பாடசாலைகளுக்கு அருகில் இயங்கிவரும் வியாபார நிலையங்கள் தொடர்பில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்!!!

போதையை ஒழித்து நாட்டை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் புனர்வாழ்வு ஆணையகம் மற்றும்  வடக்கு மாகாண இணைப்பு காரியாலயமும்  இணைந்து ஏற்பாடு செய்த போதைப்பொருள் ஒழிப்பு விமிப்புணர்வு நிகழ்வு யாழ். மத்திய கல்லூரியில் இன்று நடைபெற்றது. 
 
 
 
இதன்போது மத்திய கல்லூரி மாணவர்கள் , பெற்றோர்களும்  கலந்து கொண்டனர்.போதைப் பொருள் பாவனையினால் மாணவர்கள் மத்தியிலும் , குடும்பத்திலும்,  எதிர்காலத்திலும்  ஏற்படக்கூடிய விளைவுகள்  தொடர்பிலும் விழிப்புணர்வு நாடகமும் காண்பிக்கப்பட்டது. 
 
 
 
 
அத்துடன்  பாடசாலைகளுக்கு அருகில் இயங்கிவரும் வியாபார நிலையங்கள் தொடர்பில் விழிப்புணர்வுடன்  இருக்க வேண்டும் என்றும்  எதிர்கால தலைவர்களாக இருக்கின்ற மாணவர்கள்  போதையை ஒழித்து நாட்டைப் பாதுகாப்போம்  என்றும்  உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.