யுத்தம் நிறைவடைந்து 5 ஆண்டுகள் கடந்தும் வடக்கு மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்- ஏபிசி செய்தி
யுத்தம் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் வடக்கு மாகாண மக்கள் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதில் நெருக்கடிகளையும் சிரமங்களையும் எதிர்நோக்கி போராடி வருகின்றனர்.
இலங்கைஅரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் கடந்த கால குற்றச் செயல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்குமாறு முயற்சிகளை ஆரம்பித்துள்ளது.
வடக்கில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இந்துக்களே வாழ்ந்து வருகின்றனர்.
தசாப்தங்களாக நீடித்த இலங்கை யுத்தத்தில் 100,000த்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தின் பகுதிகளில் உட்கட்டுமான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ள போதிலும், அண்டிய பகுதிகளின் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்தும் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக காணிகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்த காரணத்தினால் இவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட்டுள்ளது.
உள்ளக விசாரணையில் நியாயம் கிட்டும் என தமிழ் மக்கள் நம்பவில்லை
உள்ளக விசாரணைப் பொறிமுறைமையின் ஊடாக நியாயம் கிட்டும் என தமிழ் மக்கள் நம்பவில்லை.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான பொறுப்பு கூறலை உறுதி செய்யவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
உள்ளக விசாரணைப் பொறிமுறையின் ஊடாக நியாயம் கிட்டும் என எதிர்பார்க்கவில்லை என அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற்றுக்கொண்டுள்ள இலங்கைத் தமிழர் ஹரன் மயில்வாகனம் கூறுகின்றார்.
“பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணைகள் மட்டுமே அனைத்து தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் குறித்து சுயாதீன விசாரணை நடத்த்த வழியமைக்கும். தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நியாயம் கிட்ட சர்வதேச விசாரணை அவசியமானது” என அவர் தெரிவித்துள்ளார்.
“விமானப் படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில் எனது சகோதரர் நிரந்தரமான முடமாக மாறியுள்ளார்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த எட்டு மாத காலப்பகுதிளில் யாழ்ப்பாணத்தில் ஓரளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக டொக்டர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் இயல்பு நிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
நன்றி: GTBC-தமிழில்,
(ABC News)