மிகப் பெரிய புராணக் கதையான மகாபாரதம், எத்தனை முறை, யார் சொன்னாலும் திகட்டாத சுவாரஸ்யம் மிக்கது.
‘மகாபாரதம்' டிவி தொடராக வெளிவந்து இரண்டு வருடங்களும் மேல் சின்னத்திரையில் ஓடியது.
மகாபாரதம் மற்றும் அதில் வரும் கிளைக் கதைகள் அடிப்படையில் ஏராளமான திரைப்படங்கள் வந்துள்ளன.
இந்த மகாபாரதத்தை இரண்டே கால் மணி நேரத்தில் சொல்வது என்பது எத்தனை சவாலான விஷயம்!
ஆனால் அந்த சவாலை கல்லூரி மாணவர்களிடையே பலத்த கைதட்டல்களுடன் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் நடிகர் சிவகுமார்.
சமீபத்தில் ஈரோடு வேளாளர் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகாபாரதக் கதையை இரண்டே கால் மணி நேரத்தில் சொற்பொழிவாக நிகழ்த்திக் காட்டி சாதனை புரிந்துள்ளார் சிவகுமார்.
இதற்காக இரண்டு ஆண்டுகள் மகாபாரத கதையுடனே வாழ்ந்திருக்கிறார் அவர். இதற்கு முன் இராமாயண கதையையும் இதேபோல், இரண்டேகால் மணி நேரத்தில் இதே கல்லூரியில் சொல்லி சாதனை நிகழ்த்தியுள்ளார் சிவகுமார். அது ஆடியோ சிடி வடிவில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
சிவகுமாரின் மகாபாரத சொற்பொழிவை அவரது குடும்பத்தினர் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் நேரில் கண்டு ரசித்தனர்.

நன்றி: தட்ஸ் தமிழ்