உலகின் பழமையான மொழிகளில் நமது முதல் மொழி தமிழ் - ஆய்வில் தகவல்!!!

கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடி தமிழினம் என்பதற்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை என்பதற்கான மற்றுமொரு சான்று இது. கல் என்பது கல்வி, மண் என்பது மன்னர் ஆட்சி. கல்வியும், மன்னராட்சியும் தோன்றுவதற்கு முன்னரே தோன்றிய இனம் தமிழினம். இலக்கணத்தை மொழிக்கு மட்டுமின்றி, வாழ்வியலுக்கும் வகுத்த இனம் தமிழினம், தமிழர்கள்!!! உலகில் பேசப்பட்டு வரும் பழமையான மொழிகளில் முதல் மொழி தமிழென்று சமீபத்திய ஆய்வும் ஊர்ஜிதம் செய்துள்ளது.....







1வது இடத்தில் தமிழ் மொழி (Tamil) 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மொழி தமிழ் மொழியாகும். இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது.
2 வது இடத்தில் சமஸ்கிருத மொழி (Sanskrit) இந்தியாவில் உருவான சமஸ்கிருத மொழி, பல ஐரோப்பிய மொழிகளுக்கு அடிப்படையானது. ஆனால் இதே மொழி தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது. இது கி.மு. 3000 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.
3 வது இடத்தில் எகிப்து மொழி (Egyptian) ஆஃப்ரோ-ஆசிய மொழியாகக் கருதப்படும் எகிப்திய மொழி, கி.மு. 2600 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.
                                           
4 வது இடத்தில் கிரீக் (Greek) கிரேக்க தேசத்திலும் அதைச் சுற்றியுள்ல பிரதேசங்களிலும் கி.மு.1450 ஆண்டளவுகளில் கிரேக்க மொழி உருவாகியிருக்கலாம்.

5 வது இடத்தில் சீன மொழி (Chinese) சீனர்களாலும், சுற்றுப் பிரதேச மக்களாலும் பேசப்பட்டுவந்த இந்தச் சீன மொழி, கி.மு.1200 வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம்.


6 வது இடத்தில் அராமிக் மொழி (Aramaic) அரபு மொழி, எபிரேய மொழி ஆகிய இரண்டுக்கும் அடிவேராக இருந்த மொழி அராமிக் மொழியென்று சொல்கிறார்கள். இது கி.மு.1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலங்களில் உருவாகியிருக்கிறது.

7 வது இடத்தில் எபிரேய மொழி (Hebrew) இஸ்ரேலில் அங்கீகாரமுள்ள மொழியான, எபிரேய மொழி கி.மு.1000 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.

8 வது இடத்தில் கொரியன் மொழி (Korian) கொரியன் மொழி கி.மு.600 ஆண்டளவில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

9 வது இடத்தில் ஆர்மேனியன் மொழி (Armenian) இந்தோ-ஐரோப்பிய மொழியாகக் கருதப்படும் ஆர்மேனிய மொழி, கி.மு. 450 வருட அளவில் தோன்றியிருக்கலாம்.

10 வது இடத்தில் லத்தீன் மொழி (Lattin) ரோம சாம்ராஜ்ஜியத்தில், லத்தீன் மொழி பரவலாகப் பேசப்படதாகக் கருதப்படுகிறது. அது கி.மு.75 ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம்.