‘இன்னமும் முடிவுறாத போர்:சித்திரவதை முகாம்கள்மற்றும் அதனை புரிந்தவர்களுடைய பெயர்களை பட்டியலிட்டுள்ள புதிய அறிக்கை:-

தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக இனியவன்:-
சித்திரவதை முகாம்கள்மற்றும் அதனை புரிந்தவர்களுடைய பெயர்களை பட்டியலிட்டுள்ள புதிய அறிக்கை:-
சிறிலங்காவில்  சித்திரவதைகள், வல்லுறவுகள், சட்டவிரோத தடுத்து வைப்புபோன்ற வழிகளில் தமிழ்ச் சமூகம் மீது திட்டமிடப்பட்ட துன்புறுத்தல்கள் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்றது. 
இன்னமும் முடிவுறாத போர்: சிறிலங்காவில் சித்திரவதைகள் மற்றும் பாலியல்வன்முறைகளில் இருந்து உயிர் தப்பியோர்- 2009- 2015′ என்ற தலைப்பில்வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில்,40 ற்கும் மேற்பட்ட இரகசிய தடுப்பு நிலையங்களின் பெயர்களும் 60ற்கும் மேற்பட்ட பாலியல் குற்றவாளிகள் மற்றும் துன்புறுத்தலாளர்களின் பெயர்களும்பதிவு செய்யப்பட்டுள்ளன.
உண்மை மற்றும் நீதிக்கான அனைத்துலக திட்டம் என்ற அமைப்பினால் (ITJP) வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பெயர்கள் தவிர வேறு பல சித்திரவதை முகாம்கள் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்டுள்ள சித்திரைவதை முகாம்களில் பெரும்பாலானவை தமிழ் பேசும் வடக்கில் அமைந்துள்ளது. இவற்றில் இரண்டில் மூன்று பங்கானவை இராணுவ முகாம்களிலும் ஏனையவை பொலிஸ் நிலையங்களிலும் புனர்வாழ்வு நிலையங்களிலும் அமைந்துள்ளது. சித்திரவதை நிலையங்களாக பட்டியல் படுத்தப்பட்டுள்ள அரைவாசிக்கும் மேற்பட்ட பொலிஸ் நிலையங்கள் கொழும்பிலும் அதன் புறநகர்ப்பகுதிகளிலும் அமைந்துள்ளது.
இரகசிய முகாம்கள்
குறிப்பாக திருகோணமலை டொக்யார்ட் கடற்படைத்தளத்தில், காட்டுக்குள் உள்ளஇரகசியத் தடுப்பு முகாம், வவுனியாவில் யோசெப் முகாமின் தடுப்பு முகாம் மற்றும் கொழும்பிலுள்ள பொலிசாரின் குற்ற விசாரணைப் பிரிவு அடங்கலான 48 சித்திரவதை முகாம்கள் இந்த அறிக்கையில் பட்டியற்படுத்தப்பட்டுள்ளன. திருகோணமலையில் இரகசிய சித்திரவதை முகாம் அமைந்துள்ள இடத்தைக் குறிக்கும் வான்வழிவரைபடமும் இந்த அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளது. சித்திரவதைகளிலும் பாலியல் துன்புறுத்தல்களிலும் இருந்து உயிர்பிழைத்தவர்கள் தவிர தகவல் சேகரிப்பதற்காக பாதுகாப்பு தரப்பையும் அரச வட்டாரங்களையும் தொடர்பு கொண்டதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தரப்பில் உள்ளவர் ஒருவர் உண்மை மற்றும் நீதிக்கான அனைத்துலக திட்டம் என்ற அமைப்பிற்கு வெளிப்படுத்திய தகவல்களில் படி, யோசவ் முகாமிலிருந்து செயற்படும் இராணுவ புலனாய்வாளர்கள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் தமிழர்களை விசாரணை செய்ய காத்திருக்கின்றனர். மைத்திரிபால சனாதிபதியாக பதவியேற்ற பின்பு இது வரை எட்டு சித்திரவதை மற்றும் துன்புறுத்தல் சம்பவங்களை ITJP பதிவு செய்துள்ளது. அதில் மிக அண்மையானது ஆடி மாதம் 2015இல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜோசப்முகாமின்தளபதியாக தற்போது மேஜர் ஜெனரல்அமல் கருணசேகர மற்றும் மேஜர் ஜெனரல்களான போனிவிகா பெரேரா, சுமேதா பெரேரா, கமல் குணரத்ன மற்றும் ஜகத் ஜெயசூரிய ஆகியோர் ஜோசப்முகாமின்தளபதியாக2009 இற்குப் பின்னர் இருந்துள்ளனர். பாதுகாப்புத் தரப்பின் உள்ளிருந்து ITJP இக்கு கிடைத்த தகவலின் படி லெப்டினன்ட் ஜெனரல்கிருசாந்திடி சில்வா என்பவர் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட போராளிகள் தொடர்பான விவகாரங்களை கையாண்டுள்ளார்.
உயிர் தப்பியவர்களின் சாட்சியப் படி, கட்டளைத்தளபதி கெ.சி. வேலகெதர என்பவர் திருகோணமலையில் உள்ள இரகசிய முகாமின் கடற்படை புலானாய்வு அதிகாரியாக 2010 வரை இருந்துள்ளார். பின்னர் கட்டளைத்தளபதி ரணசிங்க என்பவர் இதற்கான பொறுப்பை ஏற்றுள்ளார்.
முன்னாள்கடற்படை ஊடகப் பேச்சாளர்தளபதி டி.கெ.பி. திசநாயக்க, தளபதி சம்பத் முனசிங்க,  ரணசிங்கஆரச்சிகே கெட்டி ஆராச்சி மற்றும் ரணசிங்க பிடிகே சுமித்ரணசிங்க போன்றோர் 28 மக்கள் காணாமல் போனதற்கு காரணமாயிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் இவர்களுக்கு வெளிநாடு செல்லத் தடையை கொழும்பு கோட்டைநீதவான் நீதிமன்றம்இந்த ஆண்டு ஏப்ரலில் பிறப்பித்தது. 
இன்னும் பல பெயர்கள் வெளிவரவுள்ளது.
சாட்சிகளின் பாதுகாப்பு கருதி எல்லா கொடுமை இழைத்தவர்களின் பெயர்களையும் இதில் தாம் வெளியிடவில்லை என குறிப்பிட்டுள்ள ITJP, இருந்தபோதும் சாட்சிகளை பாதுகாப்பதற்கான நியாயமான நீதி வழங்கல் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தும் பட்சத்தில், சாட்சிகளும் அவர்களின் குடும்பங்களும் பாதுகாக்கப்படுவர் என தாம் உறுதிப்படுத்தியவுடன் சகல பெயர்களையும் தாம் வெளியிடுவார்கள் என உண்மை மற்றும் நீதிக்கான அனைத்துலக திட்டம் என்ற அமைப்பிண் பேச்சாளர் பிரான்செஸ் ஹாரிசன் கூறியுள்ளார்.
 
சவேந்திர சில்வா
பாதுகாப்பு தரப்பின் உள்ளிருந்து தெளிவாக குறிப்பிட்ட தகவலின் படி, இறுதிக்கட்ட போரின் போது முன்னரங்க நிலைகளில் நின்றவர்களான மேஜர் ஜெனரல்சவேந்திர சில்வாமற்றும் ஏனைய இருமேஜர் ஜெனரல்கள் சரணடைந்த புலிகளை கொன்றும் அவர்களின் உடலங்களை பாலியல் ரீதியில் கேவலப்படுத்தியும் உள்ளனர். மேஜர் ஜெனரல்சவேந்திர சில்வாமற்றும் முன்னாள் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரிய ஆகியோர் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த புலித்தலைவர்களை இராணுவகாவலில் வைத்து கொன்றுள்ளனர்.
100 வெள்ளை வான் கடத்தல்கள்
இந்த அறிக்கை 180 துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் கொடுமைகள் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. கடுமையாக அடித்தல், தடுப்புக்காவல், பாலியல் பலாத்காரம், கூட்டுப் பலாத்கார பாலியல். காணாமல் போதல் மற்றும் கொலைகள் என்பன இதில் அடங்கும். வெள்ளைவான் கடத்தல்களில் உயிர் பிழைத்த 100 பேரிடம் இருந்து தாம் தகவல்கள் சேகரித்ததாக ITJP குறிப்பிட்டுள்ளது.
தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக இனியவன்:-