த.தே.கூட்டமைப்புக்குள் சிக்கலை ஏற்படுத்தும் அவசியம் சிலருக்கு உள்ளது-: சீ.வி.விக்னேஸ்வரன்

TNAக்குள் சிக்கலை ஏற்படுத்தும் அவசியம் சிலருக்கு உள்ளது!"TNAயின் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் என்னுடன் நட்புடன் உள்ளனர்"










தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்குள் சிக்கலை ஏற்படுத்தும் தேவைப்பாடு சிலருக்கு உள்ளதாக, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதனாலேயே கூட்டமைப்பின் தலைவர்கள் தன்னுடன் அதிருப்தியில் உள்ளதாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமையால், கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இடையில் எனக்கு முரன்பாடு ஏற்பட்டுள்ளதாக, அவர்கள் குறிப்பிடுகின்றனர் என விக்னேஸ்வரன் கூறினார்.

எதுஎவ்வாறு இருப்பினும் அவ்வாறான எதிர்ப்புகள் கூட்டமைப்புக்குள் தனக்கு ஏற்படவில்லை என, விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக வௌியான தகவல்கள் குறித்து பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

அத்துடன் கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் தன்னுடன் நட்புடனேயே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.