கொழும்பின் புறநகர் பகுதிகளில் 2008-2009ம் ஆண்டு பகுதிகளில் கடத்தப்பட்ட 11பேரும் திருகோணமலை க.படைமுகாமில் குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றிற்கு தெரிவித்துள்ளனர்.
கொழும்பின்
புறநகர் பகுதிகளில் 2008-2009ம் ஆண்டு பகுதிகளில் இனந்தெரியாத நபர்களால்
கடத்தப்பட்ட 11பேரும் திருகோணமலை கடற்படைமுகாமில் தடுத்து
வைக்கப்பட்டிருந்ததாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றிற்கு இன்று
தெரிவித்துள்ளனர்.
இன்று இது தொடர்பான வழக்குவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை குற்றப்புலனாய்வு பிரிவினர் இதனை தெரிவித்துள்ளனர்.
காணமற்போனவர்களின்
குடும்பத்தினர் தங்கள் உறவுகளிற்கு என்ன நடந்தது என்பது இன்னமும்
தெரியாதநிலையில் உள்ளனர் இதனால் அவர்கள் கடும் மனஉளைச்சலிற்கு
உள்ளாகியுள்ளனர் என அவர்கள் சார்பில் ஆஜரானசட்டத்தரணியொருவர்
தெரிவித்தார்.
இதனை செவிமடுத்த நீதவான் குறிப்பிட்ட விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொலிஸாரிற்கு உத்தரவிட்டார்.
இதேவேளை
இந்த கடத்தல்சம்பவங்களிற்கு காரணமானவர்களை கைது செய்வதற்காக மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
கடற்படையை
சேர்ந்த சம்பத்முனசிங்க என்பவருடன் இணைந்து செயற்பட்ட குழுவினர் 2009ம்
ஆண்டு தெகிவளையில் 5 இளைஞர்களை கடத்தி அவர்களது உறவினர்களிடமிருந்து 10
மில்லியன் கோரியதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்திற்கு
தெரிவித்தனர்.கொழும்பு மற்றும் திருகோணமலையில் உள்ள கடற்படை முகாம்களில்
உள்ள நிலத்திற்கு அடியிலான இரகசிய அறைகளில் கடத்தப்பட்ட இளைஞர்கள் தடுத்து
வைக்கப்பட்டிருந்ததாகவு ம் குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றிடம் தெரிவித்தனர்.
மேலும்
முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரனாகொடவிற்கு இந்த கடத்தல்கள் குறித்து
தெரிந்திருந்தது எனவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.