுதி அரச உத்தியோகத்தர் ஒருவரின் உறவினர்கள் என பலருக்கும் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்காலிக வீடு யானைகளின் தாக்கம், இயற்கை சீர்கேடு என்பவற்றினால் 2013 ஆம் ஆண்டு இடிந்து விழுந்த நிலையில் உள்ள குடும்பம் கூட இன்று வரை வீடு இன்றி உறவினர் வீட்டிலேயே தங்கியுள்ளனர்.
தடுப்பில் இருந்து புனர்வாழ்வு பெற்று வந்தவர்களின் குடும்பங்கள், யுத்த வலியைச் சுமந்த குடும்பங்கள் என பல குடும்பங்கள் இன்றும் வீட்டுத் திட்டத்திற்காக ஏங்கி நிற்கின்றன.
எனவே, வீட்டுத்திட்ட மோசடி குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி: NJN