த.தே.கூட்டமைப்பின் பிரசார கூட்டத்தை குழப்ப வந்த E.P.D.P யினரை வாள் கொண்டு விரட்டிய தீவக மக்கள்!!!

யாழ்.தீவகம் புங்குடுதீவு பகுதியில் நேற்று(06)நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் குழப்பம் விளைவிக்க வந்த ஈ.பி.டி.பியினருக்கு எதிராக தீவக மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளதுடன், முதியவர் ஒருவர் ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச சபை தலைவரை வாள் கொண்டு துரத்தினர்.

தீவகத்தில் நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரத்தில் குறுக்கிட்டு அதனைக் குழப்பியடிக்க முயன்ற ஈ.பி.டி.பி கட்சியினரை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து அங்கிருந்து விரட்டினர்.
பொதுமகன் ஒருவர் வாள்கொண்டு அவர்களை விரட்டிச் சென்ற நிலையில் குழப்பம் விளைவித்த ஈ.பி.டி.பியினர் அங்கிருந்து விலகிச் சென்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளருக்கான ஆதரவு பிரசாரக் கூட்டம் நேற்று புங்குடுதீவு 4ம் வட்டாரத்தில் நேற்று நடைபெற்றது.
வட மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தன்ர்.
அப்போது தேர்தலில் களமிறங்கியுள்ள மறறொரு கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதேச சபைத் தலைவர் ஒருவர் தலைமையில் வந்த கட்சியினரே இந்தப் பிரசாரத்தில் குறுக்கீடு செய்தனர்.

                                                                                                             

பிரசாரத்துக்கு இடையில் புகுந்த அவர்கள் தங்களது கட்சி சார்ந்த தேர்தல் பிரசுரங்களை மக்களிடம் விநியோகித்தனர்.
இதனையடுத்தே அங்கு திரண்டிருந்த மக்கள் குழப்பம் விளைவித்த கட்சி உறுப்பினர்களைத் தீட்டித் தீர்த்தவாறு அங்கிருந்து விரட்டியடித்தனர்.