- Get link
- X
- Other Apps
கலிபோர்னியா: கலிபோர்னியாவில் நீர் நிலைகளில் இருக்கும் நீர் ஆவியாகி விடாமல்
இருக்க புதிய யுக்தி ஒன்று கையாளப் பட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ளது சில்மர்
நீர்த்தேக்கம். இங்குள்ள நீர் வேகமாக ஆவியாகி வருகிறது. எனவே, இதனைத் தடுக்கும்
வகையில் இந்த நீர்த்தேக்கம் முழுவதும் கறுப்பு நிற பிளாஸ்டிக் பந்துகள்
போடப்பட்டுள்ளன.
இதற்காக 9.6 கோடி கறுப்பு நிற பிளாஸ்டிக் பந்துகள் இந்த நீர்த்தேக்கத்தில்
கொட்டப்பட்டுள்ளன. இதனால், இந்த நீர்த்தேக்கத்தில் தண்ணீர் இருப்பதே வெளியில்
தெரியாத அளவிற்கு கறுப்பு பந்துகளாக காட்சியளிக்கிறது.
இவ்வாறு கறுப்பு பந்துகள் கொட்டப்பட்டிருப்பதன் மூலம் இந்த தண்ணீர் ஆவியாகாமல்
தடுக்கப் படுகிறது. மேலும், அழுக்கு, ரசாயனம் போன்றவற்றில் இருந்தும் பாதுகாக்கப்
படுகிறது.
இந்த பிளாஸ்டிக் பந்துகள் மூலம் ஓராண்டுக்கு 300 காலன் (1135 லிட்டர்) தண்ணீர்
ஆவியாவதைத் தடுக்க முடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர். அத்துடன் சூரியனில்
இருந்து வெளிவரும் புற ஊதாக்கதிர்களையும் தண்ணீருக்குள் ஊடுருவ விடாமல் இந்தப்
பந்துகள் தடுத்து விடுகின்றனவாம்.
- Get link
- X
- Other Apps