யாழ்.தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி - “அப்படியா முடியுமானால் எடுத்து பாருங்கோ”
யாழில் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எவ்.யூ.வூட்லர் எச்சரித்துள்ள போதிலும் தேர்தல் சுவரொட்டிகள் அரச பேருந்துகள் மீது ஒட்டப்படுகின்றன.
யாழ்.தலைமை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது, யாழில் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி அரச சொத்துக்கள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துக்களில் தேர்தல் சுவரொட்டிகள் ஓட்டுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தார்.