நாவற்குழி அ.திருவிளையாடல்!! வசியம் செய்ய வரும் இளைஞர்களுக்கு நடப்பது என்ன? விழிப்புடன் இருங்கள் பெற்றோர்களே!!!
யாழ்ப்பாணம் நாவற்குழிப் பகுதியில் செய்வினை, வசியம் போன்றவை செய்வதில்
கில்லாடியான 35 வயதான திருமணமான பெண் ஒருவர் செய்யும் செயல் பல
குடும்பங்களைப் பிரித்து வைத்தும் சில இளைஞர்களை விசர் பிடிக்கவும்
செய்துள்ளது.
குறித்த பெண் ஊத்தைக் காளி எனப்படும்
தெய்வத்தின் மூலம் பல செய்வினைகளையும் முகவசியங்களையும் செய்துவருவதாக
அப்பகுதி மக்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.
இதற்காக துார இடங்களில் இருந்து 20 வயது தொடங்கி 35 வயது வரையான இளைஞர்கள் அங்கு வந்து போகின்றார்களாம்.
ஊத்தைக் காளிக்கு காணிக்கையாக
வெளிநாட்டுச் சாராயம் மற்றும் ஊர்ச் சேவல் போன்றவைகளும் 15 ஆயிரம் முதல்
25 ஆயிரம் வரையான காசும் கொடுத்தே செய்வினை, முகவசியம் போன்றன செய்வதாக
அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த குடும்பப் பெண்ணின் தொல்லை
தாங்காது கணவர் அவளை விட்டுப் பிரிந்து விட்டதாகவும் நள்ளிரவு வேளைகளில்
குறித்த பெண்ணின் வீட்டில் நடக்கும் சம்பவங்கள் சந்தேகங்களைத் தருவதாகவும்
இருந்தும் இது தொடர்பாக முறைப்பாடுகள் தெரிவிக்க அப்பகுதி மக்கள்
அச்சப்படுவதாகவும் தெரியவருகின்றது.
தனக்கு விரும்பிய பெண்ணை
வசியப்படுத்துவதற்கான மருந்துகள், மந்திரங்கள் போன்றவற்றுக்காக குறித்த
பெண்ணை நாடி வரும் காதலர்கள் சிலரை தன்னுடன் ஒன்றாக இருந்தாலே வசியம் வரும
எனக் கூறி குறித்த பெண் கட்டாயப்படுத்தி பாலியலுறவு கொண்டதாகவும்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓரிரு நாட்களுக்கு முன் அம்மனின்
வீட்டுக்கு அருகே அதிகாலையில் மயங்கிய நிலையில் இருந்த இளைஞன் ஒருவனை
அப்பகுதியைச் சேர்ந்த சிலர் எழுப்பிய போது அவன் கஞ்சா மயக்கத்தில்
கிடந்ததாகவும் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளனர்.
(நன்றி: நாட்டு நடப்பு இணையம்)