தனது ஒரே மகன் இந்தியா சென்று ஐம்பது நாட்களாகியும் இன்னும் எதுவித தகவலுமில்லாமல் அனலிடைப்பட்ட மெழுகு போல் வெந்து புலம்புகிறார் ஓர் ஏழைத்தாயார்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்திலுள்ள சொறிக்கல்முனைக் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
கணேஷ் கபிலன் எனும் 23வயது இளைஞனே இவ்விதம் காணாமல்போயுள்ளார்.
கவிதை எழுதுவதில் ஆற்றலுள்ள இவர் சினிமாவில் பாடல் எழுதுதல் துணைநடிகராக நடித்தல் போன்றவற்றுக்காக ஒரு அமைப்பினால் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது விசாரிக்கின்றபோது அப்படியொரு அமைப்பு இல்லையென்றும் தெரியவருகிறது.இந்தநிலையில் உண்மையில் என்ன நடந்தது என்று தெரியாமல் அந்த ஏழைக்குடும்பம் தினமும் செத்துக்கொண்டிருக்கிறது.
இதுபற்றி சம்மாந்துறைப் பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
“தனது மகனை எப்படியாவது தேடிக்கண்டு பிடித்தருமாறு உருக்கமான வேண்டுகோளை மன்றாட்டமாக விடுக்கின்றார்” அவர்.
தாயாரிடம் கேட்டபோது அவர் அழுதவண்ணம் இருந்தார்.எதுவுமே பேச முடியாதவாறு புலம்பிக்கொண்டிருந்தார்.எனவே வீட்டிலுள்ள ஒரேயொருவரான கபிலனின் தங்கை லக்சாயினிடம் கேட்டேன்.
இது தொடர்பில் அவரது சகோதரி கணேஷ லக்சாயினி (வயது 22 ) கவலையுடன் கூறியதாவது:எனது அண்ணா கபிலன் கல்முனை இ.கி.மி.மகாவித்தியாலயத்தில் உயர்தரம் படித்து 3சி பெற்றவர். கவிதை இலக்கியத்துறையில் கெட்டிக்காரர்.குடும்பத்திலுள்ள ஒரே ஆண் வாரிசும் அவர்தான். 2014இல் திருகோணமலையிலுள்ள தமிழ் அமைப்பு ஒன்று நடத்திய கவிதைப்போட்டியில் அண்ணா கலந்துகொண்டபோது 2ஆம் இடத்தைப்பெற்றார்.
அதன்பின்னர் 2014.02.14ஆம் திகதி அவ்வமைப்பிடமிருந்து கடிதம் வந்தது. இலங்கையிலிருந்து அண்ணா உட்பட மூவர் தெரிவுசெய்யப்பட்டிருப்பதாகவும் இவர்களது ஆற்றல் திறமைகளை மேலும் ஊக்குவிக்க இந்தியாவில் சென்னை திரைப்படக் கல்லூரியில் 03மாத காலப் பயிற்சி; 2014.03.25 – 2014. 06.25 வரை நடத்தப்படவிருப்பதாகவும் தயாராகுமாறு அதன் தலைவர் கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.
முதல் இந்தியப்பயணம், அதன்படி அண்ணா ஏனைய இருவருடன் 2014.03.24ஆம் திகதி கொழும்பு சென்று இந்தியா பயணமானார். அங்கு இந்தியாவின் 147 பேரும் இலங்கையின் 103பேருமாக மொத்தம் 150பேர் பயிற்சி பெற்றனர். இரு தினங்களுக்கொருதடவை அவர் அங்கிருந்து எம்மிடம் பேசுவார். இறுதியில் பரீட்சையில் அண்ணா மிகத்திறமையாகச்சித்திபெற்றதாக கூறினார்கள். ஆனால் ஒரு வருடத்தின் பின்னரே அதற்கான சான்றிதழ் வழங்கப்படுமெனவும் சொல்லப்பட்டது.
பின்பு அவர் இலங்கைக்குவந்து வீடுவந்தார். இங்கு வந்து கிழக்கு பல்கலைக்கழகத்தில் செக்கியூறிற்றி கார்ட்டாக சில மாதங்கள் வேலைசெய்தார். இந்த நிலையில் இவ்வருடம் 25.02.2015 இல் மீண்டும் அதே திருமலை அமைப்பிடமிருந்து ஒரு கடிதம் கிடைத்தது.
அதில் இந்தியாவில் பெற்ற பயிற்சி பரீட்சையில் திறமையாக சித்திபெற்றமையினால் அண்ணாவை சினிமாவில் புதிய படங்களுக்கு எழுதுவதற்கும் துணைநடிகராக நடிப்பதற்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் 16.05.2015 இல் திருமலை அமைப்பின் தலைவரின் அனுமதியோடு இந்தியா வருமாறும் கோரப்பட்டிருந்தது.
இரண்டாவது இந்தியப்பயணம்!
அதற்கமைய 14.05.2015இல் கொழும்புசென்று அலுவல்களை முடித்துக்கொண்டு 17ஆம் திகதி அதிகாலை 3.30க்கு இந்தியா சென்றார். அவர் கொழும்பு சென்று இந்தியா செல்லும் வரை அடிக்கடி எம்முடன் தொடர்பிலிருந்தார். பேசினார்.
இந்தியாசென்றபின்பு அவர் கோல் பண்ணவில்லை.நான் அவரது செல்லிடத்தொலைபேசிக்கு செய்திகளை அனுப்பினேன். சென்றதாக போனில் காட்டியது. ஆனால் அவரிடமிருந்து எவ்வித பதிலோ தகவலோ செய்தியோ கிடைக்கவில்லை.
ஆதலால் நாம் பயந்தோம் சம்மாந்துறைப்பொலிஸில் முறையிட்டோம். கிழக்குமாகாணசபை உறுப்பினர் மு. இராஜேஸ்வரனிடமும் தெரிவித்தோம்.அவரும் பல முயற்சிகளை எடுத்தார். திருமலை சென்று இவ்வாறான அமைப்பு தலைவர் மற்றும் கடிதம் பற்றி விசாரித்தபோது அப்படியொரு அமைப்பு அங்கில்லை எனத் தெரியவந்தது. அதையறிந்ததும் எமக்கு இன்னும் சந்தேகமும் கவலையும் பயமும் ஏற்பட்டது. இன்றோடு 50 நாட்களாகிவிட்டது. இன்னமும் ஒரு வித தகவலுமில்லை. அம்மா எந்நேரமும் அழுதுபுலம்புகிறார். கோழிவளர்த்து அதிலே வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கின்றோம்.அப்பாவுமில்லை. மிகவும் கவலையாகவுள்ளது. யாராவது எனது அண்ணாவை தேடித்தாருங்கள். என்றார் கண்ணீருடன்.
செய்தி: