ராமேஸ்வரத்தில் பிறந்து விண்வெளிக்கலன் விஞ்ஞானியாக உயர்ந்த டாக்டர் அப்துல்கலாம்!!!

(1931-2015)
சென்னை: முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் மறைவு நாட்டு மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாணவர்களின் கனவு நாயகன், மக்களின் தலைவராக வாழ்ந்த மகத்தான மா மனிதரின் வாழ்க்கை வரலாற்றை இந்த தருணத்தில் அறிந்து கொள்வோம்.
1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரு இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.

kalam3
அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார்.
வறுமையான குடும்ப சூழ்நிலையால் பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.
தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள "செயின்ட் ஜோசப் கல்லூரியில்" இயற்பியல் பட்டப்படிப்பு பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை.
விண்வெளி பொறியியல்
1955 ஆம் ஆண்டு தன்னுடைய "விண்வெளி பொறியியல் படிப்பை சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார்.
ரோகினி -1
1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.  இவரது சாதனையைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான "பத்ம பூஷன்" விருது வழங்கி கௌரவித்தது.
பொக்ரான் சோதனை
இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1998ஆம் ஆண்டு நடந்த பொக்ரான்-II அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றினார்.
பேராசிரியராக கலாம்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், மைசூர் பல்கலைக்கழத்தில் வருகைப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார் அப்துல் கலாம்.
குடியரசுத் தலைவர் கலாம்
2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் "மக்களின் ஜனாதிபதி" என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். ஜனாதிபதி மாளிகையில் வாழ்ந்த போதும் மிக எளிமையான வாழ்வு வாழ்ந்தவர்.

எழுத்தாளர் அப்துல் கலாம்
நாட்டின் நலனையும், மாணவர்களின் முன்னேற்றத்தையும் மட்டுமே கண்களாகப் பாவித்து அவற்றுக்காகவே தமது வாழ்நாளை அர்ப்பணித்தவர். சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்த கலாம், அக்னிச் சிறகுகள், இந்தியா 2020, திட்டம் இந்தியா உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.
மக்களுடன் மக்களாக
2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார். ஆனாலும் கலாம் ஓய்வாக ஒரு நிமிடம் கூட அமரவில்லை. நாடுமுழுவதும் பயணம் செய்து மக்களையும், மாணவர்களையும் சந்தித்து இந்தியா வல்லரசாக வேண்டும் என்று தனது ஆசையை மக்களின் மனதில் பதியவைத்தார்.
ஒரு கோடி மாணவர்கள்
கடந்த 10 ஆண்டுகளில், நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் மேல் மாணவர்களை சந்தித்து உரையாடியுள்ளார். அறிவார்ந்த இளைஞர்கள் தங்களது நேரம், அறிவு, ஆற்றலை பயன்படுத்தி, 2020க்குள் அனைத்து துறையிலும் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும். மனதில் உறுதி இருந்தால், நீங்கள் வெற்றி அடைவீர்கள் என்பதை மாணவர்களின் உள்ளங்களில் பதியவைத்தவர் அப்துல் கலாம்.
மக்களுடன் மக்களாக
2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார். ஆனாலும் கலாம் ஓய்வாக ஒரு நிமிடம் கூட அமரவில்லை. நாடுமுழுவதும் பயணம் செய்து மக்களையும், மாணவர்களையும் சந்தித்து இந்தியா வல்லரசாக வேண்டும் என்று தனது ஆசையை மக்களின் மனதில் பதியவைத்தார்.

எழுச்சியூட்டும் பேச்சு

கடைசி நாளிலும் வெளிப்பட்ட
கலாமின் மனிதநேயம், நாட்டுப்பற்று

நன்றி: தி.நாளிதழ்