கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவு
காணிப்பிரச்சினைகள் காணப்பட்டு வருவதாக பிரதேச மற்றும் மாவட்ட காணித்
திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மீள்குடியேற்றத்தின் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை அதிகளவானதும் முதன்மையானதுமான பிரச்சினையாக காணிப் பிரச்சினையே காணப்படுகிறது.
இதன் காரணமாக பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம், பொலீஸ் நிலையம், மத்தியஸ்தர் சபை, நீதி மன்றம் என மக்கள் நாளாந்தம் அழைந்து திரிவதனையும் காணமுடிகிறது. எனச் சுட்டிக்காட்டும் அதிகாரிகள்.
எவ்வித ஆவணங்களும் இன்றி ஒரு காணியை இருவர் உரிமை கோருவது,
ஒருவருடைய காணியை இன்னொருவர் மோசடியாக விற்பனை செய்தல்,
பரம்பரை காணியை பகிர்ந்து கொள்லவதில் சகோதரர்களுக்கு இடையில் ஏற்படுகின்ற பிணக்கு,
2009 இற்கு முன் உரிய முறைப்படி ஆவணங்கள் எதுவும் மாற்றப்படாது கை துண்டின் அடிப்படையில் விற்பனை செய்து விட்டு தற்போது உரிய ஆவணத்துடன் மீளவும் உரிமை கோருதல்,
ஒதுக்கீட்டு காணிகளில் குடியிருப்பவர்களிடையே ஏற்படுகின்ற பிணக்கு,
அரச காணிகளில் குடியிருப்பதில் ஏற்படுகின்ற பிரச்சினைகள்,
வனவளத்திணைக்கள காணிகளில் குடியிருந்து வருகின்ற மக்களுக்கு ஏற்படுகின்ற பிணக்கு,
மக்களுக்கு சொந்தமான உறுதி அல்லது காணி அனுமதி பத்திர காணிகளை இரானுவம் தனது பயன்பாட்டிற்கு எடுத்துகொள்ளுதல்.
சில அதிகாரிகளினால் நியாயமற்ற முறையில் காணிப்பிணக்குகளை தீர்வு வழங்கியமையினால் ஏற்படுகின்ற பிணக்குகள்.
பொதுத் தேவைகளுக்கு ஒதுக்கப்பட்ட காணிகளை அத்துமீறி பிடித்தல்
போன்ற பலதரப்பட்ட காணிப்பிணக்குகள் கிளிநொச்சியில் நிலவிவருகிறது. இதனால் மக்கள் மேற்படி குறிப்பிடப்பட்ட இடங்களை நோக்கி அழைந்து திரிகின்றனர். அத்தோடு இந்த காணிப் பிணக்குகள் காரணமாக மக்களுடையே அடிதடி வெட்டு குத்து எனவும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.
எனவேதான் பொருத்த பொறிமுறைக்கு ஊடாக இயலுமான வரை விரைவாகவும் நியாயமாகவும் மக்களின் காணிப்பிணக்குளை தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது.