யாழ் ஆவரங்கால்
பகுதியில் மினி வானும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு
உள்ளாகியதில் சிறுவர்கள் பெண்கள் உட்பட 21 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆவரங்கால் சந்தியில் இன்று(12) காலை 10.30 மணியளவில் இவ் விபத்து சம்பவம் இடம்பெற்று உள்ளது.
பருத்தித்துறையில்
இருந்து யாழ் நோக்கிச் சென்ற மினிவானும், யாழில் இருந்து அச்சுவேலி
நோக்கிச் சென்ற லொறியுமே நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்துச்
சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த 21 பேரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த 21 பேரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அச்சுவேலி பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி: குளோபல் தமிழ் செய்தி.