குறும்பட நடிகை என்ற போர்வையில் யாழில் நடக்கும் கொடூரங்கள்- மக்களே உஷார்!!:

யாழில் குறும்படம் நடிப்பதாக கூறிவந்த நடிகை ஒருவர், தனது மோபைல் போன் பழுதடைந்ததால் அதனை திருத்தக் கொடுத்துள்ளார். மோலைப் போனை திருத்த முற்பட்ட கடைக்காரர் அதில் குறித்த பெண் நிர்வாணமாக இருப்பதும் , பலருடன் அரட்டை அடித்து கிளர்சியான போஸ் கொடுத்து படத்தை எடுத்திருப்பதையும் அவதானித்துள்ளார். இதனை அவர் மீடியாக்களுக்கு கசிய விட்டுள்ளார். யாழில் ஒரு பெரிய குரூப், இவ்வாறு இயங்கி வருகிறது என்கிறார்கள். இவர்கள் வேலையே தாம் குறும்பட இயக்குனர்கள், என்று கூறி பருவ வயது மாணவிகளையும் யுவதிகளையும் கவர்ந்து மெல்ல மெல்லமாக அவர்களை விபச்சாரத்தினுள் தள்ளி விடுகிறார்கள்.குறும்படம் என்றாலே கட்டிப் பிடி காட்சிகளும், முத்தமிடும் காட்சிகளும் நிறையவே வரும். இதனால் குறித்த இளைஞர்கள் இப்பெண்களை தூண்டி, கிளர்சியைக் கூட்டி தமது சொந்த தேவைக்கும் பாவிக்கிறார்கள். 

{உ+ம்(கோப்புகாட்சி)}
இக் கும்பல்கள் குறி வைப்பது பாடசாலை மாணவிகள், மற்றும் இளவயது யுவதிகளையே. குறும்பட நடிகர் என்றும் குறும்பட தயாரிப்பாளர்கள் என்றும் பீலா விட்டு தமிழ்ச் சினிமாப் பாணியில் தமக்கென ஒரு இமேஜை உருவாக்குவது போல் காட்டிக் கொண்டு இவர்கள் செய்யும் கேவலங்கள் சொல்லில் மாளாதவை. யாழ்ப்பாணத்தில் சங்கம் ஒன்று கூட இவர்கள் அமைத்து வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த நடிகர்கள், நடிகைகள், கதாநாயகர்கள், கமராமேன்கள் என இவர்களின் பட்டியலில் இருப்பவர்களில் 95 சதவீதமானவர்கள் யாழ் வாசிகளே.சமூகத்தில் உள்ள மிகவும் வறுமைப்பட்ட நிலையில் வாழும் பெற்றோர்களின் வயதுக்கு வந்த அழகான யுவதிகள், மாணவிகளை குறி வைக்கும் இந்த புறோக்கர்கள் குறும்படத்தின் மூலம் பெருமளவு பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகள் காட்டி குறித்த யுவதிகளை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வருகின்றனர். இவர்களை வைத்து குறும்படங்களை இயக்குகின்றனர். பாட்டி வடை சுட்ட கதையில் கூட ஒரு நீதி இருக்கும். ஆனால் இவர்கள் எதற்காக குறும்படங்களை எடுக்கின்றார்கள் என்றே புரியாத அளவுக்கு சில குறும்படங்களை எடுக்கின்றார்கள். இவர்களுக்கு குறித்த குறும்படம் எடுப்பதற்கான செலவு எங்கிருந்து வருகின்றது? புலம்பெயர்ந்த சில தமிழ்க் காமுகர்கள் இதற்கு உதவி புரிவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பின்னர் இப் பெண்களை தமது வலைக்குள் விழுத்தி, அவர்களை புலம்பெயர் நாட்டில் உள்ள குறித்த அந்த இளைஞர்களோடு பேச வைப்பது. பின்னர் அவர்கள் யாழ் வந்தால் அவர்களை ஒன்று சேர்ப்பது என்று பல்வேறு விடையங்கள் மிகவும் அந்தரங்கமாக நடைபெற்று வருகிறது. இன் நிலையில் தான், தன்மீது வீண் பழி போடுவதாகவும். தான் துணிச்சலாக இதனை எதிர்கொள்வதாகவும் குறித்த நடிகைகள் சிலர் கூறுகிறார்கள். வழமையாக இதுபோன்ற சிக்கல் வரும்போது, எல்லோரும் கூறுவது போல தனது முகத்தை வெட்டி ஒட்டி விட்டார்கள் என்று இவரும் கூறியுள்ளார். ஆனால் இது வீடியோவாக பதிவாகியுள்ளது என்பதனை எவரும் மறைக்க முடியாது. யாழில் குறும்படம் எடுக்கும் இந்த கும்பலிடம் உங்கள் பிள்ளைகள் சிக்காமல் இருக்க நீங்கள் கவனமாக இருப்பது நல்லது.