தமிழ் நாட்டில் உள்ள திருச்சி முகாமில் அடைக்கப்பட்டுள்ள சுரேஷ்குமார் ஞானசௌந்தரம் என்பவர் கடந்த மூன்று வருடங்களாக சிறப்பு
தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவர் இடுப்பின் கீழ்
இயங்காது படுக்கையில் இருப்பவர். இவரது அன்றாட கடமைகளுக்கும் இன்னொருவரின்
உதவி தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு தடுப்பு முகாமில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து தனக்கு உதவிக்கு ஒருவரை நியமிக்கும் படி அரசிடம் கேட்டும் பல மனுக்கள் கொடுத்தும் உதவிக்கு ஒருவரை நியமிக்க அரசு சம்மதிக்கவில்லை. முகாமில் அடைக்கப்பட்டுள்ள சக இலங்கை அகதிகள் இவருக்குரிய அன்றாட கடமைகளுக்கான உதவிகளை செய்து வந்தனர்.
எதை கேட்டார்கள் என்று எம் உறவுகளை இப்படி வதைக்கிறது இந்தியம்? இன்று காந்தி ஜெயந்தியாம்.. மகாத்மா பிறந்த நாளாம் அகிம்சையை தோற்றுப் போக வைக்கும் அநீதிகளின் தேசமாக இருந்து கொண்டே புத்தன் பிறந்த பூமி என கொண்டாடுகின்றார்கள். அகிம்சைதோற்றுப் போன தேசம் இந்தியா. ஈழ மக்களை பொருத்தவரை துரோகத்திற்கு மேல் துரோகம் செய்யும் இந்தியாவின் அநீதிகளின் அடையாளங்களில் ஒன்று சிறப்பு முகாம். மூட சொல்லுங்கள்.. எங்கள் உறவுகளை விடுவிக்க சொல்லுங்கள் என்று போராட்டம் நடாத்திவருகின்றனர்.

இந்நிலையில் 01.10.2015 தொடக்கம் முகாமில் உள்ள அனைவரும் தங்களை விடுதலை
செய்யக்கோரி பட்டினிப்போராட்டம் நடத்துகின்றார்கள். அதனால்
சுரேஷ்குமாருக்கு,உதவுவதற்கு யாரும் இல்லை. தற்காலிகமாவெனினும் ஒருவரை
உதவிக்கு நியமிக்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் கேட்ட பொழுதும் அவருக்கு,
பதில் எதுவும் வழங்க வில்லை என்பதுடன் எவரையும் உதவிக்கு விடவுமில்லை.
இதனால் மனவிரக்தியடைந்து தான் வாழ்வதை விட இறந்து விடலாம் என்று தனது கைகளை
அறுத்து தற்கொலைக்கு முயன்று மிகவும் ஆபத்தான நிலையில் திருச்சி மருத்துவ
மனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்....