வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் இனப்படுகொலை செய்த இலங்கை அரசுக்கெதிரான அறிக்கையின் மீதான நடவடிக்கைக்கு வலிமை சேர்க்கும் நடவடிக்கையின் முதல் கட்டமாக "தமிழீழ விடுதலைக்கான மாணவர்-இளைஞர் கூட்டியக்கத்தின்"- முன்னெடுப்பில் "ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில்"அங்கம் வகிக்கும் 47 (இந்தியா உட்பட ) நாடுகளுக்கு இலங்கையை " பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் " நிறுத்த வலியுறுத்தி கோரிக்கை மனுவினை அனுப்புகின்றனர். மேலும் இந்தியாவின் அனைத்து அரசியல் கட்சிகள் , மாநில அரசுகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் தமிழர் பக்கமுள்ள நியாயங்களை இக்கோரிக்கை மனுமூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.
கால் நூற்றாண்டுகாலமாக நம் தலைவர்கள் செய்யத்தவறிய செயல்களை "மாணவப்போராளிகள்" கையில் எடுத்துள்ளனர். அவர்களின் இம்முயற்சி வெற்றிபெறட்டும்!....