'தமிழ்கோ' அமைப்பின் மாபெரும் கவிதைப்போட்டி!

அவுஸ்திரேலியா, 'தமிழ்கோ' அமைப்பினால் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள கவி ஆர்வம் கொண்டோர்க்கான மாபெரும் கவிதைப்போட்டி ஒன்று நடாத்தப்படவுள்ள‌து. இந்தப்போட்டியானது வட மாகாணத்தில் உள்ள கவி ஆர்வம் மிக்கவர்களின் திறன்களை ஊக்குவித்து கௌரவிப்பதற்கும், அவர்களின் கவிதைகளை நூலாக்குவதற்குமாக நடாத்தப்படுகின்றது. மூன்று பிரிவுகளாக இப்போட்டி நடாத்தப்படும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் எட்டு இடங்களைப் பெறுவோர்க்கு பணப்பரிசில்கள் அளிக்கப்படும்.
1ம்,  2ம் பிரிவுகளுக்கு:
1ம் இடம்  பதினைந்தாயிரம் ரூபாய்
2ம் இடம்  பத்தாயிரம் ரூபாய்
3ம் இடம்  ஐயாயிரம் ரூபாய்
18 வயதிற்கு மேற்பட்ட போட்டியாளர்களுக்கு:
1ம் இடம்  இருபதாயிரம் ரூபாய்
2ம் இடம்  பதினைந்தாயிரம் ரூபாய்
3ம் இடம்  பத்தாயிரம் ரூபாய்
ஒவ்வொரு பிரிவிலும் தொடர்ந்து இடங்களைப் பெறும்   ஐந்து பேர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் வீதம் பணப்பரிசில் வழங்கப்படும். கலந்து கொள்ளும் யாவர்க்கும் சன்றிதழ் அளிக்கப்படும்.

போட்டியின் விதிமுறைகள்
1. முதலாம் பிரிவு :-தரம் 5 முதல், தரம் 09 வரையான மாணவர்கள்
2.இரண்டாம் பிரிவு :- தரம் 10 முதல் உயர்தரம் வரையான மாணவர்கள்
3. பாடசாலை மாணவர்கள் அல்லாத பதினெட்டு வயதிற்கு அதிகமான‌ யாவரும் மூன்றாம் பிரிவிலும் போட்டியில் பங்குபற்ற முடியும்.
4. போட்டியில் பங்குபற்றுவோர்கள்   பொறுப்புக் கூறக்கூடிய இறப்பர் முத்திரை உடைய, சமூக அந்தஸ்துடைய ஒருவரிடம், தமது சுயகவிதை என்பதனை உறுதிப்படுத்தும் சான்றிதழ் பெற்று, கவிதையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
5. முதலாம் பிரிவினர் 15 வரிகளுக்கு மேற்படாமலும், இரண்டாம் பிரிவினர் 25 வரிகளுக்கு மேற்ப‌டாமலும், மூன்றாம் பிரிவினர் 35 வரிகளுக்கு மேற்படாமலும் கவிதைகளை அனுப்ப முடியும். குறித்த  வரிகளைவிட‌ குறைவாக இருந்தாலும் கவிதைகள் போட்டியில் சேர்க்கப்படும். கவியின் தரம் முதன்மையாக நோக்கப்படும்.
6. கருப்பொருளுக்கு வரையறை இல்லை.
7. மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள் யாவும் ஏற்றுக்கொள்ளப்படும்.
8. கவிதைகள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 20.08.2015.
9.கவிதைகளை தபாலிலோ, நேரடியாகவோ, மின்னஞ்சலிலோ வழங்க‌ முடியும்.
10. போட்டியாளர் தமது பெயர், முகவரி, தொலைபேசி எண்(விரும்பினால் மட்டும்) என்பவற்றை தனியான தாளில் இணைத்து அனுப்ப வேண்டும். கவிதையின் தாளில் இவை எழுதப்படலாகாது.
11. படைப்புகள் யாவும், தாயகம் ,புலம் என்று குறித்த துறைகளில் பாண்டித்தியம் பெற்றவர்களைக்கொண்ட நடுவர் குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டு போட்டி முடிவுகள் ஊடகங்கள் மூலமாக அறிவிக்கப்பட்டு, மேடை நிகழ்ச்சி ஒன்றில் வெற்றியாளர்களுக்கு பரிசில்களும், நினைவுச்சின்னங்களும், பாராட்டுச்சான்றிதழ்களும் வழங்கப்படும்.
12. கவிதைகள் தட்டச்சிலோ, தெளிவான கையெழுத்திலோ அனுப்ப முடியும்.
13.போட்டியில் பங்குபற்றும் போட்டியாளர்கள் தங்களது படைப்பை, பதிப்பிக்கவோ, அன்றி வேறுஏதேனும் காட்சிப்புல வடிவத்தில் வெளிப்படுத்தும் காப்புரிமை மற்றும் வெளியீட்டு உரிமையை, 'தமிழ்கோ'விற்கு வழங்குகிறீர்கள்! (குறித்த விதிக்கு சம்மதித்தே தாங்கள் போட்டியில் கலந்துகொள்கின்றீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளவும்.)
      தபால்/நேரடி முகவரி.
     

     கவிதைப் போட்டி 2015
     கலாசார உத்தியோகத்தர்,
     பிரதேச செயலகம்,
     புதுக்குடியிருப்பு.
    
மின்னஞ்சல்: kavithaipoaddi2015@gmail.com

மேலதிக தொடர்புகளுக்கு,
யோ.புரட்சி 0775892351(இலங்கை)
க.குவேந்திரன்   +61420421004(அவுஸ்திரேலியா)


                                                                                        தகவல்: புரட்சி வெல்க,
                                                                                               WeTamizhar